பீர் பாட்டில் மாலை அணிந்து நடிகரும், மகாத்மா காந்தி மக்கள் கட்சி தலைவருமான தக்ஷன் விஜய் தனது கட்சி வேட்பாளருக்கு மனுதாக்கல் செய்தார்.

மதுவற்ற தமிழகம். போதையற்ற இளைஞர் சமுதாயம். தரமான கல்வி. சமமான மருத்துவம். காந்தியம் வென்றிட, நல்லாட்சி மலர்ந்திட, தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சிக்கு வாக்களியுங்கள்… என்ற கோஷத்துடன், பெரம்பூர் தொகுதியில் ஆஸ்லின் பெல்மென் என்பவரை வேட்பாளராக நிறுத்தினார். தனது ஆதரவாளர்களுடன் மிகவும் வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்தார்!


