HomeGeneralரக்பி பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசனில் பங்கேற்ற ஸ்ருதிஹாசன்... 'கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக...

ரக்பி பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசனில் பங்கேற்ற ஸ்ருதிஹாசன்… ‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’ என்று கருத்துப் பகிர்வு!

Published on

நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன், சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ரக்பி பிரீமியர் லீக் (Rugby Premier League) தொடரின் இரண்டாவது சீசனில் பங்கேற்று அந்த விளையாட்டு நிகழ்வை சிறப்பித்தார். தேசிய கீதம் – ரக்பி பிரீமியர் லீக் கீதம் மற்றும் தனது பிரபலமான சஞ்சாரி பாடல் ஆகியவற்றை அவர் மிகச் சிறப்பாக பாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார்.
இந்நிகழ்வில் நடிகை ஸ்ருதிஹாசன் பேசுகையில், ” இந்த ரக்பி பிரீமியர் லீக் தொடருக்கான நிகழ்வில் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மைதானம் முழுவதும் நிலவிய சூழல் அற்புதமாக உள்ளது.. இங்கிருந்த உற்சாகம் அனைவரையும் ஈர்க்கும் வகையிலும் இருந்தது.
ரக்பி விளையாட்டு ஆகட்டும் அல்லது நீங்கள் விரும்பும் வேறு எந்த வகையான விளையாட்டாக இருக்கட்டும்.. அதில் எப்போதும் சவால்கள் இருக்கத்தான் செய்யும். அது இயல்பான ஒன்றுதான். ஆனால் ஒன்றை நீங்கள் உண்மையாக நேசித்து, அதைத்தான் உங்கள் வாழ்க்கையில் செய்திட வேண்டும் என்று உறுதியாக நம்பும்போது… கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக மாறுகின்றன. அதே சமயத்தில் அந்த நல்ல நாட்கள் நம்மை தொடர்ந்து முன்னேறி செல்ல தூண்டுவதாகவும் அமைகின்றன.
ரக்பி பிரீமியர் லீக்கில் பங்கேற்று இந்த விளையாட்டை கொண்டாடுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். ராகுல் போஸை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். அவர் எனக்கு அழைப்பு விடுத்து இந்த சிறப்பான முன்னெடுப்பு பற்றி கூறிய போது.. குறிப்பாக இந்த ஆண்டு ரக்பி பிரீமியர் லீக்கில் பெண்கள் அணிகளும் பங்கேற்கிறார்கள் என்று சொன்னபோது.. இங்கு இருப்பது ஒரு பெரும் கௌரவம் என்பதையும் நான் உணர்ந்தேன்.
விளையாட்டு வரலாற்றில் குறிப்பாக இந்தியாவில் திறமை எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்குத் தேவைப்படுவது நிதி உதவி- அங்கீகாரம் -முறையான பயிற்சி மற்றும் உங்களை நம்பி ஆதரிக்கும் ஒரு குழு- ஆகியவை மட்டும் தான், திறமையான வீரர்களுக்கு தங்கள் கனவுகளை நனவாக்கவும்… இத்தகைய அற்புதமான மேடையில் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும்… வாய்ப்பு அளிக்கும் ரக்பி பிரீமியர் லீகின் செயல்பாடு.. உண்மையிலேயே பாராட்டத்தக்கது” என்றார்.

Latest articles

இந்த படத்தில் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளேன்; நல்ல படத்தை உருவாக்கியிருக்கிறோம் என்ற நம்பிக்கை இருக்கிறது! -சென்னையில் நடந்த எங்கள் தங்கம் பட விழாவில் நடிகை சமந்தா பேச்சு

சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'எங்கள் தங்கம்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகை சமந்தா...

மக்கள் தலைவா சினிமா விமர்சனம்

தமிழகத்தின் தேர்தல் அரசியல் எந்தளவுக்கு சீர் கெட்டுப் போயிருக்ககிறது என்பதையும், ஓட்டு போடும் மக்களிடமிருக்கும் முட்டாள்தனத்தையும் பொலிடிக்கல் சட்டயர்...

ஜூலை 17ல் வெளியாகிறது ‘அன்பே டயானா.’ அசத்தலான போஸ்டரில் அறிவித்த படக்குழு.

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேசில் கிரியேஷன்ஸ் மற்றும் இரா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படம்,...

இந்தியாவில் ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ (Spider-Man: Brand New Day) படத்திற்கான முன்பதிவு தொடக்கம்… ரசிகர்கள் பிரீமியம் பெரிய திரை வடிவங்களில் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு!

'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது! டாம் ஹாலண்ட் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம், ஜூலை 30...

More like this