HomeCinemaதமிழ் சினிமாவின் வழக்கமான எல்லைகளைத் தாண்டிபுதிய அனுபவம் தரப்போகும் 'டபுள் ஆக்குபன்சி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

தமிழ் சினிமாவின் வழக்கமான எல்லைகளைத் தாண்டிபுதிய அனுபவம் தரப்போகும் ‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Published on

புதுமையான கதையம்சத்தில் ரொமாண்டிக் ஃபேண்டஸி படைப்பாக உருவாகும் ‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் இந்த படம் 2026-ல் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கியுள்ள இந்த படம், தற்போது இறுதிக்கட்ட பின்தயாரிப்பு பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறது.

காதல், கற்பனை மற்றும் அடையாளம் குறித்த சமகால சிந்தனைகளை உள்ளடக்கிய ‘டபுள் ஆக்குபன்சி’, தமிழ் சினிமாவின் வழக்கமான எல்லைகளைத் தாண்டி ஒரு புதிய அனுபவத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிவியல் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றுக்கு இடையேயான மோதல், ஒருவரை இரண்டு வெவ்வேறு வடிவங்களில் நேசிப்பதில் உள்ள வலிமிகுந்த அழகு ஆகியவற்றை மையமாக வைத்து இந்த மாயாஜால யதார்த்தக் கதை பின்னப்பட்டுள்ளது.

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மூலம் பிரபலமான சந்தோஷ், இதில் மிகவும் சவாலான முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக, ‘கட்சி செரா’ பாடல் புகழ் சாம்யுக்தா விஸ்வநாத் நடித்துள்ளார். மேலும், துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ரேஷ்மா வெங்கடேஷ் மற்றும் ‘நான் மகான் அல்ல’, ‘அந்தகாரம்’ படங்களில் தனது மிரட்டலான நடிப்பால் முத்திரை பதித்த வினோத் கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  வி.டி.வி கணேஷ், பகவதி பெருமாள் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட இயக்குநர் அஸ்வின் கந்தசாமி, தனது முதல் படத்திலேயே ஒரு அழுத்தமான முத்திரையைப் பதிக்கத் தயாராகிவிட்டார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு சந்தகுமார் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Latest articles

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

More like this