HomeGeneralஅர்ஜுன் தாஸின் சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் ‘ஜான் டோ’ நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது!!

அர்ஜுன் தாஸின் சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் ‘ஜான் டோ’ நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது!!

Published on

அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படமான ‘ஜான் டோ’ வரும் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை அசத்தலான ஒரு போஸ்டர் மூலம்  படக்குழு அறிவித்துள்ளது.
இந்த போஸ்டர், மர்மம் நிறைந்த கிரைம் திரில்லர் கதைக்களத்தை உணர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவப்பு மற்றும் கருப்பு வண்ணப் பின்னணியில், காவலர் சீருடையில் இருக்கும் அர்ஜுன் தாஸின் தோற்றம் மையமாக இடம்பெற்றுள்ளது. அவரைச் சுற்றிலும் பல்வேறு கதாபாத்திரங்களின் புகைப்படங்கள், மர்மமான காட்சிகள் மற்றும் விசாரணையுடன் தொடர்புடைய தடயங்களை நினைவூட்டும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, கதாபாத்திரங்களின் முகபாவனைகளும், ஒன்றோடொன்று தொடர்புடையது போன்ற புகைப்படங்களின் தொகுப்பும் படத்தின் பின்னணியில் இருக்கும் மர்ம முடிச்சுகள் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்கின்றன. ‘ஜான் டோ’ என்ற தலைப்புடன் நவம்பர் 13ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பும் இடம்பெற்றுள்ள இந்தப் போஸ்டர், படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
‘பாகுபலி’ உள்ளிட்ட பிரம்மாண்ட படைப்புகளைத் தயாரித்த அர்கா மீடியாஒர்க்ஸ் (Arka Mediaworks) நிறுவனம் சார்பில் ஷோபு யார்லகட்ட  (Shobu Yarlagadda), பிரசாத் தேவினேனி ( Prasad Devineni) ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் மதுமிதா இயக்கியுள்ளார். அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், நீரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் மதுமிதா மற்றும் நிக்கோலஸ் செவாலியர் ( Nicholas Chevaillier) இணைந்து படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளனர்.
படத்திற்கு பிரீதா ஜெயராமன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். முஜீப் மஜீத் இசையமைக்க, ஆர்டிஸ்ட் 404 (Artist 404) கூடுதல் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளது. படத்தொகுப்பை விஜய் வெங்கடரமணன் கவனித்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பாளராக அஷ்வினி காலே பணியாற்றியுள்ளார்.
“ஜான் டோ என்பவர் யார்? பாதிக்கப்பட்டவரா, கொலைகாரனா அல்லது காணாமல் போன குழந்தையா? என்பதைச் சுற்றி இப்படத்தின் கதை நகர்கிறது. சந்துரு உண்மையைத் தேடிப் பயணிக்கும்போது, ஜான் டோவைப் பற்றிய உண்மையை யாரும் எதிர்கொள்ளத் தயாராக இல்லையென்றால் என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது. பார்வையாளர்களால் எளிதில் யூகிக்க முடியாத வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.”
அர்ஜுன் தாஸ் முதன்முறையாக காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருப்பது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. போஸ்டரில் காவலர் சீருடையில் அவர் தோன்றியிருப்பதும், மர்மம் நிறைந்த கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பதும் படத்தின் கதைக்களம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.
அர்கா மீடியாஒர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு, அர்ஜுன் தாஸின் வித்தியாசமான கதாபாத்திரம், மதுமிதாவின் இயக்கம் எனப் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ‘ஜான் டோ’ திரைப்படம், நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Latest articles

மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ் அடிக்க, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணைந்துள்ள பிரம்மாண்டமான புதிய திரைப்படம் பூஜையுடன தொடங்கியது!

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் மாஸ்டர் ஸ்டோரி டெல்லர் சுகுமார் மீண்டும் இணையும் பெரிதும் எதிர்பார்க்கப்படும்...

பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது பா. இரஞ்சித்தின் பிரமாண்ட அப்போகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம் ‘வேட்டுவம்.’

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில், நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ள ‘வேட்டுவம்’...

ஜி.வி.பிரகாஷ் – கவுதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் மிரட்டும் திகில் ஹாரர் திரில்லர் ’13’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

'டார்லிங்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு 11 ஆண்டுகளுக்குப் பிறகு, இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் மீண்டும்...

செய் செய்யாதே சினிமா விமர்சனம்

'ரமணா' காலத்திலிருந்து இன்று வரை மருத்துவத் துறையில் நடக்கும் அநியாய அக்கிரமங்களை எடுத்துக்காட்டும் படங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. அந்த...

More like this