விஜய் ஆண்டனி நடிக்கும் ‘லாயர்’ திரைப்படத்தை ‘ஜென்டில்வுமன்’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்குகிறார்.
நீதிமன்ற பின்னணியில் ஒரு வித்தியாசமான வழக்கை மையமாக வைத்து, இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன்.
இதுவரை திரையில் காட்டியிராத, நீதிமன்றத்தையும், அதன் நடைமுறைகளையும், தத்ரூபமாகத் திரையில் பிரதிபலிக்கும் விதமாக இந்த படம் உருவாகிறது.
விஜய் ஆண்டனிக்கு இணையான எதிர் கதாபாத்திரத்தில், இந்தியளவில் புகழ் பெற்ற ஒரு நடிகை நடிக்கிறார்.
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் தெரியவரும்.