HomeGeneralசென்னை - மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி - விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

Published on

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி பிலிம் புரொடக்‌ஷன்ஸ் கூட்டு முயற்சியில் உருவாகும் அதிரடி திரில்லர் திரைப்படம் சொடக்கு.
மாஸ்டர்பீஸ் நிறுவனம் வழங்கும் இப் படத்தை காமராஜ் மனோன்மணி இயக்கியுள்ளார்.
மலேசியாவில் பத்துகேவ்ஸ் ஷென்கா கன்வென்சன் சென்டரில் வருகிற ஞாற்றுக்கிழமை ஜூலை 26ம் தேதி மாலை இந்த படத்தின் ஆடியோ – டிரைலர் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. ஆடியோவை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட, டிரைலரை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிடுகிறார்.
இயக்குநர் லிங்குசாமி, படத்திற்கு வசனம் எழுதியுள்ள இயக்குநர் சரண், படத்தில் நடித்துள்ளவர்கள், சிறப்பு விருந்தினர்களாக பல டத்தோக்கள் கலந்து கொள்கிறார்கள்.
‘சொடக்கு’ போடற நேரத்துல எல்லாம் மாறிப்போச்சு.. வாழ்க்கையே தலை கீழாக ஆயிடுச்சுன்னு சொல்லுவாங்க. அப்படி ஒரு சொடக்கு போடுற நேரத்துல என்னென்ன நடந்தது என்பது தான் இக்கதை. நம்ம ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையிலும் இது நடந்திருக்கும். இக்கதை நமக்கு ரொம்ப நெருக்கமாக இருக்கும்.
தமிழ் திரைப்படமான இதன் படபிடிப்பு முழுக்க முழுக்க மலேசியாவில் எடுக்கப்பட்டது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும். ‘அமர்க்களம்’, ‘ஜெமினி’, ‘வசூல்ராஜா MBBS’
போன்ற பல ஹிட் படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் சரண், இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார். கதை, திரைக்கதை அமைத்து இயக்கி வருகிறார் இயக்குநர் காமராஜ் மனோன்மணி.
நாளை நடப்பது  இன்றைக்கே நமக்கு தெரிந்தால் எப்படி இருக்கும்?
சுவாரசியமான இந்த நிகழ்வால் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், குழப்பங்கள் என்பது இயல்பு வாழ்க்கையை எப்படி எல்லாம் புரட்டி போடுகிறது, எப்படி எதிர்கொள்வது என்பதை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் இப்படம் ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய திரைக்கதை அமைப்பாக
ஒரு திரில்லர் அனுபவத்தை கொடுக்கும்.
வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து, கதை நாயகர்களாக ரசிகர்களை தனித்தனியாக குஷி படுத்தி வரும் நாயகர்கள் நட்டி, விதார்த். இவர்கள் இணைந்து இந்த படத்தில் நடிப்பதால்,
ரசிகர்கள் எதிப்பார்ப்பு கூட்டியுள்ளது. இவர்களுடன், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா, மலேசியா ரஜினிகாந்த் டத்தோ கணேசன், அபிஷேக் சங்கர் மற்றும் பலர் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

Latest articles

வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்...

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

More like this

வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்...

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...