Tuesday, February 17, 2026
spot_img
HomeCinemaஇயக்குநர் முருகன் சார் மிகப்பெரிய உழைப்பாளி; கதை விவாதம் முதல் பாடல்கள் வரை ஒவ்வொரு விஷயத்திலும்...

இயக்குநர் முருகன் சார் மிகப்பெரிய உழைப்பாளி; கதை விவாதம் முதல் பாடல்கள் வரை ஒவ்வொரு விஷயத்திலும் சிறந்த வழிகாட்டுதல் தந்தார்! -‘LSS – லவ் சப்ஸ்கிரைப் ஷேர்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் ஆதவ் கிருஷ்ணா

Published on

இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான கமர்ஷியல் படைப்பாக ஆர் மகாலட்சுமி முருகன் இயக்கியுள்ள படம் ‘LSS – லவ் சப்ஸ்கிரைப் ஷேர்.’ வரும் பிப்ரவரி 20-ம் தேதி இந்த படம் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் பேசிய இயக்குநர் முருகன் மாகாலட்சுமி ”இந்த மேடையில் நிற்கும் போது, என்னுடைய சினிமா பயணத்திற்குத் துணையாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். குறிப்பாக கேப்டன் விஜயகாந்த், பிரேமலதா மேடம் இருவரும் தான்  இந்த நிலைக்கு நான் வர காரணமாக இருந்தவர்கள். அவர்கள் இல்லையெனில் இன்று நான் இங்கு நிற்பது சாத்தியமில்லை.

சின்ன வயதில் ஊரில் டெய்லர் வேலை பார்த்துக்கொண்டே நாடகங்கள், கதைகள் எழுதத் தொடங்கினேன். அந்த கனவுக்குத் தைரியம் கொடுத்து என்னைச் சென்னைக்கு அனுப்பிய என் தந்தைக்கு நான் என்றும் கடமைப்பட்டவன். கேப்டன் ஆபிஸிலிருந்து தான்  என் திரைப் பயணம் தொடங்கியது. வழிகாட்டி, ஊக்கம் கொடுத்த பல மூத்த கலைஞர்களுக்கும் என் நன்றி.

இந்த படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் குழு, நண்பர்கள், குறிப்பாக நாயகன் ஆதவ் கிருஷ்ணா உள்ளிட்ட அனைவரும் முழு மனதுடன் உழைத்திருக்கிறார்கள். ஒரு நண்பராகவும், ஒரு குழுவாகவும் இணைந்து வேலை செய்ததே இந்த படத்தின் பெரிய பலம். லவ்வர்ஸ் டே’யை முன்னிட்டு இந்த படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி. புதிய இயக்குநர்களுக்கும், புதிய முயற்சிகளுக்கும் ஊடகங்கள் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும். நல்ல கதைகள் மக்களிடம் சென்று சேர வேண்டும் என்பதே எங்கள் ஆசை. இந்த படத்திற்கு உங்கள் ஆதரவும், ஆசீர்வாதமும் வேண்டும். மிக்க நன்றி” என்றார்.
நாயகி சிம்ரன் அத்வானி ”அனைவருக்கும் வணக்கம். முதலில் இங்கு வந்திருக்கும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். உங்கள் ஆதரவு எங்களுக்கு மிகவும் முக்கியம். என் தயாரிப்பாளர்கள் பாலகோபி சார், ரகு சார், என் இயக்குநர் முருகன் சார், என்னுடன் பணியாற்றிய சக நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் இங்கு வந்திருக்கும் அனைத்து மூத்த கலைஞர்களுக்கும் என் நன்றி. படம் நன்றாக இருக்கிறது என்று அனைவரும் சொல்கிறார்கள். அதைக் கேட்கும் போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. என்ன சொல்வது என்று தெரியவில்லை. அனைவரும் திரையரங்குகளில் இந்த படத்தைப் பார்த்து ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி” என்றார்.
நடிகர் ஆதவ் கிருஷ்ணா ”அனைவருக்கும் வணக்கம்.இந்த விழாவிற்கு வருகை தந்துள்ள தயாரிப்பாளர்கள், மேலாளர்கள், நண்பர்கள், குடும்பத்தினர், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த படத்தில் என்னை நடிக்க வைத்த அப்பாவிற்கும் மற்றும் ரகு சார்  ஆகியோருக்கு என் முதல் நன்றி. என்னை நம்பி இந்த வாய்ப்பை கொடுத்ததால்தான் இன்று நான் இங்கு நிற்க முடிகிறது.
என் இயக்குநர் முருகன் சார் ஒரு மிகப்பெரிய உழைப்பாளி . கதை விவாதம் முதல் பாடல்கள் வரை ஒவ்வொரு விஷயத்திலும் அவர் எனக்கு மிகச் சிறந்த வழிகாட்டுதலை அளித்தார். அந்த ஆதரவு எனக்குப் பெரிய பலம். இந்த படத்தின் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் அஸ்வமித்ரா, நடன இயக்குநர், ஸ்டண்ட் மாஸ்டர், எடிட்டர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் மிக அருமையாக பணியாற்றியுள்ளனர். குறிப்பாக பாடல்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் படத்திற்குப் பெரிய பலமாக அமைந்துள்ளன. இது என் முதல் படம் என்றாலும், அனைவரின் உழைப்பும் ஆதரவும் காரணமாக ஒரு நல்ல முயற்சியாக உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு ஊடகங்களின் ஆதரவும், ரசிகர்களின் அன்பும் மிக அவசியம்.  அனைவரும் திரையரங்குகளில் இந்த படத்தைப் பார்த்து ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி” என்றார்.
நிகழ்வில் இசையமைப்பாளர் அஷ்வமித்ரா, ப்ரமோ பாடல் இசையமைப்பாளர் அகத் மகேந்திரன், இயக்குநர் சரண், தயாரிப்பாளர் கதிரேசன், மேனேஜர் யூனியன் பிரஸிடெண்ட்  ராஜேந்திரன், நடிகர் இளவரசு, நடிகர் பக்ஸ் பகவதி பெருமாள் உள்ளிட்டோரும் பேசினார்கள்.

