பயங்கரமான சம்பவங்கள் நடந்ததால் பல வருடங்களாக மூடியிருந்த அந்த கல்லூரியின் ஹாஸ்டல் மீண்டும் திறக்கப்பட, அதில் சேர்கிறான் மாணவன் விவேக். சேர்ந்ததிலிருந்தே அவனைக் குறிவைத்து அமானுஷ்ய தாக்குதல்கள் நடக்கின்றன. உயிருக்கே ஆபத்து என்கிற அளவுக்கு அவனது நிலைமை மோசமாகிறது.
அந்த நிலையில் விவேக், ஹாஸ்டலில் பல வருடங்கள் முன் என்ன நடந்தது, அப்போது நடந்த சம்பவங்களுக்கும் இப்போது தான் பாதிக்கப்படுவதற்கும் தொடர்பு இருக்கிறதா என்பதையெல்லாம் தெரிந்துகொள்ளும் முயற்சியில் இறங்குகிறான்.
அவன் என்ன தெரிந்து கொள்கிறான் என்பதும், தனக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துக்களிலிருந்து அவனால் மீள முடிந்ததா இல்லையா என்பதும் மீதிக் கதை…
கதை விவேக் என்ற மாணவனைச் சுற்றி நடந்தாலும் கதையின் ஹீரோ, ஹீரோயின் எல்லாமே சைத்தா ஆச்சார்தான். யக்சகானா நடனக் கலைஞராக திறமை காட்டுவதும், குழந்தையில்லாத ஏக்கத்தில் தன்னுடன் வாழ்கிற மனிதர்களையே பலி கொடுக்கிற அளவுக்கு கொடூரமான பெண்ணாக உருமாறி நிற்பதுமாக வேற லெவல் என்று சொல்கிற அளவில் நடித்திருக்கிறார்.

