HomeGeneralரசிகர்களை சிந்திக்கவும், சிரிக்கவும் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் மேடையேறும் 'விக்கல்ஸ் ஆஃப் விக்ரம்.'

ரசிகர்களை சிந்திக்கவும், சிரிக்கவும் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் மேடையேறும் ‘விக்கல்ஸ் ஆஃப் விக்ரம்.’

Published on

மேடை உலகில் ஸ்டாண்ட் அப் காமெடி செய்து ரசிகர்களை புன்னகை புரிய வைப்பதுடன் பிரச்சனைகளை புதிய கோணத்தில் பார்க்கலாமே..! என்ற எண்ணத்தை விதைக்கும் நவரச பேச்சு நாயகன் ‘விக்கல்ஸ் ஆப் விக்ரம்’ – திரைப்படத்தில் நாயகனாக நடித்து தன் பங்களிப்பை நிறைவு செய்தவுடன்… மீண்டும் புதிய விசயங்களுடன் மேடை ஏறி, ‘விக்கல்ஸ் ஆஃப் விக்ரம்’ ஸ்டாண்ட் அப் காமெடியை நிகழ்ச்சியை தொடர்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
பட்டிமன்றம்- பேச்சரங்கம்- கருத்தரங்கம்- என தமிழ் மொழியில்.. விளிம்பு நிலை மக்கள் முதல் மேட்டுக்குடி மக்கள் வரை தினசரி சந்திக்கும் சமூகம் சார்ந்த சிக்கல்களை தனக்கே உரிய அவல நகைச்சுவை பாணியில் சரளமாக உரையாடி வருகை தந்திருக்கும் பார்வையாளர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பதில் விக்கல்ஸ் விக்ரம் இன்று வரை தனித்துவ பாணியை கடைப்பிடித்து வருகிறார்.
இவர் தற்போது அறிமுக இயக்குநர் கே. சி .குரு இயக்கத்தில் உருவான ‘லைட் வெயிட் பேபி’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்தின் பணிகளை முழுமையாக நிறைவு செய்தவுடன் மீண்டும் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளை நடத்த மேடைக்கு திரும்பி இருக்கிறார்.
இவருடைய ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியின் தனித்துவம் என்பது காதல்- குடும்பம்- உறவுகள்- சினிமா- பாலியல்- கல்வி- திருமணம் -சாதி- பெண்ணியம்- என இன்றைய சமூகத்தில் மக்களிடையே எதிர்மறையாக ஆக்கிரமித்து இருக்கும் எண்ணங்களை மறுபரிசீலனை செய்யும் வகையில் இவருடைய நகைச்சுவை கலந்த பேச்சு இருக்கும்.
இவருடைய பேச்சில் அறிவுரை இருக்காது. பரிந்துரை இருக்காது. ஆனால் எது சரி எது தவறு என்பதை பார்வையாளர்களே யூகித்து முடிவெடுத்துக் கொள்ளும் வகையில் புத்திசாலித்தனமும், நகைச்சுவையும் இருக்கும். இதன் காரணமாகவே இவருடைய நிகழ்ச்சிகளுக்கு அரங்கம் நிறைந்த பார்வையாளர்களின் வருகை தொடர்கிறது.
திரைப்படத்தில் கதையின் நாயகனாக தன் பங்களிப்பை நிறைவு செய்திருக்கும் விக்கல்ஸ் விக்ரம்-  தற்போது தன்னுடைய அடுத்த திட்டமான ‘விக்கல்ஸ் ஆஃப் விக்ரம்’ நிகழ்ச்சியை பல சர்வதேச நாடுகளில் நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
ஸ்டாண்ட் அப் காமெடி என்பது பார்வையாளர்கள் சிரிப்பதற்கு மட்டுமல்ல… நம்முடைய எண்ணங்களில் உற்சாகமான புத்தாக்கம் ஏற்பட வேண்டும் என்பதாக இருப்பதால்… இவருக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரிக்கும். அத்துடன் இவர் இந்த சமூகத்துடனான தன்னுடைய எதிர்வினையை தொடர்ந்து சுய பரிசோதனை செய்து கொண்டு, அதனை  நகைச்சுவையுடன் வெளிப்படுத்துவதால்.. இவரின் மேடை பேச்சை ரசித்து கொண்டே இருக்கலாம்.

Latest articles

அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்பில் நடந்த கட்டாகுஸ்தி திரைப்படத்தின் 50-வது நாள் வெற்றிக் கொண்டாட்டம்!

விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், செல்லா அய்யாவு இயக்கிய ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் வெளியாகி...

கமல்ஹாசன் – எஸ்.யு.அருண் குமார் கூட்டணிக்கு அமோக வரவேற்பு; ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் வைரல்!

கமல்ஹாசன், தனது புதிய திரைப்படத்திற்கான 'லுக் டெஸ்ட்' காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் மீண்டும் ஒருமுறை பெரும்...

தமிழ்நாட்டின் அரிய பல்லுயிர் சூழலை வெள்ளித்திரைக்குக் கொண்டுவரும் வனவிலங்கு ஆவணப்படம் ‘வைல்ட் தமிழ்நாடு’ பிவிஆர் திரையரங்குகளில் வெளியாகிறது!

‘நான்கு ஆண்டுகால உழைப்பில் உருவான ‘வைல்ட் தமிழ்நாடு’ ஆவணப்படம், தமிழ்நாட்டின் இயற்கை அழகையும் வனவிலங்குகளையும் பார்க்கும் ஆழ்ந்த அனுபவத்தை...

இம்மார்ட்டல் சினிமா விமர்சனம்

வாம்பயர், மான்ஸ்டர் என உலவ விட்டு ரசிகர்களை பயத்திற்குள் தள்ளுகிற ஹாலிவுட் பாணியிலான படம். ஒரு அழகான இளம்பெண், ஸ்டார்...

More like this