HomeGeneralபரபர கதைக்களம்; விறுவிறு திரைக்கதை... மனநோயாளியாக முருகா அசோக் அசத்தும் 'கிட்டி' காந்தி ஜெயந்தி'யன்று வெளியாகிறது!

பரபர கதைக்களம்; விறுவிறு திரைக்கதை… மனநோயாளியாக முருகா அசோக் அசத்தும் ‘கிட்டி’ காந்தி ஜெயந்தி’யன்று வெளியாகிறது!

Published on

பரபர கதைக்களத்துடன் விறுவிறு திரைக்கதையில் அமைந்த படங்களை விரும்பும் ரசிகர்களுக்காகவே உருவாகியுள்ள படம் ‘கிட்டி.’
தமிழ் சினிமாவில் நாட்டில் நம்மை சுற்றி எவ்வளவு குற்றங்கள் நடந்தாலும் யார் செய்தார்கள் என்ற விசாரணை செய்வதுதான் ரெகுலர் ஃபார்முலா திரைக்கதையாக உள்ளது. அதை மாற்றி கதை நாயகனை சுற்றி பின்னப்பட்டிருக்கும் இந்த திரைக்கதையால் நிச்சயம் படம் வெளியான பிறகு நிமிர்ந்து நிற்பார் இயக்குநர் நெடுமாறன் மோகன்தாஸ்.
படத்தின் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் இயக்குனர் மிகுந்த சிரமம் எடுத்து ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி இந்த கதாபாத்திரங்களில் இவர்கள்தான் நடிக்க வேண்டும் என்று நடிகர் தேர்வில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டிருக்கிறார்.
நாயகன் முருகா அசோக்  மனநோயாளியாக நடிக்கும் அந்த கதாபாத்திரத்தை இயக்குனர் சொல்லிக் கொடுத்த விதமும் நாயகன் நடித்த விதமும் படத்தில் அருமையாக இருக்கும் என்று இயக்குனர் கூறியது மறக்க முடியாத நிகழ்வு.
மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருக்கும் ‘முருகா’ அசோக்கிற்கு இப்படம் நிச்சயமாக திருப்புமுனையாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை .
இப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் பிசியான நடிகர்களில் ஒருவராக நிச்சயம் வலம் வருவார்.
முருகா அசோக்கிற்கு நிஷா,சங்கவி, சிமு அத்வானி என படத்தில் மூன்று நாயகிகள். ‘ஊமை விழிகள்’ பட இயக்குநர் ஆர். அரவிந்த்ராஜ் படத்தின் திருப்புமுனை பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  ஒய் ஜி மகேந்திரன் சிறப்பு தோற்றத்திலும், தயாரிப்பாளர் திருமாறன் போலீஸ் விசாரணை அதிகாரி கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.
படப்பிடிப்பு கும்பகோணம், கடலூர், தரங்கம்பாடி,  சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று நிறைவடைந்துள்ளது.
படக்குழு:-
இசை – காதர்
ஒளிப்பதிவு -வி.எஸ்.வேலன்
நடனம் – ராக் சங்கர்
எடிட்டர் – கார்த்திக் பாண்டியன்
ஸ்டண்ட் – ‘பாப்புலர்’ பாபு
பாடல்கள் – ப்ரியன், சீர்காழி சிற்பி,
தமிழ்மகன்
கலை இயக்குனர் – வாலி
மக்கள் தொடர்பு – சரண்
கதை,திரைக்கதை ,வசனம், இயக்கம் – நெடுமாறன் மோகன்தாஸ்.

Latest articles

ராம் அண்ட் லீலா சினிமா விமர்சனம்

நாயகன் ராமுக்கு பெண் பார்க்கிறார்கள். யாருக்கும் அவரை பிடிப்பதில்லை. அந்த விரக்தியில் இருக்கும் அவர் ஒரு கட்டத்தில் லீலாவை...

பெரிய நட்சத்திரங்கள். இன்னும் பெரிய கதைகள். தமிழ் ZEE5 வழங்கும் இதுவரையிலான மிகச் சிறப்பான உள்ளடக்கத் தொகுப்பு.

ஜனநாயகன் முதல் பிரபலமான ஃபிராஞ்சைஸ்களின் தொடர்ச்சி வரை, இன்றைய தமிழ் பொழுதுபோக்கை வரையறுக்கும் கதைகள், நட்சத்திரங்கள் மற்றும் அனுபவங்களை...

பூந்தமல்லியில் ஜஸ்’ ஆன்கோவின் (Jus’ Onco) 4-வது புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு! தரமான புற்றுநோய் சிகிச்சையை குறைந்த செலவில் மக்களுக்கு அருகில் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சி

தரமான புற்றுநோய் சிகிச்சையை அனைவருக்கும் எளிதாகவும், குறைந்த செலவிலும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஜஸ்’ ஆன்கோ (Jus’...

மகுடஞ்சாவடியில் காயத்ரி ஆனந்தகிருஷ்ணன் நடத்திவரும் நீட் தேர்வுக்கான இலவசப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று ஆறு மாணவர்கள் மருத்துவப் படிப்பில் இடம் பெற்று சாதனை!

தமிழ்நாடு அரசியலில் மிகவும் சர்ச்சைக்குரிய தேர்வுகளில் ஒன்றாக நீட் தொடர்ந்து இருந்து வருகிறது. தமிழகத்தின் சொந்த நீட் விலக்கு...

More like this