Tuesday, February 17, 2026
spot_img
HomeCinemaவிஜய் இயக்கியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படத்தின் டீசர்  நேற்று வெளியானது.

விஜய் இயக்கியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படத்தின் டீசர்  நேற்று வெளியானது.

Published on

விஜய் இயக்கியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படத்தின் டீசர்  நேற்று வெளியானது.
முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் முன்னதாக வெளியிட்ட பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், புதுமையான காதல் கதையைச் சொல்லும்  இப்படத்தின் டீசர், சமூக வலைத்தளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது.
https://www.youtube.com/watch?v=MntwVt7nJg4
ஒரு அழகான காதல் கதையாகத் தொடங்கும் டீசர், ‘ரீசெட்’ – ‘ரிபீட்’ என்ற தலைப்புக்கேற்றவாறு, எதிர்பாராத திருப்பங்கள், உணர்ச்சி பூர்வமான காட்சிகள் மற்றும் புதுமையான கதை சொல்லல் பாணியுடன் பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இது ஒரு சாதாரண காதல் கதை அல்ல, எந்த மாதிரியான காதல் கதை என்பதே புரியாத வகையில் பல ஆச்சரியங்களைத் தரும் படமாக ‘காதல் ரீசெட் ரிபீட்’ இருக்கும் என்பதை டீசர் உறுதி செய்கிறது.
படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர் ஜோடியோடு மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களோடு எம்.எஸ். பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். குறிப்பாக, பல புதுமுக திறமைகளைத் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி வரும் இயக்குநர் விஜய், இத்திரைப்படத்தின் மூலம் மதும்கேஷ் – ஜியா சங்கர் ஜோடியை அறிமுகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
டீசர் தற்போது இணையம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படத்தைத் திரையரங்குகளுக்குக் கொண்டு வரும் பணிகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
படம் மார்ச் 6  அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழகமெங்கும் Romeo Pictures நிறுவனம் வெளியிடுகிறது. விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் டிடிரைலர் குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் காதலும் உணர்ச்சியும் கலந்த இசை ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா காட்சிகளுக்கு அழகிய காட்சித் தன்மையை வழங்கியிருக்கிறார், ஆண்டனி படத்தொகுப்பை மேற்கொண்டிருக்க, கலை இயக்கத்தை சரவணன் வசந்த், சண்டை இயக்கத்தை மனோகர் வர்மா, உடை வடிவமைப்பை ருச்சி முனோத் கவனித்துள்ளனர். பாடல் வரிகளை வைரமுத்து, கார்கி, ஆர்கஸ் ஆர்யன் ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்தின் இசை உரிமையை T Series நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Latest articles

தமிழ் சினிமாவின் வழக்கமான எல்லைகளைத் தாண்டிபுதிய அனுபவம் தரப்போகும் ‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

புதுமையான கதையம்சத்தில் ரொமாண்டிக் ஃபேண்டஸி படைப்பாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ்...

நெஞ்சுருக வைக்கும் காட்சிகள், மனதை வருடும் பாடல்கள், அம்மா மகன் பாசப் போராட்டம்… கனமான படைப்பாக உருவான ‘செல்லமடா நீ எனக்கு’ மார்ச் 6-ல் ரிலீஸ்!

தாயை வெறுக்கு மகன், மகனுக்காக வாழும் தாய். இந்த அடிப்படை கதைக்களத்துடன் உறவுகளையும் காதலையும் இணைத்து ஒரு உன்னதமான...

‘கிகி & கொகொ’ படத் தயாரிப்பாளர்களின் ‘கலர் பென்சில்’ ஸ்டோரை நடிகை வாணி போஜன் – மைக்செட் ஸ்ரீராம் திறந்து வைத்தனர்! கிளாம்பாக்கத்தில் உற்சாகம்.

குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாகவும் எளிமையாகவும் மாற்றும் முயற்சியாக இந்தியாவில் முதன் முறையாக ’கலர் பென்சில்’- கிட்ஸ் எக்ஸ்பிரிமெண்டல் லேர்னிங்...

More like this

தமிழ் சினிமாவின் வழக்கமான எல்லைகளைத் தாண்டிபுதிய அனுபவம் தரப்போகும் ‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

புதுமையான கதையம்சத்தில் ரொமாண்டிக் ஃபேண்டஸி படைப்பாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ்...

நெஞ்சுருக வைக்கும் காட்சிகள், மனதை வருடும் பாடல்கள், அம்மா மகன் பாசப் போராட்டம்… கனமான படைப்பாக உருவான ‘செல்லமடா நீ எனக்கு’ மார்ச் 6-ல் ரிலீஸ்!

தாயை வெறுக்கு மகன், மகனுக்காக வாழும் தாய். இந்த அடிப்படை கதைக்களத்துடன் உறவுகளையும் காதலையும் இணைத்து ஒரு உன்னதமான...
error: Content is protected !!