HomeCinemaதென்னிந்தியாவின் முதல் பான் இந்திய இசை ஆல்பமாக உருவாகி வெளியான ‘ஹார்ட்குல்ல.' 

தென்னிந்தியாவின் முதல் பான் இந்திய இசை ஆல்பமாக உருவாகி வெளியான ‘ஹார்ட்குல்ல.’ 

Published on

இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையில், விகாஷ் நாகராஜ் இயக்கத்தில் வெளியான பான் இந்தியா இசை ஆல்பம் ‘ஹார்ட்குல்ல.’
தென்னிந்தியாவில் சுயாதீன பாடல்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களை கவரும் துள்ளல் மற்றும் காதல் பாடலாக உருவாகியுள்ளது ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla). தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகியுள்ள இந்த இசை ஆல்பம், தென்னிந்தியாவின் முதல் பான் இந்தியா இசை ஆல்பம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான  ”நிசாரிசா” பாடலை பிரபல பாடகி சந்திரலேகா அனுபமா மறு உருவாக்கம் செய்து உருவாக்கிய வீடியோ பாடலை இயக்கிய விஹாஸ் நாகராஜ் ‘ஹார்ட்குல்ல’ இசை ஆல்பத்தை இயக்கியிருக்கிறார். ஜான்ராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சரிகமா நிறுவனம் வெளியிடும் இந்த இசை ஆல்பம் கடந்த மார்ச் 31-ம் தேதி வெளியானது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வரும் அச்சு ராஜாமணி இசையமைத்து, பாடியிருக்கும் இந்த பாடல் வரிகளை, த.வெ.க மற்றும் விஜய்க்கான அரசியல் பாடல்களை எழுதி வரும் கானா சல்லு எழுதியுள்ளார்.
‘மாலை பொழுதின் மயக்கத்திலே’. ‘கோலி சோடா 2’, ‘விழித்திரு’, ’கொலையுதிர் காலம்’, ‘மழை பிடிக்காத மனிதன்’ உள்ளிட்ட பல படங்களின் மூலம் தமிழில் பல ஹிட் மற்றும் டிரெண்டிங் பாடல்களை கொடுத்திருக்கும் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணியின் இசையமைப்பில் உருவாகியுள்ள ‘ஹார்ட்குல்ல’ இளைஞர்களின் இதயங்களை கவரும் விதத்தில் உருவாகியுள்ளது.
டீஜே அருணாச்சலம் மற்றும் விஷாகா திமன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த இசை ஆல்பத்தை பிரபாத் புரொடக்‌ஷன்ஸ் சார்பில், பிரபாத் கிராந்தி ரெட்டி தயாரித்திருக்கிறார்.

Latest articles

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் ‘டான்ஸ் டான் 2’ சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது!

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக...

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்!

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் உலகளாவிய...

More like this