பிரேம்ஜி அமரன் நடிக்கும் புதிய படம் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகிறது. போஸ் வெங்கட், சஸ்திக், நயனா சாய் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
‘வல்லமை’, ‘நரி வேட்டை’ உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றிய சி. கணேஷ்குமார், அபிராமி புரொடக்ஷன்ஸ்’ லாவண்யா அபிராமி தயாரிக்கும் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இளம்பெண் ஒருவரை யார் கொலை செய்தார்கள், எதற்கு செய்தார்கள் என்பதை மர்ம முடிச்சுகளோடு பார்வை சொல்லும் இந்த படத்துக்கு பிரேம்ஜி இசையும் அமைக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை குறித்து பேசிய இயக்குநர் சி. கணேஷ் குமார், “தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது. இதுவரை ஏற்றிராத வேடத்தில் பிரேம்ஜி அமரன் இந்த திரைப்படத்தில் நடிக்கிறார். போஸ் வெங்கட் போன்ற அனுபவமிக்க நடிகர்களோடு பணிபுரிவது சிறந்த அனுபவமாக உள்ளது” என்றார்.
சிற்பி குமார் ஒளிப்பதிவு செய்ய இயக்குநர் சி. கணேஷ்குமாரே படத்தொகுப்பையும் கையாள்கிறார். சண்டைப் பயிற்சி: எஸ். ஆர். ஹரி முருகன்.
படம் படப்பிடிப்பின் இறுதி கட்டத்தில் உள்ளது. அனைத்து பணிகளையும் இதே வேகத்தில் முடித்து படத்தை விரைவில் வெளியிட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

