HomeCinemaகௌதம் கார்த்திக் பிறந்தநாளில் புதுப்பட அறிவிப்பு... வசனம் எழுதுகிறார் இயக்குநர் ராஜுமுருகன்!

கௌதம் கார்த்திக் பிறந்தநாளில் புதுப்பட அறிவிப்பு… வசனம் எழுதுகிறார் இயக்குநர் ராஜுமுருகன்!

Published on

கௌதம் கார்த்திக் ‘கிரிமினல்’ மற்றும் ‘மிஸ்டர் எக்ஸ்’ என இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில், இப்போது இவர் நடிக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கௌதம் கார்த்திக்கின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் இப்புதிய படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். எளிய மக்களின் வாழ்வியலையும் அதிகாரத்திற்கு எதிரான அரசியலையும் அழுத்தமாக பதிவு செய்யும் இயக்குநர் ராஜு முருகன் இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார். இவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தினா ராகவன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

படம் குறித்து இயக்குநர் தினா ராகவன் பேசியபோது, “தென்சென்னையில் உள்ள தரமணி போன்ற பகுதியில் நடக்கும் உள்ளூர் அரசியலை, எளிமையான சம்பவங்களாலும் உண்மைக்கு நெருக்கமாகவும் அரசியல் நையாண்டிகள் கலந்தும் சொல்ல முயற்சிக்கும் படமாக இதை உருவாக்க இருக்கிறோம். சாமானியனின் எதார்த்த வாழ்வியலோடு அரசியலை சற்று காமெடி கலந்து சொல்வது தான் இந்த படம்.

இந்த படத்தில் கௌதம் கார்த்திக்கின் கதாபாத்திரத்தை அரசியலில் இருக்கும் ஏரியா பையன் போன்று உருவாக்கி இருக்கிறோம். இதுவரை அவர் நடித்ததில் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரமாக இது இருக்கும். அவரது கதாபாத்திரம் நம் வீட்டில் இருக்கும் ஒருவர் போன்ற உணர்வை ஏற்படுத்தும்” என்றார்.

தற்போதைக்கு GK 19 என்ற பெயரில் துவங்கியுள்ள இந்த படத்தை எம்.ஜி.ஸ்டூடியோஸ் சார்பில் ஏ.பி.வி. மாறன் மற்றும் டாடா இயக்குநர் கணேஷ் கே பாபு இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியலை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள். விரைவில் படப்பிடிப்பை தொடங்கி அடுத்த வருட கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

Latest articles

உற்சாகமாக நடந்த, பவிஷ் நாராயணன் நடித்துள்ள ‘லவ் ஓ லவ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!

பவிஷ் நாராயணன் நடிக்கும் ‘லவ் ஓ லவ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் 15.6.2026 அன்று சென்னையில் நடந்தது....

பவிஷ் நாராயணன் நடிக்கும் ‘லவ் ஓ லவ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் 15.6.2026 அன்று சென்னையில் நடந்தது....

கரு. பழனியப்பன் இயக்கும் ‘குக்கர்’ திரைப்படத்தின் தலைப்பை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்!

கரு. பழனியப்பன் இயக்கும் 'குக்கர்' திரைப்படத்தின் தலைப்பை இன்று (15-06-2026) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின்...

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல; நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… -நடிகர் சௌந்தரராஜா 

நடிகர் செளந்தரராஜா, தன்னுடைய மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மூலம் கடந்த சில ஆண்டுகளாக இயற்கை, சுற்றுச்சூழல் மற்றும் விவசாயம்...

More like this