HomeCinemaமனிதனின் பல்ஸ் எப்படி தொடர்ச்சியாக இருக்கிறதோ, அதேபோல் இந்த படத்தை பார்க்கும் போது பார்வையாளர்களுக்கும் இடைவிடாத...

மனிதனின் பல்ஸ் எப்படி தொடர்ச்சியாக இருக்கிறதோ, அதேபோல் இந்த படத்தை பார்க்கும் போது பார்வையாளர்களுக்கும் இடைவிடாத பதற்றம் இருக்கும்! -பல்ஸ் படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் நவீன் கணேஷ் பேச்சு

Published on

மாஸ்டர் மகேந்திரன் நடித்திருக்கும் பல்ஸ் திரைப்படத்தின் டீஸர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் 22.12.2025 அன்று நடைபெற்றது.

நிகழ்வில் படத்தின் இயக்குநர் நவீன் கணேஷ் பேசியபோது, “புதுமுக இயக்குனராக இருந்த என்னிடம் முழு நம்பிக்கை வைத்து, கதையின் மீது நம்பிக்கை வைத்து எந்த சமரசமும் இல்லாமல் படம் எடுக்க முழு ஆதரவு அளித்த தயாரிப்பாளருக்கு என் முதல் நன்றி. பட்ஜெட் குறித்து கவலைப்படாமல், படத்துக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தார்.

ஹாஸ்பிட்டல் கதைக்களம் என்பதால் ரியல் லொகேஷன்களில் படமாக்கினோம். அதற்கு ஏற்ற வகையில் ஆர்ட் டைரக்டர் முகமது மிக இயல்பான செட் வடிவமைப்பை செய்துள்ளார்.

கன்னட திரையுலகில் முன்னணி எடிட்டராக இருக்கும் சோம் சேகர் இந்த படத்துக்கு பணியாற்றியது எனக்கு பெரிய பலம். ஒரு த்ரில்லர் படத்துக்கு மிக முக்கியமான எடிட்டிங்கை அவர் கிரிஸ்பாகவும் வேகமாகவும் வழங்கியுள்ளார்.

ஸ்டண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வா பெயருக்கேற்ற வகையில் ஆக்சன் காட்சிகளை வடிவமைத்துள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸில் ரோப் மற்றும் டூப் இல்லாமல் மகேந்திரன் செய்த சண்டைக் காட்சி தியேட்டரில் நிச்சயம் கைத்தட்டல் பெறும்.

கதாநாயகன் மகேந்திரன் அவர் ஒரு உண்மையான ‘டைரக்டர்ஸ் ஆர்ட்டிஸ்ட்’. நான் நினைப்பதை திரையில் அப்படியே கொண்டு வருபவர். ‘ஓகே’ சொன்ன பிறகும் இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் மீண்டும் டேக் கேட்பது அவரது அர்ப்பணிப்பை காட்டுகிறது. அந்த உழைப்பே படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளது.

இது ‘பைல்ஸ்’ அல்ல, ‘பல்ஸ்’. மனிதனின் இதயத் துடிப்பு எப்படி தொடர்ச்சியாக இருக்கிறதோ, அதேபோல் இந்த படத்தை பார்க்கும் போது பார்வையாளர்களுக்கும் இடைவிடாத பதற்றம் இருக்கும். அதனால்தான் இந்த தலைப்பை தேர்வு செய்தோம்” என்றார்.

கூல் சுரேஷ் இந்த படத்தில் காமெடியைத் தாண்டி ஒரு முக்கியமான குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளதாகவும், நடிகர் சேது மற்றும் அர்ச்சனா விழாவுக்கு வந்து வாழ்த்தியதற்காக நன்றிகளையும் தெரிவித்தார்.

நடிகர் மகேந்திரன் பேசியபோது, இயக்குனர் நவீன் எனக்கு பல வருடங்களாக பழக்கம். நாங்கள் இருவரும் பல பயணங்களை பகிர்ந்த நண்பர்கள். அவர் இந்த கதையை சொல்லும்போது, நான் முதலில் ஒரு நடிகராக இல்லாமல் ஒரு நண்பராகவே கேட்டேன். ஆனால் கதையை கேட்க கேட்க அதன் மீது இருந்த ஆர்வம் அதிகரித்தது,” என்று மகேந்திரன் தெரிவித்தார்.

படத்தின் ஹாஸ்பிட்டல் பின்னணி குறித்து பேசுகையில்,
“ஒரு ரியல் ஹாஸ்பிட்டல் போலவே தோன்ற வேண்டும், அதே நேரத்தில் ஷூட்டிங்கிற்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். அந்த சவாலான பணியை ஆர்ட் டைரக்டர் முகமது மிக நேர்த்தியாக செய்துள்ளார்” என்றார்.

Latest articles

இந்தக் குழுவுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும்! -இதயம் முரளி படத்தின் வெற்றி விழாவில் விருப்பம் தெரிவித்த நடிகை கயாது லோகர் 

அதர்வா நடிக்க, ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கிய 'இதயம் முரளி' திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொள்ள...

‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ்!

இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம்...

மூன்றாம் முறை தேசிய விருது… ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு பாடகர் வேல்முருகன் காசு மாலையுடன் பாராட்டு!

நேற்று (19 ஜூலை 2026) அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில்  ஜி.வி. பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு...

46 ஆண்டுகால திரைப்பயணத்தில் மேலும் ஒரு மகுடம் சூட்டிய ‘அமரன்’ – 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது!

இந்திய திரையுலகில் நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தனது தனித்துவமான கலைப் பார்வையால் அழியாத...

More like this