HomeCinemaராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் மீண்டும் இணைந்த சிவகார்த்திகேயன்.' உருவாகிறது 'சேயோன்.' வழங்கும்

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் மீண்டும் இணைந்த சிவகார்த்திகேயன்.’ உருவாகிறது ‘சேயோன்.’ வழங்கும்

Published on

சிவகார்த்திகேயன் நடிக்க, சிவகுமார் முருகேசன் இயக்க, ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் – டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘சேயோன்.’
துடிப்புமிக்க அதிரடியான புதிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் தோன்றும் இந்தப் படம் ஒரு கிராமியப் பின்னணியில் மிகச்சிறந்த பொழுதுபோக்குச் சித்திரமாக மலரவிருக்கிறது.
நமது மண் சார்ந்த உணர்வுகளுடன் அதிரடி காட்சிகள், அட்டகாசமான பாடல்கள் என குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் ரசிக்கும்படியான ஒரு முழுமையான ‘கமர்ஷியல் எண்டர்டெயினராக’, 2026-ஆம் ஆண்டின் மிகப்பெரிய குடும்பக் கொண்டாட்டமாக இந்த படம் அமையும்.
அனைத்து தரப்பின் பாராட்டுதலோடு, வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்த ‘அமரன்’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் மீண்டும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனத்துடன் இணைவது ஒரு முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. அனுபவமும் இளமையும் கைகோர்க்கும் இந்த வெற்றிக் கூட்டணி மாநில மொழி எல்லைகளைக் கடந்து புதிய உயரங்களை எட்டும்.
கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் சேயோன், வலிமையான கதைக்களத்தையும் ஈர்க்கக்கூடிய திரைக்காட்சிகளையும் ஒன்றிணைக்கிறது. விரைவில் வெளியாகவிருக்கும் ‘தாய்க்கிழவி’ படத்தை இயக்கிய இயக்குனர் சிவகுமார் முருகேசனின் இரண்டாவது படம் இது.
முதன்முறையாக ராஜ்கமலுடனும், சிவகார்த்திகேயனுடன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்திருப்பது இத்திரைப்படத்தின் பாடல்கள் குறித்த பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனத்தின் பாரம்பரியம் மற்றும் டர்மரிக் மீடியாவின் நவீனத்துவப் பாய்ச்சல் ஆகியவற்றுடன் உருவாகும் இந்த படம் 2026-ம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகத் திகழும்.
இப்படத்தின் இதர நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் வெளியாகும் தேதி குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில்…

Latest articles

பூஜை நிறைவு; படப்பிடிப்புக்கு தயார்… துருவ் விக்ரம் நடிக்கும் தமிழ் தெலுங்கு ஆக்சன் திரைப்படக் குழு பரபரப்பு!

துருவ் விக்ரமின் அடுத்த படமாக உருவாகிறது புதிய தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் திரைப்படம். இப்படத்தை தெலுங்கில் ‘ராட்சசன்’, ‘கில்லாடி’...

கௌதம் ராம் கார்த்திக்கின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘Bloody Politics’ படத்தின் டீசர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=mwdrLGGFT1I வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் கௌதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படமாக 'Bloody Politics' உருவாகியுள்ளது....

ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சசி, சேரன், சற்குணம், பாலசேகர் உள்ளிட்ட இயக்குநர்கள் திரண்டு வாழ்த்து… உற்சாகமாய் நடந்த தினந்தோறும் நாகராஜ் இயக்கிய ஆகாயம் படத்தின் இசை வெளியீட்டு விழா 

தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள ‘ஆகாயம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்கள்...

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘கல்லா நிக்கிறியே’ பாடல் வெளியானது!

https://www.youtube.com/watch?v=b-IJaMCIhm8 முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “கல்லா...

More like this