HomeGeneralபைக்கர் சினிமா விமர்சனம்

பைக்கர் சினிமா விமர்சனம்

Published on

பைக் ரேஸ் பற்றிய சப்ஜெக்டில் பிரமாண்டமான மேக்கிங்கில் உருவாகி, இந்திய சினிமாவுலகத்தின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கும் படம்.

ஒரு காலகட்டத்தில் பைக் ரேஸில் அசத்திக் கொண்டிருந்த சுனில் நாராயண், மகன் விகாஸுக்கு பயிற்சி கொடுத்து பைக் ரேஸராக உருவாக்குகிறார். பிரபலமான நிறுவனம் விகாஸுக்கு ஸ்பான்ஸர் செய்ய, பங்கேற்க வேண்டிய சர்வதேச பைக் ரேஸ் போட்டியில் கலந்து கொள்ளாமல், தன் அப்பாவிடம் சொல்லிக் கொள்ளாமல் எஸ்கேப்பாகிறார் விகாஸ்.

அந்த எதிர்பாராத சம்பவத்தால் விகாஸுக்கு ஸ்பான்ஸர் செய்த நிறுவன அதிபர், சுனில் நாராயணனையும் அவரது மகன் விகாஸையும் துரோகியாக என நினைக்கிறார். மீடியாக்களும் அவர் குறித்து மோசமான செய்திகளை வெளியிட மனம் நொறுங்கிப் போகிறார். சிலபல வருடங்கள் கடந்த நிலையில் விகாஸுக்கு ரேஸில் பங்கேற்று தனது திறமையை நிரூபித்து உலகத்தின் கவனத்தை தன் பக்கம் திருப்ப வேண்டும் என்றும், தன்னால் இழந்த அப்பாவின் நற்பெயரை மீட்டுக் கொடுக்கவும் விரும்புகிறார்.

விரும்பியதை அவர் எப்படி செய்கிறார்; என்ன மாதிரியான சவால்களைச் சந்திக்கிறார் என்பது கதையின் போக்காக இருக்க,

விகாஸ் சில வருடங்கள் கலந்து கொள்ள தீர்மானிக்கப்பட்ட போட்டியிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் போனது ஏன்? என்பது படத்தின் ஃபிளாஷ்பேக். இயக்கம் அபிலாஷ் ரெட்டி

விகாஸாக சர்வானந்த். பைக் ரேஸராக நடிப்பதற்காக 15 கிலோ வரை எடை குறைத்து தயாரானாராம். அந்த அர்ப்பணிப்புக்காகவே பாராட்ட வேண்டும். நடிப்புப் பங்களிப்பு பொறுத்தவரை நிஜ பைக் ரேஸராகவே உருமாறி நிற்கிறார். ரேஸில் ஆர்வமுள்ள ரசிகர்கள் படத்தைப் பார்த்தால் அவரை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. அப்பா மீது பாசம், காதல் மனைவியின் உணர்வை மதிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு என உணர்வுபூர்வமான நடிப்பிலும் கவர்கிறார்.

விகாஸின் தந்தை சுனிலாக ராஜசேகர். மகனை முறையாக பயிற்சி கொடுத்து பைக் ரேஸுக்கு தயார்படுத்துவது, மகன் மூலம் ஏமாற்றத்தைச் சந்தித்து அவமானப்பட்டு மன உளைச்சலில் நாட்களைக் கடத்துவது, மகன் திரும்பி வந்தபின் பயிற்சி கொடுக்க முடியாது என கோபமாக மறுப்பது, மகனுடைய ஆர்வத்தை புரிந்துகொண்டு பயிற்சி கொடுத்து சாம்பியனாக உருவாக்குவது என தான் வரும் காட்சிகளில் தன்னை மட்டுமே கவனிக்கும்படி அனுபவ நடிப்பை தந்திருக்கிறார். பேரனுடனான சென்டிமென்ட் காட்சிகள் மனதைக் கொள்ளையடிக்காமல் விடாது.

சர்வானந்தின் காதலியாக, மனைவியாக வருகிற மாளவிகா நாயர் காதல் உணர்வை வெளிப்படுத்துவதிலிருந்து ரேஸில் ஈடுபட்டால் கணவனின் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை என அச்சப்படுவது வரை அதற்கேற்ற உடல்மொழியில் பிரதிபலித்திருக்கிறார்.

ஸ்போர்ட்ஸ் களத்தில் ஸ்பான்ஸராக இருக்கிற கார்ப்பரேட் நபர்களின் சுயரூபத்தை வில்லத்தனத்தை துல்லியமாக காண்பித்திருக்கிறார் அதுல்குல்கர்னி. மற்றவர்களும் கேரக்டர்களுக்கு பலம்தரும்படி நடித்திருக்கிறார்கள்.

பைக் ரேஸ் எந்தளவுக்கு கடுமையானது, பிரமாண்டமானது என்பதை இந்த படம் காண்பிக்கிற அளவுக்கு இதற்கு முன் எந்த படமும் காண்பித்ததாக தெரியவில்லை. அத்தனை சிறப்புமிக்க கதைக்களத்தை ஜிப்ரானின் பின்னணி இசையும், ஜெ யுவராஜின் ஒளிப்பதிவும் 100% தரம் உயர்த்தியிருக்கின்றன.

ஸ்போர்ட்ஸ் பட ரசிகர்களை வைஃப் மோடுக்கு கொண்டு செல்கிற எல்லா அம்சம்ங்களும் நிரம்பியிருக்கிற இந்த பைக்கர், கமர்சியல் படங்களை ரசிப்பவர்களுக்கும் கணிசமான திருப்தி தரும்!

Rating 3.5 / 5

Latest articles

‘வைஃப்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் ‘நீ சாரல்’ மனதை வருடும் மெலடி பாடல் வெளியானது!

https://www.youtube.com/watch?v=OS1131P0Qw8 ஹேமநாதன் R இயக்கத்தில் R J விஜய், அஞ்சலி நாயர் நடிப்பில் இன்றைய நவீன கால "திருமண வாழ்வை"...

பீர் பாட்டில் மாலை அணிந்து வேட்புமனு தாக்கல் செய்த நடிகர் தக்‌ஷன் விஜய்!

பீர் பாட்டில் மாலை அணிந்து நடிகரும், மகாத்மா காந்தி மக்கள் கட்சி தலைவருமான தக்‌ஷன் விஜய் தனது கட்சி...

நடிகர் ஜெய் பிறந்தநாளில், பாரதியாரின் வரிகளில் சட்டென்று மாறுது வானிலை’ படத்தின் 3வது சிங்கிள் வெளியீடு! தேர்தல் சூழலை பிரதிபலிக்கும் ஆக்ரோஷ பாடல்! 

https://www.youtube.com/watch?v=XYS6TD2AgdY நடிகர் ஜெய் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது புதிய படமான “சட்டென்று மாறுது வானிலை” படக்குழு ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக,...

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெள்ளகுதிர திரைப்படம் மலைவாழ் மக்களின் மனதை பேசும் ஒரு எதார்த்தக் கதை!

தமிழ் சினிமாவில் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு பல படங்கள் வந்திருந்தாலும், வெள்ளகுதிர திரைப்படம் அந்த வரிசையில்...

More like this