இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம் சார்பாக 23-12-2025 இன்று கே.பாலச்சந்தரின் 11-ம் ஆண்டு நினைவு நாள் சென்னை வளசரவாக்கத்தில் அமைந்துள்ள பிருந்தாவனம் முதியோர் இல்லத்தில் அனுசரிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கத்தின் துணைத் தலைவர், நடிகர், கலைமாமணி பூவிலங்கு மோகன், பொதுச்செயலாளர் கவிதாலயா பாபு, பொருளாளர் எம் முகமது இலியாஸ் ஆகியோர் முன்னிலையில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களின் 11-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், ஒளிப்பதிவாளர்கள் ஆர் ரகுநாதரெட்டி, எல் நாகா, ஆர் ஆர் ராஜ்குமார், ஆர் கே விக்ரமன், திரைப்படம் மற்றும் சின்னத்திரை இயக்குநர்கள் தளபதி, கிருபா சரவணன், நடிகர்கள் சிவன் சீனிவாசன், ஆனந்த், இளைய கட்டபொம்மன், மக்கள் தொடர்பாளர் கோவிந்தராஜ், கேப்டன் வணச்சாமி, சித்த மருத்துவர் மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

