HomeGeneralஈகோ ராமன் சினிமா விமர்சனம்

ஈகோ ராமன் சினிமா விமர்சனம்

Published on

‘மனிதனிடம் இருக்கக்கூடாதது ஈகோ’ என்பதை வலியுறுத்தும் சிறு முதலீட்டுப் படைப்பு.

ராமன் பயங்கர ஈகோ பிடித்த தலைமையாசிரியர் . சக மனிதர்களிடம் சாதிப் பாகுபாடு பார்த்துப் பழகுபவர். அவரை மிஞ்சும் விதமாக யார் எது செய்தாலும் அவரால் பொறுத்துக் கொள்ள முடியாது. அப்படியிருக்க, அவரிடம் படித்த மாணவன் ஒருவன் அவர் வைத்திருப்பதைப் போலவே பைக் வாங்குகிறான்; அவருக்கே உயரதிகாரியாகிறான். அதையெல்லாம்விட அவருக்கு அதிக அதிர்ச்சி தருகிற ஒரு விஷயத்தையும் செய்கிறான். இப்படியொரு பரபரப்பான கதையில் ராமன் தன் ஈகோவை எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறார், அதன் விளைவுகள் என்ன என்பது மீதிக் கதை…

ஈகோ ராமனான வருகிற ரோபோசங்கர் எந்த நேரமும் ஈகோ தலைக்கேறி, பொறாமையால் மூளை சூடாகி, கோபம் கொப்பளிக்க சுற்றிச் சுற்றி வருகிறார். வசனங்கள் குறைவென்பதால் முகத்தை கோணல்மானலாக்கி, கைகளைப் பிசைந்து, பல்லைக் கடித்து உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்துகிறார்.

அவரிடம் படித்து, வறுமைச் சூழலில் தவித்தபடி அரசுப் பணிக்கான தேர்வெழுதி, அவருக்கே உயரதிகாரியாக வருகிற கெத்தான ரோலில் சிபி புவன சந்திரன். ஹீரோயிஸத்துக்கு வாய்ப்பில்லாத கேரக்டர். தன்மையான மனிதனாக, வலிகளைத் தாங்குகிற மனதுள்ளவனாக, அம்மாவை உயிருக்குயிராக நேசிக்கிறவனாக எளிமையான நடிப்பால் கவர்கிறார். தன்னை எதிரியாக நினைக்கும் ஆசிரியரின் மனதைக் குளிர்வித்து, வாழ்க்கைப் பாடம் கற்றுக் கொடுக்கும் அளவுக்கு நடந்து கொள்வது அவரது கதாபாத்திரத்தின் மதிப்பை உயர்த்துகிறது.

ஹீரோ சிபியை காதலிக்கும் சிம்பிளான வேலையை ஏற்று அதை சிரித்த முகத்துடன் செய்து முடித்திருக்கிறார் கீர்த்தனா. சிபியின் அம்மா பாசத்தால் மகனையும் கலங்கடிக்கும் நடிப்பால் நம்மையும் கட்டிப் போடுகிறார் கவிதா ரமேஷ். மற்ற நடிகர் நடிகைகளின் பங்களிப்பு நிறைவு.

பின்னணி இசையை கதையோட்டத்தின் தேவைக்கேற்ப தந்திருக்கும் ரெய்மன் ராட்ரிக்ஸ், பாடல்களின் இசையில் இரைச்சலைக் குறைத்திருந்தால் செவிகள் குளிர்ந்திருக்கும். ஜினோ பாபுவின் கேமரா கோவை மாவட்ட சுற்றுவட்ட கிராமங்களில் பாய்ந்து காட்சிகளை மெருகேற்றியிருக்கிறது.

மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர் ஒருவர் தவறான முன்னுதாரணமாக நடந்துகொள்ள, அவரிடம் பாடம் கற்றவன் அவரது அறிவுக் கண்ணை திறக்கும் எளிமையான கதைக்கு விறுவிறுப்பும் பரபரப்பும் கலந்த திரைக்கதையமைத்து, படத்தை உலகம் கடைப்பிடிக்க வேண்டிய பாடமாக்கியிருக்கிறார் இயக்குநர் கணேசன் நாச்சிமுத்து.

Rating 3.5 / 5

Latest articles

பூஜை நிறைவு; படப்பிடிப்புக்கு தயார்… துருவ் விக்ரம் நடிக்கும் தமிழ் தெலுங்கு ஆக்சன் திரைப்படக் குழு பரபரப்பு!

துருவ் விக்ரமின் அடுத்த படமாக உருவாகிறது புதிய தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் திரைப்படம். இப்படத்தை தெலுங்கில் ‘ராட்சசன்’, ‘கில்லாடி’...

கௌதம் ராம் கார்த்திக்கின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘Bloody Politics’ படத்தின் டீசர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=mwdrLGGFT1I வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் கௌதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படமாக 'Bloody Politics' உருவாகியுள்ளது....

ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சசி, சேரன், சற்குணம், பாலசேகர் உள்ளிட்ட இயக்குநர்கள் திரண்டு வாழ்த்து… உற்சாகமாய் நடந்த தினந்தோறும் நாகராஜ் இயக்கிய ஆகாயம் படத்தின் இசை வெளியீட்டு விழா 

தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள ‘ஆகாயம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்கள்...

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘கல்லா நிக்கிறியே’ பாடல் வெளியானது!

https://www.youtube.com/watch?v=b-IJaMCIhm8 முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “கல்லா...

More like this