HomeCinemaபேட் பாய்ஸ் படத்தில் ரஹ்மானுடன் மோதிய அனுபவம்... மனம்திறந்த நடிகர் பாபு ஆண்டனி!

பேட் பாய்ஸ் படத்தில் ரஹ்மானுடன் மோதிய அனுபவம்… மனம்திறந்த நடிகர் பாபு ஆண்டனி!

Published on

தென்னிந்திய சினிமாவில் இன்றும் எவர்கிரீன் ஹீரோவாக இருப்பவர் நடிகர் ரஹ்மான். மலையாள சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின் தமிழ் தெலுங்கு படங்களிலும் வில்லனாக நடித்து புகழ்பெற்றவர் பாபு ஆண்டனி. அதன் பின் 1990 – களில் மலையாளத்தில் காதாநாயகனாக, ஆக்க்ஷன் ஹீரோவாக நடித்து ரசிகர்களால் பவர் ஸ்டார் என்று போற்றப்பட்டார். இவர் கதாநாயகனாக மலையாளத்தில் நடித்த கடல், பாக்ஸர், சந்தா, பரண கூடம், நெப்போலியன், தாதா, ராஜதானி உள்ளிட்ட ஏராளமான படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. இன்றும் மலையாளத்திலும் பிற மொழிகளிலும் நாயகனாகவும் வில்லனாகவும் குணசித்திர நடிகராக நடித்து கொண்டிருக்கிறார், பாபு ஆண்டனி .

பல வருடங்களுக்கு பிறகு ‘எவர்கிரீன் ஸ்டார் ‘ ரஹ்மானும் , ‘பவர்ஸ்டார் ‘ பாபு ஆண்டனியும் நேருக்கு நேர் மோதும் மலையாளப் படம் ‘பேட் பாய்ஸ்’. இந்த ஓணம் பண்டிகை காலத்தில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் இப்படத்தை ஓமர் லூலூ இயக்கியுள்ளார். இவர், பிரியா வாரியரை ‘அடார் லவ்’ படத்தில் அறிமுகப்படுத்தியவர். அவர் இயக்கிய இந்த படத்தின் டிரைலரும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது. படம் செப்டம்பர் 13 ஓணம் தினத்தன்று வெளிவருகிறது.

இதில் ரஹ்மான் மெக்காட்டு குளம் ஆன்டப்பன் என்ற கேரக்டரிலும், வெட்டு காடு பென்சன் என்ற கேரக்டரில் வில்லனாக பாபு ஆண்டனி நடிக்கிறார்.

இருவரும் ஒன்று சேருவது மிகவும் சந்தோஷம் அளிப்பதாக கூறிய பாபு ஆண்டனி, பழைய சுவாரசியமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்.

“எண்பதுகளில் நான் சென்னையில் அலைந்த காலம்… அன்று இயக்குனர் ஜாம்பவான் பத்மராஜனின் ‘கூடேவிடே’ படத்தில் மம்மூட்டி, சுஹாசினி ஆகியோருடன் நடித்து சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு இணையாக புகழ் உச்சியில் இருந்தார் ரஹ்மான். நானும் அன்று ரஹ்மானின் ரசிகன். வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த எனக்கு ஒரு வாய்ப்பு தேடி வந்தது. இன்னொரு ஜாம்பவானான பரதன் இயக்கத்தில் ரஹ்மான் கதாநாயகனாக நடிக்கும் ‘சிலம்பு’ என்ற படத்தில். ஏதோ சைடு ரோல் என்று எண்ணி தான் பரதன் சாரிடம் சென்றேன். ஆனால் அவரோ நீ தான் ரஹ்மானுக்கு வில்லன் என்று சொல்லி இன்ப அதிர்ச்சி தந்தார். ரஹ்மான் அன்று பெரிய ஹீரோ. ஆள் பந்தாவாக இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் புது நடிகரான என்னோடு முதல் நாளே நண்பராக மாறி எனக்கு நடிப்பு டிப்ஸ் கொடுத்தார். தினமும் அவர் காரிலேயே என்னையும் அழைத்து செல்வார். எனது முதல் படமான சிலம்பு மாபெரும் வெற்றி பெற்று நானும் புகழ் பெற்றேன். அந்த நட்பு உணர்வும் மனித நேயமும் இன்று வரை ரஹ்மானுக்கு எள்ளளவும் குறையவில்லை.

அதன் பின் ‘பிளாக்’ என்ற படத்தில் நாங்கள் இணைந்து ஒரு நாள் மட்டும் நடித்தோம். இப்போது பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பேட் பாய்ஸில் அவர் நாயகனாக நடிக்க, நான் வில்லனாக நடிக்கிறேன். இது எனக்கு இரட்டிப்பு மகிழச்சி அளிக்கிறது.நான் இதில் வில்லனா நல்லவனா என்பது படம் வெளியான பின் நீங்களே சொல்லுங்கள். இந்த படம் ஓணம் பண்டிகை காலத்தில் மொழி பேதமின்றி எல்லோரும் ரசிக்கும் படியான பொழுது போக்கு படமாக இருக்கும்” என்றார்.

Latest articles

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ வெப் சீரிஸ் விமர்சனம்

இன்ஸ்டா பிரபலங்களின் நடிப்புப் பங்களிப்பில் கிரிக்கெட் விளையாட்டையும் தீவிர ரசிகர்களின் உணர்வுகளையும் மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் டிராமா. ஒரு கிராமத்தைச்...

எம் ஜி ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித், சிம்பு – தனுஷ் வரிசையில் பவிஷ் இடம் பெறுவார்! -‘லவ் ஓ லவ்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு...

பவிஷ், நாக துர்கா, செல்வராகவன், கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ள 'லவ் ஓ லவ்'...

கொண்டாட்டமாய் நடந்த, கவின் நடிக்கும் ‘பேர் சொல்லும் பிள்ளை’ படத்தின் தொடக்க விழா!

கவின் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'பேர் சொல்லும் பிள்ளை' படத்தின் பாரம்பரிய படப்பிடிப்பு தொடக்க விழா...

அங்கீகாரம் திரைப்படம் ஒரு பார்வை

'அங்கீகாரம்' திரைப்படம் சமூகத்தின் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வாதாரப் போராட்டத்தை மிக எதார்த்தமாகப் பேசுகிறது. துப்புரவுத் தொழிலாளியாக வரும் தாய் மற்றும்...

More like this