HomeCinemaஜெய், சத்யராஜ், யோகிபாபு நடிக்கும் பேபி & பேபி' படத்தின் படப்பிடிப்பு தீவிரம்!

ஜெய், சத்யராஜ், யோகிபாபு நடிக்கும் பேபி & பேபி’ படத்தின் படப்பிடிப்பு தீவிரம்!

Published on

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் குடும்பங்களோடு இணைந்து ரசிக்கும் படங்கள் வருவது அரிதாகிவிட்டது. அந்த வகையில் குடும்ப உறவுகளின் பின்னணியில், குழந்தைகளை மையப்படுத்தி, அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள படம் பேபி & பேபி.’

காமெடியும், எமோஷனும் சம அளவில் கலந்து ஒரு அசத்தலான ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கி வருகிறார் அறிமுக இயக்குநர் பிரதாப்.

இப்படத்தில் ஜெய் நாயகனாக நடிக்க, நடிகர் சத்யராஜ் திருப்புமுனை பாத்திரத்தில் நடிக்கிறார். யோகிபாபு மிக முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

நாளை தீர்ப்பு படத்தில், விஜய்யின் முதல் கதாநாயகியாகவும் மற்றும் பவித்ரா படத்தில் அஜித்தின் ஜோடியாகவும் நடித்த, நடிகை கீர்த்தனா செல்வகுமார் இப்படத்தில் ஜெய்யின் அம்மாவாகவும், நடிகர் சத்யராஜுக்கு ஜோடியாக மீண்டும் திரையில் களமிறங்கியுள்ளார். நடிகை பிரக்யா நாக்ரா ஜெய் ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்தராஜ், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, இளவரசு, சிங்கம்புலி, நிழல்கள் ரவி, கேபிஒய் ராமர், கேபிஒய் தங்கதுரை, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், சேசு ஆகியோர் இணைந்து நடிக்கின்றார்கள். மற்றொரு நாயகியாக புதுமுகம் சாய் தன்யா நடிக்கிறார்.

முதற்கட்ட படப்பிடிப்பு  பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு பகுதிகளில்  படமாக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னை சுற்று வட்டார பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் படமாக்கப்பட்டு வருகிறது.

ஜி பி எஸ் கிரியேஷன்ஸ் ஜி பி செல்வகுமார் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். டி பி சாரதி ஒளிப்பதிவு செய்கிறார். யுவராஜ் ஃபிலிம்ஸ் யுவராஜ், தயாரிப்பாளர் ஜி பி செல்வகுமார் இணைந்து படத்தை வெளியிடவிருக்கிறார்கள். படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் விரைவில் வெளியாகும்.

Latest articles

‘தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ திரைப்படத்தின் சக்திவாய்ந்த நட்சத்திரக் கூட்டணியில் பெலவாடி மல்லம்மாவாக இணைந்த நடிகை பூமி சதீஷ் பெட்னேக்கர்! 

தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ் திரைப்படத்தின் நட்சத்திர பட்டியல் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இந்திய...

இசைஞானி இளையராஜாவின் உறவினர் ஜெயனுடன் களமிறங்கும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு: திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்.

எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது...

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...

More like this