Wednesday, December 24, 2025
spot_img
HomeGeneralகள நிலவரம் சிறப்பாக உள்ளது; 224 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும்! -தி.மு.க.வில் இணைந்த கலப்பை...

கள நிலவரம் சிறப்பாக உள்ளது; 224 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும்! -தி.மு.க.வில் இணைந்த கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் 

Published on

நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளரும், கலப்பை மக்கள் இயக்க நிறுவனருமான பி டி செல்வகுமார் விடுத்துள்ள அறிக்கை:-

சினிமாத் துறையில் ஆளுமையாக இருந்து, நடிகர் விஜய் சினிமாவுக்கு வந்த காலத்தில் இருந்தே அவருடன் பயணம் செய்துள்ளேன். விஜய் மக்கள் இயக்கம் ஆரம்பித்தது தொடங்கி, இரவு பகல் பார்க்காமல் விஜய் வளர்ச்சிக்காக மட்டுமே வாழ்ந்துள்ளேன். அவரது தந்தைக்கு அடுத்த நிலையில் இருந்து பணியாற்றியவன் நான். அடுத்த கட்டங்களில் அவருடன் சேர்ந்த தவறான நட்புகளால், தந்தை, தாய்மாமன் உள்ளிட்ட குடும்ப உறவுகளையும், என் போன்றவர்களையும் புறக்கணித்து விட்டார்.

தவெக ஆரம்பித்ததும் உடன் இருந்து கஷ்டப்பட்டவர்களுக்கு முக்கிய பதவி வழங்கப்படும் என அறிவித்து விட்டு, இன்றைக்கு ஆதவ் அர்ஜூனா, ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்ட உதவாக்கரைகளை சேர்த்துள்ளார். இந்த கூட்டத்தோடு, செங்கோட்டையனும், நாஞ்சில் சம்பத்தும் இணைந்துள்ளதை பரிதாபமான செயலாக பார்க்கிறேன். மிகக்கடினமாக காலங்களில் அவருடன் இருந்தவர்களை மதிக்காமல் செயல்பட்டு வருவது வேதனையளிக்கிறது. மக்களோடு, மக்களாக இணைந்து நடிகர் விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது. நிலவு எப்படி தூரத்தில் உள்ளதோ, அதுபோல தான் விஜய்யும். நிலா 15 நாள் தெரியும். மீதி நாள்களில் மறைந்து விடும் அதுபோலத்தான் அவரும். எந்த காலத்திலும் அவரால் மக்களுடன் சேர்ந்து பயணிக்க முடியாது.

தனித்து செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில் கலப்பை மக்கள் இயக்கம் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி தென் மாவட்டங்களில் கொரோனா காலகட்டத்திலும் சரி, மழையால் மக்கள் பாதிக்கப்பட்ட போதும் சரி, தீவிரமாக களப்பணியாற்றி வருகிறேன். இது மட்டுமின்றி 50க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளுக்கு வகுப்பறைகள், கலையரங்கம், விளையாட்டு மைதானங்கள் அமைத்து கொடுத்துள்ளேன். இது மட்டுமின்றி இளைஞர்கள், பெண்களின் எதிர்காலத்துக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறேன்.

இந்த நிலையில், தமிழக மக்களின் தேவை அறிந்து செயல்பட்டு வரும் தமிழக முதல்வர் தளபதியார் அவர்கள் தலைமையில் திமுகவில் இணைகிறேன். மக்களின் தேவையறிந்து இரவு, பகல் பாராமல் மக்களுக்காக சுறு சுறுப்பாக உழைத்துக் கொண்டிருக்கிறார். இந்தியாவில் சிறந்த முதல்வர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். அவருடன் இணைந்து துணை முதல்வர் உதயநிதியும் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை செய்து வருகிறார். மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டுத் துறையிலும் தனி முத்திரை பதித்து வருகிறார். தமிழகம் முழுவதும் மக்கள் பணி ஒன்றே தாரக மந்திரமாக கொண்டு திராவிட முன்னேற்றக்கழக தோழர்கள் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதே சிந்தனையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நானும் இந்த இயக்கத்தில் சேர்ந்து உழைக்க தயராக உள்ளேன்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி தென்மாவட்டங்களில் எனது அறப்பணி சிறப்பாக தொடரும். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது என் உயிரோடும், ரத்தத்தோடும் கலந்தது. முன்பைவிட பலமடங்கு திமுகவுக்காக உழைக்க தயாராக உள்ளேன்.

