HomeGeneralமெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ் அடிக்க, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார்...

மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ் அடிக்க, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணைந்துள்ள பிரம்மாண்டமான புதிய திரைப்படம் பூஜையுடன தொடங்கியது!

Published on

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் மாஸ்டர் ஸ்டோரி டெல்லர் சுகுமார் மீண்டும் இணையும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் #RC17 # RC2Sukku திரைப்படம் இன்று தொடங்கியது. மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் மற்றும் டி-சீரிஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படத்தின் பூஜை ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் திரையுலகைச் சேர்ந்த பல முக்கியப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் மெகாஸ்டார் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கிளாப்ஸ் அடித்தார். மேலும், தில் ராஜுவுடன் இணைந்து படத்தின் திரைக்கதையைப் படக்குழுவினரிடம் வழங்கினார். டி-சீரிஸ் நிறுவனத்தின் பூஷன் குமார் கேமராவை இயக்கி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். விழாவில் பங்கேற்ற இயக்குநர்கள் முதல் காட்சியை இயக்கினர்.
ராம் சரண், சுகுமார் கூட்டணியில் இதற்கு முன்பு வெளியான ‘ரங்கஸ்தலம்’ திரைப்படம் தெலுங்கில் பெரும் வெற்றி பெற்றது. தற்போது மீண்டும் இருவரும் இணைந்துள்ளதால், இந்த புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. நடிகர் ராம் சரணை இதுவரை பார்த்திராத வித்தியாசமான தோற்றத்தில் திரையில் காட்டவுள்ளார் இயக்குநர் சுகுமார். நவீன் யெர்னேனி, ஒய். ரவிசங்கர், விஜய பிரசாத் பண்ட்ரெட்டி மற்றும் பூஷன் குமார் ஆகியோர் பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். பான் இந்தியா அளவில் மிகப்பெரிய பொழுதுபோக்குத் திரைப்படமாக இதனை உருவாக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
இப்படத்தின் அறிவிப்பு போஸ்டரில் நீலம், பச்சை மற்றும் தங்க நிறங்களின் கலவையில் அழகிய மயில் தோகை இடம்பெற்றுள்ளது. அதில் ராம் சரணின் முகம் இணைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர் வெள்ளை நிறப் பின்னணியில் தனித்துவமாகக் காட்சியளிக்கிறது.
மேலும், படக்குழு வெளியிட்டுள்ள ‘யூ கேன் இமேஜின்’ என்ற வாசகம், இந்தப் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

Latest articles

பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது பா. இரஞ்சித்தின் பிரமாண்ட அப்போகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம் ‘வேட்டுவம்.’

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில், நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ள ‘வேட்டுவம்’...

அர்ஜுன் தாஸின் சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் ‘ஜான் டோ’ நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது!!

அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படமான ‘ஜான் டோ’ வரும் நவம்பர் 13ஆம் தேதி...

ஜி.வி.பிரகாஷ் – கவுதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் மிரட்டும் திகில் ஹாரர் திரில்லர் ’13’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

'டார்லிங்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு 11 ஆண்டுகளுக்குப் பிறகு, இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் மீண்டும்...

செய் செய்யாதே சினிமா விமர்சனம்

'ரமணா' காலத்திலிருந்து இன்று வரை மருத்துவத் துறையில் நடக்கும் அநியாய அக்கிரமங்களை எடுத்துக்காட்டும் படங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. அந்த...

More like this