HomeGeneral'வைஃப்' திரைப்படத்தின் முதல் சிங்கிள் 'நீ சாரல்' மனதை வருடும் மெலடி பாடல் வெளியானது!

‘வைஃப்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் ‘நீ சாரல்’ மனதை வருடும் மெலடி பாடல் வெளியானது!

Published on

ஹேமநாதன் R இயக்கத்தில் R J விஜய், அஞ்சலி நாயர் நடிப்பில் இன்றைய நவீன கால “திருமண வாழ்வை” மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் “வைஃப்” (Wife). விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான  ”நீ சாரல்” மெலடி பாடல் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த இனிமையான பாடலை ஜென் மார்டின்  இசையமைத்து, சுபலக்‌ஷினியுடன்  இணைந்து பாடியுள்ளார். இயக்குநர் விஷ்ணு எடவன் இப்பாடலை  எழுதியுள்ளார்.
மென்மையான இசையும், மனதை வருடும் வரிகளும் இணைந்து, “நீ சாரல்” பாடலை ஒரு அழகான காதல் மெலடியாக மாற்றியுள்ளது. வெளியான உடனே இந்தப் பாடல் இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
இன்றைய தலைமுறையில் திருமணத்திற்கு முன்பான காதலும், திருமணத்திற்குப் பின்பான காதலும் எப்படி இருக்கிறது என்பதையும், இன்றைய நவீன தம்பதிகளின் உறவுச்சிக்கலை மையப்படுத்தி அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான ரொமான்ஸ் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் R J விஜய், அஞ்சலி நாயர் நாயகன், நாயகியாக  நடித்துள்ளனர். இவர்களுடன் மைத்திரேயன், ரெடின் கிங்ஸ்லி, அபிஷேக் ஜோசப், விஜய் பாபு, கல்யாணி நட்ராஜன், லல்லு, கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
K.A. சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு தினேஷ் பொன்ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். சிவ சங்கர் கலை இயக்கம் மேற்கொள்ள, தினேஷ், அசார், ராதிகா ஆகியோர் நடன அமைப்பை செய்துள்ளனர். VFX பணிகளை ஹோகஸ் போகஸ் நிறுவனம் செய்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும்.

Latest articles

இந்தக் குழுவுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும்! -இதயம் முரளி படத்தின் வெற்றி விழாவில் விருப்பம் தெரிவித்த நடிகை கயாது லோகர் 

அதர்வா நடிக்க, ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கிய 'இதயம் முரளி' திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொள்ள...

‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ்!

இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம்...

மூன்றாம் முறை தேசிய விருது… ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு பாடகர் வேல்முருகன் காசு மாலையுடன் பாராட்டு!

நேற்று (19 ஜூலை 2026) அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில்  ஜி.வி. பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு...

46 ஆண்டுகால திரைப்பயணத்தில் மேலும் ஒரு மகுடம் சூட்டிய ‘அமரன்’ – 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது!

இந்திய திரையுலகில் நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தனது தனித்துவமான கலைப் பார்வையால் அழியாத...

More like this