Thursday, April 2, 2026
spot_img
HomeMovie Reviewயூத் சினிமா விமர்சனம்

யூத் சினிமா விமர்சனம்

Published on

படிக்கிற வயதில் படிக்காமல், காதல் மோதல் என பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிற மாணவன் ஒருவன் என்னென்ன விளைவுகளைச் சந்திக்கிறான் என்பதே ‘யூத்’தின் கதை.

மாணவனாக கென் கருணாஸ். ஸ்கூல் ஸ்டூடண்ட் கேரக்டரில் அட்டகாசமாக பொருந்தியிருக்கிறார். லட்சணமாக முகமும், சிரிப்பும் கவர்கிறது. 90 % ஜாலியாக, 10 % நெகிழ்ச்சியாக நடித்திருக்கிறார்.

விஜய் பட டைட்டிலை எடுத்துக்கொண்டு தனுஷ், சிம்பு ரெபரன்ஸ் கலந்துகட்டி படத்தை இயக்கிய விதமும் பக்கா.

கென்னுக்கு அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ் என மூன்று  ஜோடிகள். மூவருக்கும் நடிப்பில் சமமான வாய்ப்பு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அசத்துகிறார்கள்.

மனதில் பாசத்தை வைத்துக்கொண்டு பேச்சிலும் நடவடிக்கைகளிலும் டெரராக நடந்துகொள்கிற தந்தை கதாபாத்திரத்துக்கு கச்சிதமான நடிப்பால் உயிரூட்டியிருகிறார் சுராஜ் வெஞ்சாரமூடு.

இப்படி ஒரு அம்மா இருந்தால் அந்த பிள்ளை உலகமகா லக்கி என்று சொல்லலாம். அப்படியொரு அம்மாவாக தேவதர்ஷினி, கண்டிப்பும் கனிவும் கலந்த பிரின்ஸிபலாக நளினி என மற்றவர்கள் தேவைக்கேற்ப நடித்திருக்க, ஜி வி பிரகாஷ் இசையில் அப்படி திரும்பினால் ஒன்று இப்படி திரும்பினால் ஒன்று என ஏகப்பட்ட பாடல்கள் வந்துகொண்டிருக்க ‘முட்ட கலக்கி’, ‘லவ்வ சொல்லிட்டாளே’ பாடல்கள் உற்சாகம் பரப்புகின்றன. பின்னணி இசையில் பரவசம் சற்றே தூக்கல்.

விக்கியின் ஒளிப்பதிவு தரம்.

‘பள்ளிப் பருவத்தில் காதல் வரும், போகும்; அதையெல்லாம் கடந்து படிக்கிற படிப்பு மட்டுமே வாழ்க்கைக்கு பலமாக அமையும்’ என்ற மெசேஜ் சுமந்திருக்கும் இந்த படத்தின் இளமை துள்ளும் காட்சிகள் ஒவ்வொன்றும் ஜென் சி தலைமுறைக்கு வைப் மெட்டீரியல்!

இயக்குநராகவும் ஹீரோவாகவும் முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்திருக்கும் 23 வயது கென் கருணாஸுக்கு தமிழ் சினிமாவில் பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது!

Rating 3.5 / 5

Latest articles

பெண்களின் உடல்நலனை மேம்படுத்தும் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் HPV தடுப்பூசி முகாமை தொடங்கிய அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம்!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ‘ஒவ்வொரு ஆண்டும் ஒரு நல்ல செயல்’ என்ற நோக்கத்தை முன்னெடுத்து செல்லும் வகையில்,...

தென்னிந்தியாவின் முதல் பான் இந்திய இசை ஆல்பமாக உருவாகி வெளியான ‘ஹார்ட்குல்ல.’ 

https://www.youtube.com/watch?v=1TujiXsjqZs   இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையில், விகாஷ் நாகராஜ் இயக்கத்தில் வெளியான பான் இந்தியா இசை ஆல்பம் ‘ஹார்ட்குல்ல.' தென்னிந்தியாவில் சுயாதீன...

இசைஞானி இளையராஜா இசையில் சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் வழங்கும் ‘லெனின் பாண்டியன்.’

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக தரமான படைப்புகளை வழங்கி வரும் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம், மறுபடியும் ஒரு...

விஜய் சேதுபதி, ஆர்யா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் வெளியிட்ட ‘ஹே ப்ரூஸ்’ ஆல்பம் பாடல் உலகம் முழுக்க கவனம் ஈர்த்து வருகிறது!

https://www.youtube.com/watch?v=yeV6ln5cWeA ஆர்ட் டைரக்டர் டிஆர்கே கிரண் இயக்கியுள்ள மியூசிக் வீடியோ 'ஹே ப்ரூஸ்.' பாடல் யூடியூபில் வெளியாகி, குறுகிய காலத்திலேயே நல்ல...

More like this

பெண்களின் உடல்நலனை மேம்படுத்தும் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் HPV தடுப்பூசி முகாமை தொடங்கிய அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம்!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ‘ஒவ்வொரு ஆண்டும் ஒரு நல்ல செயல்’ என்ற நோக்கத்தை முன்னெடுத்து செல்லும் வகையில்,...

தென்னிந்தியாவின் முதல் பான் இந்திய இசை ஆல்பமாக உருவாகி வெளியான ‘ஹார்ட்குல்ல.’ 

https://www.youtube.com/watch?v=1TujiXsjqZs   இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையில், விகாஷ் நாகராஜ் இயக்கத்தில் வெளியான பான் இந்தியா இசை ஆல்பம் ‘ஹார்ட்குல்ல.' தென்னிந்தியாவில் சுயாதீன...

இசைஞானி இளையராஜா இசையில் சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் வழங்கும் ‘லெனின் பாண்டியன்.’

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக தரமான படைப்புகளை வழங்கி வரும் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம், மறுபடியும் ஒரு...
error: Content is protected !!