HomeGeneralபொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது பா. இரஞ்சித்தின் பிரமாண்ட அப்போகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம் 'வேட்டுவம்.'

பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது பா. இரஞ்சித்தின் பிரமாண்ட அப்போகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம் ‘வேட்டுவம்.’

Published on

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில், நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ள ‘வேட்டுவம்’ திரைப்படம், பொங்கல் 2027 பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் ‘World of Vettuvam’ வீடியோ ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியான இந்த வீடியோவிற்கு, இந்தியில் பங்கஜ் திரிபாதி, தெலுங்கில் ராணா டகுபதி, மலையாளத்தில் சௌபின் ஷாஹிர், கன்னடத்தில் கிச்சா சுதீப், தமிழில் இயக்குநர் பா. இரஞ்சித் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.
அப்போகலிப்டிக் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், வெவ்வேறு குழுக்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டிகள், மோதல்கள், எதிர்பாராத திருப்பங்கள் எனப் பல்வேறு அம்சங்களைக் கொண்ட கதைக்களத்தில் பயணிக்கிறது. பாரம்பரியத் தற்காப்புக் கலைகளான அடிமுறை மற்றும் மல்லகம்ப் உள்ளிட்ட கலைகளை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் சண்டைக் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்காகப் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் முறையான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
ஆர்யா, தினேஷ், ஷபீர், ஷோபிதா துலிபாலா, கலையரசன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் கலை இயக்குநராக எஸ்.எஸ். மூர்த்தி, ஒளிப்பதிவாளராக ரூபேஷ் ஷாஜி, படத்தொகுப்பாளராக செல்வா ஆர்.கே., இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் குமார், சண்டைப் பயிற்சி இயக்குநராக திலீப் சுப்பராயன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள பான் இந்தியத் திரைப்படமான ‘வேட்டுவம்’, பொங்கல் 2027 பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பிரம்மாண்டமான கதைக்களம், தீவிரமான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் தனித்துவமான உலகப் பின்னணியுடன் ரசிகர்களைச் சந்திக்கத் தயாராகி வருகிறது ‘வேட்டுவம்’.

Latest articles

மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ் அடிக்க, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணைந்துள்ள பிரம்மாண்டமான புதிய திரைப்படம் பூஜையுடன தொடங்கியது!

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் மாஸ்டர் ஸ்டோரி டெல்லர் சுகுமார் மீண்டும் இணையும் பெரிதும் எதிர்பார்க்கப்படும்...

அர்ஜுன் தாஸின் சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் ‘ஜான் டோ’ நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது!!

அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படமான ‘ஜான் டோ’ வரும் நவம்பர் 13ஆம் தேதி...

ஜி.வி.பிரகாஷ் – கவுதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் மிரட்டும் திகில் ஹாரர் திரில்லர் ’13’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

'டார்லிங்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு 11 ஆண்டுகளுக்குப் பிறகு, இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் மீண்டும்...

செய் செய்யாதே சினிமா விமர்சனம்

'ரமணா' காலத்திலிருந்து இன்று வரை மருத்துவத் துறையில் நடக்கும் அநியாய அக்கிரமங்களை எடுத்துக்காட்டும் படங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. அந்த...

More like this