HomeMovie Reviewஎங்கள் தங்கம் சினிமா விமர்சனம்

எங்கள் தங்கம் சினிமா விமர்சனம்

Published on

தெலுங்கு ‘மா இன்ட்டி பங்காரம்’ தமிழ் டப்பிங்கில் ‘எங்கள் தங்கம்.’

கதையின் நாயகி ஸ்வர்ணா கணவருடனும், கணவரின் குடும்பத்துடனும் உற்சாகமாக நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார். அந்த நேரமாகப் பார்த்து நக்சலைட் குழு ஒன்றின் தலைவன் ஸ்வர்ணாவை தன்னுடன் வந்துவிடச் சொல்லி அழைக்கிறான். ஸ்வர்ணா மறுக்க, அவன் ஸ்வர்ணாவின் குடும்பத்தை அழித்து விடுவேன் என்று சொல்லி, அதற்கான முயற்சிகளில் இறங்குகிறான்.

ஸ்வர்ணா அவனிடமிருந்து குடும்பத்தை காப்பாற்ற களமிறங்கி ஆக்சன் சூறாவளியாய் மாறுகிறார். அவர்களின் முயற்சியை முறியடிக்கிறார்.

எப்படி முறியடிக்கிறார் என்பது சுவாரஸ்யமும் பரபரப்பும் கலந்த காட்சிகளாக இருக்க, நக்சல் கும்பலுக்கும் ஸ்வர்ணாவுக்கும் என்ன தொடர்பு என்பது இயக்கியிருக்கும் எங்கள் தங்கத்தின் விறுவிறுப்பான எபிசோடுகள்…

ஸ்வர்ணாவாக சமந்தா. சமையலில் ஆனா ஆவன்னா கூட தெரியாதவர் தோழியை விதவிதமாக சமைக்க வைத்து தானே சமைத்தது போல், மல்ட்டி குசின் ரெஸ்டாரண்ட் செஃப் லெவலுக்கு கணவரின் வீட்டாரிடம் பில்டப் கொடுக்கும் காட்சிகள் மனம் விட்டு சிரிக்க வைக்கின்றன. எதிரிகளை பறந்து பறந்து சுளுக்கெடுக்கும்போதும், துப்பாக்கியால் சம்பவங்கள் செய்கிற போதும் நடிப்பில் வேற லெவல் வெறித்தனம் காட்டி அசரடிக்கிறார்.

நக்சல் கும்பல் தலைவனாக குல்சன் தேவய்யாவின் வில்லத்தனம் போதுமான அளவில் இருக்கிறது. சமந்தாவின் சிநேகிதியாக வருகிற மன்ஜூஷாவுக்கு காமெடி கலகலப்பில் பெரும் பங்கிருக்கிறது. சமந்தாவின்  கணவராக திகந்த் மஞ்சாலே, மாமியாராக கெளதமி உள்ளிட்டோர் கதையின் தேவையை சரியாக நிறைவேற்றியிருக்கிறார்.

பாடல்களில் எனர்ஜி ஏற்றியிருக்கும் சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் ஆக்சன் அதிரடிக்கு பொருந்தும்படி பயணித்திருக்கிறார்.

சந்தர்ப்ப சூழ்நிலையால் பயங்கரவாதக் குழுவில் இணைந்து களப்பணியாற்றிய ஒரு பெண் அதிலிருந்து விலகி, குடும்ப வாழ்க்கையில் நுழையும்போது சந்திக்கும் பேராபத்துகளில் காமெடி கலாட்டாக்களை கலந்து கட்டியிருக்கும் நந்தினி ரெட்டி,  படத்தை அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி இயக்கியிருக்கிறார்.

Rating 3 / 5

Latest articles

ராம் அண்ட் லீலா சினிமா விமர்சனம்

நாயகன் ராமுக்கு பெண் பார்க்கிறார்கள். யாருக்கும் அவரை பிடிப்பதில்லை. அந்த விரக்தியில் இருக்கும் அவர் ஒரு கட்டத்தில் லீலாவை...

பரபர கதைக்களம்; விறுவிறு திரைக்கதை… மனநோயாளியாக முருகா அசோக் அசத்தும் ‘கிட்டி’ காந்தி ஜெயந்தி’யன்று வெளியாகிறது!

பரபர கதைக்களத்துடன் விறுவிறு திரைக்கதையில் அமைந்த படங்களை விரும்பும் ரசிகர்களுக்காகவே உருவாகியுள்ள படம் 'கிட்டி.' தமிழ் சினிமாவில் நாட்டில்...

பெரிய நட்சத்திரங்கள். இன்னும் பெரிய கதைகள். தமிழ் ZEE5 வழங்கும் இதுவரையிலான மிகச் சிறப்பான உள்ளடக்கத் தொகுப்பு.

ஜனநாயகன் முதல் பிரபலமான ஃபிராஞ்சைஸ்களின் தொடர்ச்சி வரை, இன்றைய தமிழ் பொழுதுபோக்கை வரையறுக்கும் கதைகள், நட்சத்திரங்கள் மற்றும் அனுபவங்களை...

பூந்தமல்லியில் ஜஸ்’ ஆன்கோவின் (Jus’ Onco) 4-வது புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு! தரமான புற்றுநோய் சிகிச்சையை குறைந்த செலவில் மக்களுக்கு அருகில் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சி

தரமான புற்றுநோய் சிகிச்சையை அனைவருக்கும் எளிதாகவும், குறைந்த செலவிலும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஜஸ்’ ஆன்கோ (Jus’...

More like this