Latest articles

தமிழ் சினிமாவின் வழக்கமான எல்லைகளைத் தாண்டிபுதிய அனுபவம் தரப்போகும் ‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

புதுமையான கதையம்சத்தில் ரொமாண்டிக் ஃபேண்டஸி படைப்பாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ்...

நெஞ்சுருக வைக்கும் காட்சிகள், மனதை வருடும் பாடல்கள், அம்மா மகன் பாசப் போராட்டம்… கனமான படைப்பாக உருவான ‘செல்லமடா நீ எனக்கு’ மார்ச் 6-ல் ரிலீஸ்!

தாயை வெறுக்கு மகன், மகனுக்காக வாழும் தாய். இந்த அடிப்படை கதைக்களத்துடன் உறவுகளையும் காதலையும் இணைத்து ஒரு உன்னதமான...

‘கிகி & கொகொ’ படத் தயாரிப்பாளர்களின் ‘கலர் பென்சில்’ ஸ்டோரை நடிகை வாணி போஜன் – மைக்செட் ஸ்ரீராம் திறந்து வைத்தனர்! கிளாம்பாக்கத்தில் உற்சாகம்.

குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாகவும் எளிமையாகவும் மாற்றும் முயற்சியாக இந்தியாவில் முதன் முறையாக ’கலர் பென்சில்’- கிட்ஸ் எக்ஸ்பிரிமெண்டல் லேர்னிங்...

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் மீண்டும் இணைந்த சிவகார்த்திகேயன்.’ உருவாகிறது ‘சேயோன்.’ வழங்கும்

சிவகார்த்திகேயன் நடிக்க, சிவகுமார் முருகேசன் இயக்க, ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் - டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் திரைப்படம்...

More like this

தமிழ் சினிமாவின் வழக்கமான எல்லைகளைத் தாண்டிபுதிய அனுபவம் தரப்போகும் ‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

புதுமையான கதையம்சத்தில் ரொமாண்டிக் ஃபேண்டஸி படைப்பாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ்...

நெஞ்சுருக வைக்கும் காட்சிகள், மனதை வருடும் பாடல்கள், அம்மா மகன் பாசப் போராட்டம்… கனமான படைப்பாக உருவான ‘செல்லமடா நீ எனக்கு’ மார்ச் 6-ல் ரிலீஸ்!

தாயை வெறுக்கு மகன், மகனுக்காக வாழும் தாய். இந்த அடிப்படை கதைக்களத்துடன் உறவுகளையும் காதலையும் இணைத்து ஒரு உன்னதமான...

‘கிகி & கொகொ’ படத் தயாரிப்பாளர்களின் ‘கலர் பென்சில்’ ஸ்டோரை நடிகை வாணி போஜன் – மைக்செட் ஸ்ரீராம் திறந்து வைத்தனர்! கிளாம்பாக்கத்தில் உற்சாகம்.

குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாகவும் எளிமையாகவும் மாற்றும் முயற்சியாக இந்தியாவில் முதன் முறையாக ’கலர் பென்சில்’- கிட்ஸ் எக்ஸ்பிரிமெண்டல் லேர்னிங்...
error: Content is protected !!