லியோ சிவகுமார் ஆக்சன் ஹீரோவாக தரம் உயர்ந்திருக்கிற படம். ஒரு பாதி மென்முறை, மறுபாதி வன்முறை என பங்குபிரித்துக் கொண்டு பயணிக்கிற திரைக்கதையில் ‘டெலிவரி பாய்.’
ஹீரோ சிவா தேவையான தகுதிகளை வைத்துக் கொண்டு போலீஸ் பணியில் சேர்வதற்கான முயற்சியிலிருக்கிறார். இடையில், விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் அம்மாவைக் காப்பாற்ற ஒரு இளைஞனிடமிருந்து, வேறு வழியின்றி இரண்டு லட்ச ரூபாயை அபகரிக்கிறார். நாளைய போலீஸ் இன்றைய திருடன் என்றாகிறது அவரது நிலைமை.
சிகிச்சை நல்லபடியாக முடிந்து அம்மா நலமாகிறார். அதன்பின், அபகரித்த பணத்தை உரியவரிடம் திருப்பிக் கொடுக்க நினைக்கிறார்; பணத்தை தன்னிடம் பறிகொடுத்தவரை தேடியலைகிறார். ஒருநாள் அவரை பார்க்கிறார். அப்போது அவர் போளீஸில் சிக்கி, எப்போது வேண்டுமானாலும் உயிர் பறிபோகும் என்கிற அளவிலான பெரும் பிரச்சனையிலிருக்கிறார்.
போலீஸில் சிக்குகிற அளவுக்கு அவர் செய்த தவறு என்ன என்பதையெல்லாம் விவரிக்கும் காட்சிகள் கதையில் பரபரப்புத் தீ பற்ற வைக்க,
சிவா நன்றிக்கடனாக அந்த பிரச்சனையிலிருந்து அவரைக் காப்பாற்ற களமிறங்குகிறார். அதன் விளைவுகள் ரத்தம் தெறிக்கிற மீதிக் கதை…
அம்மாவுக்காக பணத்தை திருடுவது, திருடிய பணத்தை திருப்பிக் கொடுத்தால்தான் நிம்மதி என்ற மனநிலை சுமந்து திரிவது,

