HomeCinema‘பரீட்’ படத்திற்காக போலீஸ் தீம் பாடலை பாடியுள்ள அருண்ராஜா காமராஜ்

‘பரீட்’ படத்திற்காக போலீஸ் தீம் பாடலை பாடியுள்ள அருண்ராஜா காமராஜ்

Published on

ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘பரீட்’ (Buried). ‘வெப்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஹாரூண் இந்த படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.

‘8 தோட்டாக்கள்’ புகழ் நடிகர் வெற்றி இப்படத்தில் கதாநாயகனாக ஒரு என்கவுண்டர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதையின் நாயகிகளாக ஹைதராபாத்தை சேர்ந்த அக்சிதா & சாந்தினி தமிழரசன் நடிக்கின்றனர் . பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சரவணன் சுப்பையா, ‘லப்பர் பந்து’ ஜென்சன் திவாகர், வடிவேல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் இப்படத்திற்கு ஜான் ராபின்ஸ் இசையமைக்கிறார்.

சமீபத்தில் ‘பரீட்’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது. இதையடுத்து இயக்குநரும் பாடகருமான அருண்ராஜா காமராஜ், இப்படத்திற்காக பாடிய பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது.

இதுகுறித்து இயக்குநர் ஹாரூண் கூறும்போது, “நடிகர் வெற்றி இதில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரியாக நடிக்கிறார். இந்தப்பொறுப்பை எடுத்துக்கொண்ட பிறகு அவர் காவல்துறையில் பல அதிரடி நடவடிக்கைகளை நிகழ்த்துகிறார். அதை சொல்லும் விதமாக ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் இடம்பெற்றது போன்று போலீஸுக்கு என்று ஒரு பாடலை உருவாக்க வேண்டும் என்று நினைத்தோம்.

இந்த பாடலை அருண்ராஜா காமராஜ் பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்து அவரை அழைத்து பாட வைத்துள்ளோம். இந்தப் பாடலை ஜூனியர் நித்யா என்பவர் எழுதியுள்ளார். இவர் கொரோனா காலகட்டத்தில் ‘ஸ்டவ் மேல கடாய்’ என்கிற பாடல் மூலம் பிரபலமானவர்.

தற்போது தனுஷ் நடித்து வரும் ‘கர’ படத்திற்காக அருண்ராஜா காமராஜ், தானே ஒரு பாடல் எழுதி, பாடியும் உள்ளார். அதற்கு அடுத்ததாக எங்களது ‘பரீட்’ படத்திற்காக அவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘பரீட்’ படத்தின். படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியாக இருக்கிறது” என்றார்.

Latest articles

‘வைஃப்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் ‘நீ சாரல்’ மனதை வருடும் மெலடி பாடல் வெளியானது!

https://www.youtube.com/watch?v=OS1131P0Qw8 ஹேமநாதன் R இயக்கத்தில் R J விஜய், அஞ்சலி நாயர் நடிப்பில் இன்றைய நவீன கால "திருமண வாழ்வை"...

பீர் பாட்டில் மாலை அணிந்து வேட்புமனு தாக்கல் செய்த நடிகர் தக்‌ஷன் விஜய்!

பீர் பாட்டில் மாலை அணிந்து நடிகரும், மகாத்மா காந்தி மக்கள் கட்சி தலைவருமான தக்‌ஷன் விஜய் தனது கட்சி...

நடிகர் ஜெய் பிறந்தநாளில், பாரதியாரின் வரிகளில் சட்டென்று மாறுது வானிலை’ படத்தின் 3வது சிங்கிள் வெளியீடு! தேர்தல் சூழலை பிரதிபலிக்கும் ஆக்ரோஷ பாடல்! 

https://www.youtube.com/watch?v=XYS6TD2AgdY நடிகர் ஜெய் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது புதிய படமான “சட்டென்று மாறுது வானிலை” படக்குழு ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக,...

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெள்ளகுதிர திரைப்படம் மலைவாழ் மக்களின் மனதை பேசும் ஒரு எதார்த்தக் கதை!

தமிழ் சினிமாவில் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு பல படங்கள் வந்திருந்தாலும், வெள்ளகுதிர திரைப்படம் அந்த வரிசையில்...

More like this