HomeGeneralபாடகி தீ - அமெரிக்க பாப் இசை கலைஞர் லாரா ராஜ் ஆஃப் KATSEYE இணைந்து...

பாடகி தீ – அமெரிக்க பாப் இசை கலைஞர் லாரா ராஜ் ஆஃப் KATSEYE இணைந்து பாடிய ‘வாரி வாரி – VARI VARI’ பாடலின் ரீமிக்ஸ் வெளியீடு!

Published on

சுயாதீன இசையின் மூலம் சர்வதேச அளவில் இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த தமிழ் பாடகி தீ.. அமெரிக்க பாப் இசை கலைஞரான லாரா ராஜ் ஆஃப் KATSEYE உடன் இணைந்து ‘வாரி வாரி – VARI VARI’ எனும் பாடலின் ரீமிக்ஸ் வடிவத்தை வெளியிட்டுள்ளனர்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து தயாரித்து, படலாசிரியர் விவேக் வரிகளில், பாடகி தீ குரலில் ஒலித்த ‘வாரி வாரி’ எனும் தமிழ் இண்டி பாடல் அண்மையில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தொடர்ந்து இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த தருணத்தில் அமெரிக்க பாப் இசை பாடகியான லாரா ராஜ் ஆஃப் KATSEYE உடன் இணைந்து ‘வாரி வாரி – VARI VARI’ எனும் பாடலின் ரீமிக்ஸை பாடி வெளியிட்டுள்ளனர். இந்த பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார், 808 கிருஷ்ணா இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். சர்வதேச இசைக் கலைஞர்களான தீ மற்றும் லாரா ராஜ் ஆகியோரின் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்த ரீமிக்ஸ் பாடல் – கலாச்சார பரிமாற்றத்தின் அடையாளமாக திகழ்ந்து, இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
பாடகி தீ – லாரா ராஜ் குரலில் ஒலிக்கும் இந்த பாடல் – தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இரு பெண் கலைஞர்களின் சர்வதேச இசைக் கூட்டணியில் உருவாகி, உலகளாவிய இசை ரசிகர்களின் விருப்பத்திற்குரிய பாடல் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.

Latest articles

காதலில் ஆரம்பித்து, சண்டையில் சிக்கி, காமெடியில் கலக்கும் விமல் – ஸ்ரேயா கூட்டணியின் அதிரடி ரோம் – காம் ‘சண்டக்காரி.’

‘த்ரிஷ்யம்’ இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில் உருவாகியுள்ள நகைச்சுவை கலந்த ரொமான்டிக் காமெடி குடும்பத் திரைப்படம் ‘சண்டக்காரி’. பிரபல...

4 இடியட்ஸ் சினிமா விமர்சனம்

கோடிக்கணக்கான பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பங்களா. பணத்தைக் களவாட சென்ற நான்கு இளைஞர்கள். அவர்களை கொல்ல துப்பாக்கியுடன்...

ரசிகர்களை சிந்திக்கவும், சிரிக்கவும் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் மேடையேறும் ‘விக்கல்ஸ் ஆஃப் விக்ரம்.’

மேடை உலகில் ஸ்டாண்ட் அப் காமெடி செய்து ரசிகர்களை புன்னகை புரிய வைப்பதுடன் பிரச்சனைகளை புதிய கோணத்தில் பார்க்கலாமே..!...

அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்பில் நடந்த கட்டாகுஸ்தி திரைப்படத்தின் 50-வது நாள் வெற்றிக் கொண்டாட்டம்!

விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், செல்லா அய்யாவு இயக்கிய ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் வெளியாகி...

More like this