கோடிக்கணக்கான பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பங்களா. பணத்தைக் களவாட சென்ற நான்கு இளைஞர்கள். அவர்களை கொல்ல துப்பாக்கியுடன் தயாராகும் காட்டுத்தனமான செக்யூரிடி.
அங்கிருந்து தப்பிக்கப் போராடும் நான்கு பேரின் நிலைமை என்னவாகிறது என்பது சீரியஸாகவும் சிரிப்பு கலந்தும் பரிமாறப்பட்டுள்ளது.
பங்களா யாருடையது? அங்கே பதுக்கப்பட்டுள்ள பணத்தின் பின்னணி என்ன? என்பதெல்லாம் திரைக்கதை…
களவாணிகளாக வருகிற புகழ், கும்கி அஸ்வின், திடியன், இந்திரன் கூட்டணி உயிருக்கு ஆபத்தான சூழலில் பயம் பதட்டத்தை சரியான விகிதத்தில் காண்பித்திருக்க,
டெரர் செக்யூரிட்டியாக ரவி மரியா தன் வழக்கமான ஸ்டைலில் காமெடி வில்லனாக கவர்கிறார். மெயின் வில்லனாக உறுப்பு கடத்தல் மாபியாவாக அலட்டல் அதிகமில்லாத வின்செண்ட் அசோகனின் வில்லத்தனம் கவர்கிறது.
பிரக்யா நயனுக்கு இயல்பாக நடித்தால் போதும் என்பது போன்ற மிகச்சில சீன்கள். அதில் எளிமையான நடிப்பும் உடற்கட்டின் கவர்ச்சியும் பின்னிப் பிணைந்திருக்கிறது.
சம்பவங்களில் பெரும்பகுதி ஒரே பங்களாவில் நடக்கிறது. அதற்கேற்றபடி கேமராவை கையாண்டிருக்கிறார் யூ கே செந்தில்குமார்.
சுபாஷ் முனிரத்னத்தின் பின்னணி இசை நகைச்சுவைக் காட்சிகளுக்கு ஒரு விதமாகவும் திக்திக் உணர்வைக் கூட்டும் காட்சிகளுக்கு வேறு விதமாகவும் கலந்திருக்கிறது.
சுவாரஸ்யமான கதையையம் மிகச்சில நடிகர்களையும் வைத்துக் கொண்டு சுந்தர் சி ஸ்டைலில் திரைக்கதையமைத்து கலகலப்பு விருந்து படைத்திருக்கிறார் இயக்குநர் சஜோ சுந்தர்.
Rating 3 / 5 

