HomeMovie Reviewசத்யவான் சாவித்திரி சினிமா விமர்சனம்

சத்யவான் சாவித்திரி சினிமா விமர்சனம்

Published on

கதைநாயகி சாவித்திரி வழக்கறிஞராக வேண்டும் என ஆசைப்பட்டு படித்து, பிரபல வழக்கறிஞர் மார்க்கண்டேயனிடம் பயிற்சி பெற்று வருகிறார். அந்த காலகட்டத்தில் அவளது கணவர் மீது கொலைப் பழி விழுகிறது. வழக்கறிஞரான சாவித்திரி நிரபராதியான தன் கணவனை மீட்கும் முயற்சியில் இறங்குகிறார்.

கணவருக்கு தண்டனை பெற்றுத்தருவதற்காக கோர்ட்டில் வாதாடுபவர் சாவித்திரிக்கு பயிற்சியளித்துக் கொண்டிருக்கும் பிரபல வழக்கறிஞர்.

இப்படி துவக்கமே சுவாரஸ்யம்தான்; பரபரப்புதான். அந்த சுவாரஸ்யமும் பரபரப்பும் உண்மையில் கொலை செய்தது யார்? கொலை செய்யப்பட்டது யார்? அவ்ருக்கும் சாவித்திரியின் கணவருக்கும் என்ன தொடர்பு? என்கிற கிளைமாக்ஸ் வரை தொடர்கிறது.

சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ். ஒரு கட்டம் வரை விளையாட்டுத்தனமாக நடந்து கொண்டு ரசிக்க வைப்பவர், கணவரை காப்பாற்றுவதற்கான முயற்சியில், தனது குருவிடமே மோதுகிற நிலை உருவானதும் கம்பீரமான உடல்மொழிக்குத் தாவுகிறார். கிளைமாக்ஸில் நெருக்கத்தில் வேறொரு பரிமாணத்தில் அடித்து ஆடுகிறார்.

எடுத்து நடத்தும் வழக்கில் இதுவரை ஒருதடவை கூட தோற்காதவராக, வழக்கில் ஜெயிப்பதற்காக எதையும் செய்யத் துணிகிற மனநிலையில் இருப்பவராக மிஷ்கினின் ஆளுமை படம் முழுக்க பரவியிருக்கிறது. கீர்த்தி சுரேஷின் கணவராக சாருகேஷி, ஹீரோ முகமும் வில்லன் முகமும் கலந்து வெளிப்பட்டிருக்கிறார். அலட்டலற்ற நடிப்பு கவனிக்க வைக்கிறது.

மற்ற முக்கிய கேரக்டர்களில் வருகிறவர்களும் துணை கதாபாத்திரங்களை ஏற்றிருப்பவர்களும் கச்சிதமான நடிப்பைத் தந்திருக்கிறார்கள். சாம் சி எஸ்ஸின் பின்னணி இசையும் அருள் வின்சென்டின் ஒளிப்பதிவும் படத்தின் பலம்.

ஒரு கொலையும் அதன் பின்னணியும் என பக்கா கிரைம் திரில்லருக்கான கதையை மேம்படுத்தி கோர்ட் ரூம் டிராமாவாக்கி, 2 1/4 மணி நேரம் சீட்டில் கட்டிப் போடுகிறார் இயக்குநர் பிரவீன் எஸ் விஜய்.

Rating 3.5 / 5

Latest articles

ஓ ம் சினிமா விமர்சனம்

தமிழக - ஆந்திரா பார்டரில் செம்மரக் கடத்தலில் ஆளுமையாக இருக்கும் பர்மா கார்த்திகேயனையும், அவருக்கு மேலிருக்கிற சர்வதேச கடத்தல்...

இயக்குநர் K.P. ஜெகன் நடிக்கும் ‘ஜெயில் மேட்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=1QkC9LEGzNw இயக்குநரும் நடிகருமான K. P. ஜெகன் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'ஜெயில் மேட்ஸ்' திரைப்படத்தில், மறைந்த...

கோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில்   ICFT-UNESCO Gandhi Medal விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட  ‘Scroll’ திரைப்படம்!

K16 Studios தயாரிப்பில் உருவாகியுள்ள ‘Scroll’ திரைப்படம், கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (57th...

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட புகழ் இர்ஃபான் ஜைனி நடிக்கும் மலேசியத் தமிழ்ப்படம் ‘இரும்புத் தோட்டம்’ ரிலீஸுக்கு தயாராகிறது!

ஏ.வி.எல்.டி புரொடக்‌ஷன் (AVLT PRODUCTION) சார்பில் ஜெகன் ஜான் பீட்டர் தயாரிப்பில் மலேசியாவில் உருவாகியுள்ள தமிழ்ப்படம் ‘இரும்புத் தோட்டம்.'...

More like this