HomeGeneralவிஜய்யின் 'ஜனநாயகன்' பட புகழ் இர்ஃபான் ஜைனி நடிக்கும் மலேசியத் தமிழ்ப்படம் 'இரும்புத் தோட்டம்' ரிலீஸுக்கு...

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட புகழ் இர்ஃபான் ஜைனி நடிக்கும் மலேசியத் தமிழ்ப்படம் ‘இரும்புத் தோட்டம்’ ரிலீஸுக்கு தயாராகிறது!

Published on

ஏ.வி.எல்.டி புரொடக்‌ஷன் (AVLT PRODUCTION) சார்பில் ஜெகன் ஜான் பீட்டர் தயாரிப்பில் மலேசியாவில் உருவாகியுள்ள தமிழ்ப்படம் ‘இரும்புத் தோட்டம்.’ புலனாய்வு க்ரைம் த்ரில்லர் ஆக உருவாகியுள்ள இப்படத்தை ஜெயதேவ் ஜெயகுமார் இயக்கியுள்ளார்.
முழுக்க முழுக்க மலேசியாவில் எடுக்கப்பட்டுள்ள இந்த தமிழ்ப்படம் விரைவில் தமிழகமெங்கும் ரிலீசாக இருக்கிறது.
‘அடுத்த கட்டம்’, ‘மைந்தன்’ படங்களைத் தொடர்ந்து தமிழகத்தில் HAVEN PICTURES   RK. கண்ணன் வெளியிடும் மூன்றாவது மலேசியத்  தமிழ்ப்படம் இது.
நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ மற்றும் ‘கோட்’ திரைப்படங்களின் மூலம் பெரும் கவனத்தைப் பெற்ற இர்ஃபான் ஜைனி இதில் கதாநாயகனாக நடிக்கிறார்.
மேலும்  லோகவர்மன் ஸ்ரீதரன், மேரி தாஷினி மேத்யூஸ், மோகன ராஜ், துர்காஷினி எஸ். வினோஷன், பாலன் காஷ், டத்தோ கீதாஞ்சலி G , கலைமாமணி கே. எஸ் மணியம், நிஷா மற்றும் விஜய்  நாயுடு உள்ளிட்ட மலேசியாவைச் சேர்ந்த நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.
மலேசியத் தேசிய ஒருமைப்பாட்டுத் துணை அமைச்சர் மாண்புமிகு துவான் யுனேஸ்வரன் ராமராஜ் இப்படத்தில் ‘துவான் தெய்வீகன்’ என்ற சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். பதவியில் இருக்கும் ஒரு துணை அமைச்சர் மலேசியத் தமிழ்த் திரைப்படத்தில் நடிப்பது இதுவே முதல் முறையாகும்.
தினேஷ் குமார் @ டி.கே ஒளிப்பதிவு செய்ய, ஷமேஷன் மணிமாறன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இயக்குநர் ஜெயதேவ் ஜெயகுமாரே படத்தொகுப்பையும் கவனித்துள்ளார்.
ஒரு மாணவியின் மர்மமான கொலை, அதைச் சுற்றி ஒரு ஆசிரியர் மேல் எழும் சந்தேகம்.. தடயவியல் டிடெக்டிவ் அதிகாரி ஒருவர் உள்ளூர் காவல்துறை அதிகாரியுடன் இணைந்து இந்த வழக்கை விசாரிக்கிறார். விசாரணையின் போக்கில் பல ரகசியங்கள் முடிச்சு முடிச்சாக அவிழ்கின்றன. உண்மையான கொலையாளி யார் எனக் கண்டுபிடிப்பதுடன் சமூகத்தின் மேலோட்டமான பிம்பத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் கசப்பான உண்மைகளைத் தேடும் நீதிக்கான பயணமே இந்த ‘இரும்புத் தோட்டம்’.
படம் குறித்து இயக்குநர் ஜெயதேவ் ஜெயகுமார் கூறும்போது, “நவீன சமூகத்திலும் கூட பேசத் தயங்கும் விஷயங்களைச் சுற்றியுள்ள மவுனத்தை உடைப்பதே ‘இரும்புத் தோட்டம்’ படத்தின் மூலம் எனது நோக்கமாக இருந்தது. குற்றப் புலனாய்வுத் திரைப்படங்களின் தீவிர ரசிகன் என்ற முறையில், இந்தக் கடினமான சமூக யதார்த்தங்களைப் பேசுவதற்குப் புலனாய்வு வகையின் விறுவிறுப்பையும் பதற்றத்தையும் ஒரு பாலமாகப் பயன்படுத்த விரும்பினேன்.
 கதாபாத்திரங்கள் மற்றும் சூழல் அனைத்தும் எனது சிறுவயது நினைவுகளிலிருந்து எடுக்கப்பட்டவை என்பதுடன், எனது சொந்த ஊரான மலாக்காவில் உள்ள டெபோங்கில் தான்  முழுப் படத்தையும் படமாக்கியுள்ளோம். சமூக விதிமுறைகள் குறித்த பார்வையாளர்களின் கண்ணோட்டத்திற்குச் சவால் விடுவது போல இப்படம் இருக்கும்” என்கிறார்.
இப்படம் விரைவில் திரைக்கு வரும் விதமாக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

Latest articles

சத்யவான் சாவித்திரி சினிமா விமர்சனம்

கதைநாயகி சாவித்திரி வழக்கறிஞராக வேண்டும் என ஆசைப்பட்டு படித்து, பிரபல வழக்கறிஞர் மார்க்கண்டேயனிடம் பயிற்சி பெற்று வருகிறார். அந்த...

ஓ ம் சினிமா விமர்சனம்

தமிழக - ஆந்திரா பார்டரில் செம்மரக் கடத்தலில் ஆளுமையாக இருக்கும் பர்மா கார்த்திகேயனையும், அவருக்கு மேலிருக்கிற சர்வதேச கடத்தல்...

இயக்குநர் K.P. ஜெகன் நடிக்கும் ‘ஜெயில் மேட்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=1QkC9LEGzNw இயக்குநரும் நடிகருமான K. P. ஜெகன் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'ஜெயில் மேட்ஸ்' திரைப்படத்தில், மறைந்த...

கோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில்   ICFT-UNESCO Gandhi Medal விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட  ‘Scroll’ திரைப்படம்!

K16 Studios தயாரிப்பில் உருவாகியுள்ள ‘Scroll’ திரைப்படம், கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (57th...

More like this

சத்யவான் சாவித்திரி சினிமா விமர்சனம்

கதைநாயகி சாவித்திரி வழக்கறிஞராக வேண்டும் என ஆசைப்பட்டு படித்து, பிரபல வழக்கறிஞர் மார்க்கண்டேயனிடம் பயிற்சி பெற்று வருகிறார். அந்த...

ஓ ம் சினிமா விமர்சனம்

தமிழக - ஆந்திரா பார்டரில் செம்மரக் கடத்தலில் ஆளுமையாக இருக்கும் பர்மா கார்த்திகேயனையும், அவருக்கு மேலிருக்கிற சர்வதேச கடத்தல்...

இயக்குநர் K.P. ஜெகன் நடிக்கும் ‘ஜெயில் மேட்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=1QkC9LEGzNw இயக்குநரும் நடிகருமான K. P. ஜெகன் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'ஜெயில் மேட்ஸ்' திரைப்படத்தில், மறைந்த...