HomeGeneralஜீவி பிரகாஷ் நடித்துள்ள 'வெக்கை' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ஜீவி பிரகாஷ் நடித்துள்ள ‘வெக்கை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

Published on

ஜீவி பிரகாஷ் நடித்துள்ள ‘வெக்கை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ், டிவைன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படத்தை இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீண்டகால இணை இயக்குநர் அகிரன் மோசஸ் தன் முதல் படமாக இயக்குகிறார்.

வித்தியாசமான கிராஃபிக் அணுகுமுறையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், சென்னை நகரின் பரபரப்பான சாலையின் நடுவே ஜீவி பிரகாஷ் மற்றும் ஸ்ரீநாத் பாஸி நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் காட்சி இடம்பெற்றுள்ளது.

அன்றாட வாழ்க்கையில் நாம் சாதாரணமாகக் கடந்து செல்லும் ஒரு சாலைத் தகராறை மையப்படுத்தியுள்ள இந்த போஸ்டர், படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நகரின் பின்னணியில் நடைபெறும் இந்தக் கதையில் ஜீவி பிரகாஷ் துடிப்பும் வேகமும் நிறைந்த இளைஞராக நடித்துள்ளார். மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாஸி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஷிவானி ராஜசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார். சுனில், மைம் கோபி, லிங்கேஷ், லிசா சின்னு, லட்சுமி பிரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

படம் பற்றி பேசிய இயக்குநர் ”ஒரு கண நேர கோபம் எத்தனை வாழ்க்கைகளை மாற்றுகிறது என்பதைக் கூறும் ஆக்ஷன் த்ரில்லர்தான் வெக்கை.

அன்றாட வாழ்வில் சாதாரணமாக தோன்றும் சாலைத் தகராறுகளின் பின்னால் மறைந்திருக்கும் அகங்காரம், ஆத்திரம் மற்றும் அதன் எதிர்பாராத விளைவுகளே இந்த படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது.

பரபரப்பான கதையோட்டத்துடன் மனிதர்களின் அகச்சிக்கல்கள் மற்றும் உணர்வுகளை பின்னணியாகக் கொண்டு, காதல், நகைச்சுவை, குடும்ப உறவுகள் மற்றும் அதிரடி அம்சங்கள் கலந்த முழுமையான ஆக்ஷன் த்ரில்லர் கமர்ஷியல் என்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளது” என்றார்.

Latest articles

பூஜை நிறைவு; படப்பிடிப்புக்கு தயார்… துருவ் விக்ரம் நடிக்கும் தமிழ் தெலுங்கு ஆக்சன் திரைப்படக் குழு பரபரப்பு!

துருவ் விக்ரமின் அடுத்த படமாக உருவாகிறது புதிய தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் திரைப்படம். இப்படத்தை தெலுங்கில் ‘ராட்சசன்’, ‘கில்லாடி’...

கௌதம் ராம் கார்த்திக்கின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘Bloody Politics’ படத்தின் டீசர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=mwdrLGGFT1I வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் கௌதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படமாக 'Bloody Politics' உருவாகியுள்ளது....

ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சசி, சேரன், சற்குணம், பாலசேகர் உள்ளிட்ட இயக்குநர்கள் திரண்டு வாழ்த்து… உற்சாகமாய் நடந்த தினந்தோறும் நாகராஜ் இயக்கிய ஆகாயம் படத்தின் இசை வெளியீட்டு விழா 

தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள ‘ஆகாயம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்கள்...

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘கல்லா நிக்கிறியே’ பாடல் வெளியானது!

https://www.youtube.com/watch?v=b-IJaMCIhm8 முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “கல்லா...

More like this