2026 சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகள் இலக்கு என்றாலும், 224 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த அளவுக்கு முதல்வரின் அர்ப்பணிப்பு காரணமாக தேர்தல் களம் திமுகவுக்கு சாதகமாக உள்ளது. திமுக தோழர்களுடன் இணைந்து எனது உண்மையான பங்களிப்பை வழங்குவேன் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கலப்பை மக்கள் இயக்கத்தை சேர்ந்த மாநில துணைத்தலைவர் நந்தகுமார், பொதுச்செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் டி.எஸ்.பொன் செல்வி, கன்னியாகுமரி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் டி.பாலகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் அனிதா, மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் கௌதம் மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தைச் சேர்ந்தவர்களும், விஜய் ரசிகர்களும் திமுகவில் இணைந்தனர்.

Latest articles

பிப்ரவரி 22, 2026-ல் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்… ஜி. கே. எம்.தமிழ்க்குமரன் தலைமையிலான தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணியின் வேட்பாளர்களை கலைப்புலி எஸ்.தாணு அறிமுகப்படுத்தினார்!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க...

மனிதனின் பல்ஸ் எப்படி தொடர்ச்சியாக இருக்கிறதோ, அதேபோல் இந்த படத்தை பார்க்கும் போது பார்வையாளர்களுக்கும் இடைவிடாத பதற்றம் இருக்கும்! -பல்ஸ் படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் நவீன் கணேஷ் பேச்சு

மாஸ்டர் மகேந்திரன் நடித்திருக்கும் பல்ஸ் திரைப்படத்தின் டீஸர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் 22.12.2025 அன்று நடைபெற்றது. நிகழ்வில்...

அக்‌ஷய்குமார் உடல் எடையைக் குறைத்து, தாடி மீசை வளர்த்து கதாபாத்திரமாக மாறினார்! -‘சிறை’ படத்தின் முன் வெளியீட்டு விழாவில் சுரேஷ் ராஜகுமாரி பேச்சு

விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து...

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுப்பில் மார்கழியில் மக்களிசை டிசம்பர் 26-ம் தேதி சென்னையில் துவங்குகிறது!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுப்பில் துவங்கப்பட்ட பிரமாண்டமான இசை நிகழ்ச்சியான 'மார்கழியில் மக்களிசை' ஆறாவது ஆண்டாக...

More like this

பிப்ரவரி 22, 2026-ல் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்… ஜி. கே. எம்.தமிழ்க்குமரன் தலைமையிலான தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணியின் வேட்பாளர்களை கலைப்புலி எஸ்.தாணு அறிமுகப்படுத்தினார்!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க...

மனிதனின் பல்ஸ் எப்படி தொடர்ச்சியாக இருக்கிறதோ, அதேபோல் இந்த படத்தை பார்க்கும் போது பார்வையாளர்களுக்கும் இடைவிடாத பதற்றம் இருக்கும்! -பல்ஸ் படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் நவீன் கணேஷ் பேச்சு

மாஸ்டர் மகேந்திரன் நடித்திருக்கும் பல்ஸ் திரைப்படத்தின் டீஸர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் 22.12.2025 அன்று நடைபெற்றது. நிகழ்வில்...

அக்‌ஷய்குமார் உடல் எடையைக் குறைத்து, தாடி மீசை வளர்த்து கதாபாத்திரமாக மாறினார்! -‘சிறை’ படத்தின் முன் வெளியீட்டு விழாவில் சுரேஷ் ராஜகுமாரி பேச்சு

விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து...
error: Content is protected !!