Tuesday, February 17, 2026
spot_img
HomeMovie Reviewபூக்கி சினிமா விமர்சனம்

பூக்கி சினிமா விமர்சனம்

Published on

அந்த காதலர்களுக்குள் கருத்து வேறுபாடு. பிரிகிறார்கள். பிரிவு தரும் மனவலியிலிருந்து மீண்டு வர கண்டதையும் செய்கிறார்கள். மீண்டு வர முடிந்ததா இல்லையா என்பதே புதிய பரிதியின் கதை, திரைக்கதை, வசனத்தில் கணேஷ் சந்திரா இயக்கியிருக்கும் ‘பூக்கி’யின் கதையோட்டம்.

காதலர்களாக அஜய் தீஷன் – தனுஷா. காதலர்கள் எப்படியெல்லாம் கொஞ்சிக் கொள்வார்களோ அப்படியெல்லாம் கொஞ்சுகிறார்கள். எப்படியெல்லாம் சண்டை போட்டுக் கொள்வார்களோ அப்படியெல்லாம் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். பிரிவின் வலியை எப்படியெல்லாம் அனுபவிப்பார்களோ அப்படியெல்லாம் அனுபவிக்கிறார்கள். மீண்டும் சந்திக்கும்போது எப்படியெல்லாம் சங்கடப்படுவார்களோ அப்படியெல்லாம் சங்கடப்படுகிறார்கள்; அதேபோல் பரவசத்திலும் மூழ்குகிறார்கள். இருவரது நடிப்புப் பங்களிப்பும் அசத்துகிறது.

காதல் பிரிவு வேதனையிலிருந்து மீண்டுவர அஜய் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்கிற, தனுஷா ஆன்மிகத்தில் கவனம் செலுத்துகிற காட்சிகள் கலகலபுக்கு உதவுகின்றன.

இரண்டாவது கதாநாயகி ஷ்யாரா சர்மி நெகுநெகு உயரத்தில் அழகாக இருக்கிறார்; புன்னகை மிக அழகாக இருக்கிறது. சற்றே கவர்ச்சியாக தெரியும் அவரது நடிப்பு உணர்வுபூர்வமாக இருக்கிறது.

கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க ஆன்மிகத்தைப் பயன்படுத்தும் சாமியார் கேரக்டரில் தெலுங்குத் திரையுலக சுனில். கெட்டப்பும், காமெடி வில்லனாக நடிப்பும் ரசிக்க வைக்கிறது.

பாண்டியராஜன்,  இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, ஆதித்யா கதிர், பிளாக் பாண்டி, சுந்தரா டிராவல்ஸ் ராதா, பிக்பாஸ் சத்யா என மற்றவர்களும் கவனம் பெறுகிறார்கள்.

விஜய் ஆண்டனி பாடல்களுக்கான இசையை புத்துணர்ச்சியோடு தந்து பின்னணி இசையில் கதையோட்டத்துக்கு தேவையானபடி பயணித்திருக்கிறார். படத்தின் இயக்குநரே ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். காட்சிகளில் அது பிரதிபலிக்கிறது.

‘காதலில் பிரிவென்பது சுலபம்; பிரிவுவரை உண்மையாக காதலித்திருந்தால் அந்த பிரிவிலிருந்து மீண்டுவருவது சுலபமில்லை’ என்கிற, ஜென் சி தலைமுறையும் ஒத்துக்கொள்கிற விஷயத்தை அழகாக எடுத்துக் காட்டியிருக்கும் பூக்கி படக்குழுவுக்கு தாராளமாய் தூக்கிக் கொடுக்கலாம் பாராட்டுப் பூங்கொத்து!

Rating 3 /5 

Latest articles

தமிழ் சினிமாவின் வழக்கமான எல்லைகளைத் தாண்டிபுதிய அனுபவம் தரப்போகும் ‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

புதுமையான கதையம்சத்தில் ரொமாண்டிக் ஃபேண்டஸி படைப்பாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ்...

நெஞ்சுருக வைக்கும் காட்சிகள், மனதை வருடும் பாடல்கள், அம்மா மகன் பாசப் போராட்டம்… கனமான படைப்பாக உருவான ‘செல்லமடா நீ எனக்கு’ மார்ச் 6-ல் ரிலீஸ்!

தாயை வெறுக்கு மகன், மகனுக்காக வாழும் தாய். இந்த அடிப்படை கதைக்களத்துடன் உறவுகளையும் காதலையும் இணைத்து ஒரு உன்னதமான...

‘கிகி & கொகொ’ படத் தயாரிப்பாளர்களின் ‘கலர் பென்சில்’ ஸ்டோரை நடிகை வாணி போஜன் – மைக்செட் ஸ்ரீராம் திறந்து வைத்தனர்! கிளாம்பாக்கத்தில் உற்சாகம்.

குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாகவும் எளிமையாகவும் மாற்றும் முயற்சியாக இந்தியாவில் முதன் முறையாக ’கலர் பென்சில்’- கிட்ஸ் எக்ஸ்பிரிமெண்டல் லேர்னிங்...

More like this

தமிழ் சினிமாவின் வழக்கமான எல்லைகளைத் தாண்டிபுதிய அனுபவம் தரப்போகும் ‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

புதுமையான கதையம்சத்தில் ரொமாண்டிக் ஃபேண்டஸி படைப்பாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ்...

நெஞ்சுருக வைக்கும் காட்சிகள், மனதை வருடும் பாடல்கள், அம்மா மகன் பாசப் போராட்டம்… கனமான படைப்பாக உருவான ‘செல்லமடா நீ எனக்கு’ மார்ச் 6-ல் ரிலீஸ்!

தாயை வெறுக்கு மகன், மகனுக்காக வாழும் தாய். இந்த அடிப்படை கதைக்களத்துடன் உறவுகளையும் காதலையும் இணைத்து ஒரு உன்னதமான...
error: Content is protected !!