HomeMovie Reviewஜெடூசி சினிமா விமர்சனம்

ஜெடூசி சினிமா விமர்சனம்

Published on

திருவண்ணாமலை சுற்று வட்டாரத்திலுள்ள குறிப்பிட்ட ஒரு கல்லூரியைச் சார்ந்த மாணவிகள் ஒரு சிலரும், பேராசிரியரும் துணை முதல்வரும் அடுத்தடுத்து ஜெடூசி என்ற பெண்கள் பயன்படுத்துகிற கொண்டையூசியால் குத்திக் கொல்லப்படுகிறார்கள். கொல்வது பழங்குடியின குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன்.

ஏன் கொல்கிறான், ஜெடூசியை ஏன் பயன்படுத்துகிறான் என்பதற்கு பரபரப்பான பிளாஷ்பேக் இருக்கிறது.

கதைநாயகனாக ஸ்ரீதர். பழங்குடியினத்தை சேர்ந்த இளைஞராக கெட்டப் நன்றாகப் பொருந்துகிறது. கொடியவர்களை வேட்டையாடும்போது தேவைக்கேற்ப ஆக்ரோஷத்தை தந்திருப்பவர் நீதிமன்றத்தில் தன் அக்காவின் மகளுக்கு நடந்த கொடுமைகளை எடுத்துச் சொல்லும்போது கோபத்தையும் வேதனையையும் சரிவிகிதத்தில் கலந்து டெலிவரி செய்திருக்கிறார்.

அதுவரை உடுத்தியிருந்த உடையிலிருந்து நாகரிக உடைக்கு மாறும்போது காட்டும் தயக்கத்திலிருந்து கொடுமைகளை அனுபவித்து, பரிதாப முடிவை தேடிக் கொள்வது வரை நாயகனின் முறைப் பெண்ணாக வருகிற ஸ்வேதா கச்சிதமான நடிப்பாலும் கவர்ச்சியான உடற்கட்டாலும் கவர்கிறார்.

பெண்களை பாலியல் பசிக்கு பலியாக்குகிறவராக ஏ வெங்கடேஷ் காட்டும் திமிர் தெனாவட்டு கெத்து.

கொலைக்கான பின்னணியை அலசி ஆராய்வதில் போலீஸுக்கு உதவி செய்கிற செகன்ட் ஹீரோயின் சினி யுதன் பரபரப்புக் காட்சிகளுக்கு உதவுகிறார்.

பிளாக் பாண்டி,  பவா செல்லதுரை, ஜெயந்திமாலா, அருவி மதன், அசோக் பாண்டியன் என மற்றவர்கள் ஏற்ற கேரக்டர்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் நாகஅர்ஜுனின் கேமரா காடு மேடுகளையும் நகரத்தையும் சுற்றித் திரிந்து காட்சிகளை தரமாக பதிவு செய்துள்ளது. விக்னேஸ்வரன் இசையில் பாடல்கள் மனதில் ஒட்டிக் கொள்ளாவிட்டாலும் கேட்க இதம். பின்னணி இசையில் குறையில்லை.

Latest articles

டெலிவரி பாய் சினிமா விமர்சனம்

'தேவையான நேரத்தில் கிடைத்த உதவிக்கு நன்றிக் கடன் செலுத்த மறந்து விடாதீர்கள்' என்று கருத்து சொல்கிற கமர்ஷியல் ஆக்சன்...

தியாகராஜா குமாரராஜாவின் தனித்துவமான திரைமொழியில், ஜனவரி 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது ‘பாக்கெட் நாவல்’!

சில கூட்டணிகள் மீண்டும் இணையும் போது ரசிகர்களிடம் இயல்பாகவே எதிர்பார்ப்பு அதிகரிக்கும். அந்த வகையில், ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்குப்...

ஆக்டோபஸ் வெப் சீரிஸ் விமர்சனம்

ஒரு குடியிருப்பு. அதில் ஒரு வீட்டில் அடிப்பது, உதைப்பது, சுடு வைப்பது என மனைவியை கொடுமைப்படுத்துபவன். அதையெல்லாம் பார்த்து...

நிறம் சினிமா விமர்சனம்

மருத்துவ மாணவி ப்ரீத்தி அஸ்ரானியும் முகேனும் காதலர்கள். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிய, சிலபல நாட்களில் பிரீத்தி காணாமல்...

More like this