HomeGeneralதாத்தா அல்லு ராமலிங்கய்யாவின் பிறந்தநாளில் 'ICONZA' புதிய அலுவலகம் திறந்த அல்லு அர்ஜூன்!

தாத்தா அல்லு ராமலிங்கய்யாவின் பிறந்தநாளில் ‘ICONZA’ புதிய அலுவலகம் திறந்த அல்லு அர்ஜூன்!

Published on

மறைந்த பழம்பெரும் நடிகரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான அல்லு ராமலிங்கய்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் ‘ICONZA’ என்ற தனது புதிய அலுவலகத்தை திறந்தார்.
எளிமையாக நடைபெற்ற தொடக்க விழா பூஜையில் அல்லு அர்ஜூன் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.  இந்த சிறப்பான நாளின் புகைப்படங்களைப் பகிர்ந்த அல்லு அர்ஜுன், தனது தாத்தாவின் நிலைத்திருக்கும் கலைப் பாரம்பரியத்திற்கு அர்ப்பணிப்பாக இந்த புதிய அலுவலகம் செயல்படும் என்றார்.
இந்திய சினிமாவின் முன்னோடியாகப் போற்றப்படும் அல்லு ராமலிங்கய்யா அவர்களின் புகழ்பெற்ற திரைப்பயணம் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களையும் உள்ளடக்கியது. தனது தாத்தாவின் பிறந்தநாளில் இந்த புதிய பயணத்தைத் தொடங்கும் அல்லு அர்ஜுன், சினிமா, படைப்பாற்றல் மற்றும் கலைநோக்கில் தனது குடும்ப பாரம்பரியத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கிறார்.
கிரியேட்டிவிட்டி, இணைந்து செயல்படுதல் மற்றும் புதிய யோசனைகளுக்கான இடமாக உருவாக்கப்பட்டுள்ள ICONZA, நடிப்பைத் தாண்டி அல்லு அர்ஜுனின் விரிவடைந்து வரும் கலைப் பயணத்தில் மற்றொரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.
தற்போது, அட்லி இயக்கும் ‘ராக்கா’ திரைப்படத்திற்காக அல்லு அர்ஜுன் தயாராகி வருகிறார். இந்த திரைப்படம் சமீபத்தில் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்தது. இதனைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘AA23’ திரைப்படத்திலும், அதன் பின்னர் ‘புஷ்பா 3: தி ரேம்பேஜ்’ திரைப்பத்திலும் நடிக்கிறார்.

Latest articles

காதல் மற்றும் அதீத ஈடுபாட்டின் இருண்ட பக்கத்தைப் பேசுகிற ‘EYES’ மலையாள தொடர் அக்டோபர் 9 முதல் Sony LIV தளத்தில் காணலாம்!

Sony LIV-ன் மலையாள Original தொடரான ‘EYES’ காதல் மற்றும் அதீத ஈடுபாட்டின் இருண்ட பக்கத்தைப் பேசுகின்றது,அக்டோபர் 9...

நற்பணி இயக்தினரையும் ரசிகர்களையும் சந்தித்து உற்சாகமூட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பாக அனைத்து மாநில மாவட்ட, நகர, ஒன்றியம், பகுதி நிர்வாகிகள் கூட்டம் சென்னையில்...

ரியோராஜ் நடிப்பில் ‘மேடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

சிவகார்த்திகேயன், சூரி, லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பூஜை நிகழ்வைத் தொடங்கி வைத்த ‘மேடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக...

புதிய தொழில்நுட்பங்களுடன் தனித்துவமான திரைப் படைப்புகளை உருவாக்க ‘மந்திரா ஸ்டுடியோஸ்.’ –ஆர்.டி. ராஜா அறிவிப்பு

தமிழ் திரையுலகில் புதிய முயற்சிகளையும், புதுமையான கதை சொல்லும் முறைகளையும் ஊக்குவிக்கும் நோக்கில், தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா புதிய...

More like this