HomeGeneralஜீவாவின் ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!

ஜீவாவின் ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!

Published on

நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அட்டகாசமான போஸ்டருடன் படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகும் இப்படம், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்பப் பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட குடும்பக் கதையாக உருவாகி வருகிறது.
மதுரையில் படப்பிடிப்பின்போது காட்சிகளை நேரில் பார்த்த பொதுமக்கள் உணர்ச்சிவசப்பட்டு படக்குழுவினரைப் பாராட்டியதாகக் கூறப்படுகிறது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
‘தெனாவட்டு’ திரைப்படத்திற்குப் பிறகு, முழுக்க முழுக்க கிராமப் பின்னணியில் ஜீவா நடிக்கும் படமாக ‘தகப்பன்’ உருவாகி வருகிறது. சமீபத்தில்  வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘TTT’ திரைப்படத்திற்குப் பிறகு, மதுரை மண்ணின் மண்வாசனையுடன் கூடிய கதையில் ஜீவா நடிப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது திரைப்பயணத்தில் வித்தியாசமான படைப்பாக இப்படம் அமையும் எனப் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இப்படத்தில் ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். அனிருத் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய அனுபவம் கொண்ட சுயாதீன இசைக்கலைஞர் மார்ஷல் ராபின்சன் (Marshall Robinson) இசையமைக்கிறார். படத்தின் உணர்வுபூர்வமான கதைக்களத்திற்கு அவரது இசை கூடுதல் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
K. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு M. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பையும், K.B. நந்தபாலன் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர். சண்டைக் காட்சிகளை மகேஷ் மேத்யூ வடிவமைக்கிறார். ஆடைப் பொறுப்பாளர் M. செல்வராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பை ரிதேஷ் செல்வராஜ் மேற்கொள்கின்றனர். ஒலிப்பதிவை T. உதய் குமார் கவனிக்கிறார். புகைப்படங்களை தேனி அன்பு பதிவு செய்கிறார். நிர்வாகத் தயாரிப்பாளராக R. பாலகுமார், விநியோகத் தலைவராக பிரிதிவிராஜா சின்னசாமி, மக்கள் தொடர்பாளராக யுவராஜ், விளம்பர வடிவமைப்பாளராக தினேஷ் அசோக் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் பெற்றுள்ளது. மேலும், படம் முடிவடைவதற்கு முன்பே படத்தின் சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமையை ZEE தமிழ் நிறுவனம் மற்றும் OTT உரிமையை Zee5 நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
படத்தின் போஸ்டர்களுக்கு ரசிகர்களிடம் கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து, டிசம்பர் 24-ஆம் தேதி வெளியாகவுள்ள ‘தகப்பன்’ திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழு பரபரப்பாக ஈடுபட்டு வருகிறது. குடும்ப உறவுகளையும் உணர்வுகளையும் மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படம், ஜீவாவின் திரைப்பயணத்தில் முக்கியமான படைப்பாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Latest articles

பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றையே மாற்றி எழுதிய ‘பாகுபலி’ நாயகன் பிரபாஸிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றையே மாற்றி எழுதிய 'பாகுபலி' நாயகன்! தெலுங்கு சினிமாவை பான் இந்தியா தளத்திற்குக் கொண்டு சென்ற...

‘கணம்’ ஸ்ரீ கார்த்திக் இயக்கும் புதிய தமிழ் படத்தில் இணைந்தார் ருக்மிணி வசந்த்!

‘சப்த சாகரதாச்சே எல்லோ’ மற்றும் ‘காந்தாரா: சாப்டர் 1’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ருக்மிணி வசந்த், ‘கணம்’...

முகேன் ராவ் நடிக்கும் ‘மைலோ’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

  https://www.youtube.com/watch?v=SsHZ0uDoew4 செல்ல நாயை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மைலோ’ திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள்...

ஏகன் நடித்துள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்திற்கு கிடைத்து வரும் நேர்மறையான வரவேற்பால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

காதல், நகைச்சுவை, மனதைத் தொடும் உணர்வுகள் என அனைத்து அம்சங்களையும் கொண்ட மனதுக்கு இதமான காதல் கதைகள், தலைமுறைகளைக்...

More like this

பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றையே மாற்றி எழுதிய ‘பாகுபலி’ நாயகன் பிரபாஸிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றையே மாற்றி எழுதிய 'பாகுபலி' நாயகன்! தெலுங்கு சினிமாவை பான் இந்தியா தளத்திற்குக் கொண்டு சென்ற...

‘கணம்’ ஸ்ரீ கார்த்திக் இயக்கும் புதிய தமிழ் படத்தில் இணைந்தார் ருக்மிணி வசந்த்!

‘சப்த சாகரதாச்சே எல்லோ’ மற்றும் ‘காந்தாரா: சாப்டர் 1’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ருக்மிணி வசந்த், ‘கணம்’...

முகேன் ராவ் நடிக்கும் ‘மைலோ’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

  https://www.youtube.com/watch?v=SsHZ0uDoew4 செல்ல நாயை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மைலோ’ திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள்...