HomeGeneralகொண்டாட்டமாய் நடந்த, கவின் நடிக்கும் 'பேர் சொல்லும் பிள்ளை' படத்தின் தொடக்க விழா!

கொண்டாட்டமாய் நடந்த, கவின் நடிக்கும் ‘பேர் சொல்லும் பிள்ளை’ படத்தின் தொடக்க விழா!

Published on

கவின் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘பேர் சொல்லும் பிள்ளை’ படத்தின் பாரம்பரிய படப்பிடிப்பு தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
‘தண்டட்டி’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் உருவாகும் ‘பேர் சொல்லும் பிள்ளை’ படத்தில் கவின் கதையின் நாயகனாக நடிக்க.. அவருக்கு ஜோடியாக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிக்கிறார். ஆர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ஜி.மதன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள எம். கதிரவன் மதி கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். கிராமிய பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகும் இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார். இணை தயாரிப்பு A.வெங்கடேஷ்.
‘பேர் சொல்லும் பிள்ளை’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு, இயக்குநர் கதாசிரியர் நடிகர் தமிழ், இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, இயக்குநர் ஆன்ட்ரூ லூயிஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு கிளாப் அடித்து படத்தின் பாரம்பரிய படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் – ராம். சங்கையா – கவின்- சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி – ஆர். வேல்ராஜ்- ஜஸ்டின் பிரபாகரன் கூட்டணியில் உருவாகும் ‘பேர் சொல்லும் பிள்ளை ‘ – ரசிகர்களாலும், திரையுலகினராலும் கொண்டாடக்கூடிய படைப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Latest articles

வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்...

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

More like this