HomeGeneralசிட்டுக்குறிஞ்சி சினிமா விமர்சனம்

சிட்டுக்குறிஞ்சி சினிமா விமர்சனம்

Published on

ஆன்மா, முன்ஜென்மம் என பரபரப்பு பற்றிக்கொள்ளும் கதை, திரைக்கதையில் ‘சிட்டுக்குறிஞ்சி.’

ஹீரோ திருமணமான ஒரு பெண்ணை அவளது கணவன் இல்லாத நேரத்தில் சந்தித்து, அவளது வரவேற்பிலும் உணவு உபசரிப்பிலும் மகிழ்ச்சியடைந்து, அவளின் கிறக்கமான பார்வையாலும் சில நடவடிக்கைகளாலும் ஈர்க்கப்படுகிறார். அவர்கள் அடுத்தகட்டமாக உடலளவில் இணைவதற்கு வாய்ப்பு என்பதுபோல் அந்த காட்சிகள் கிளுகிளுப்பாக நகர, திடீரென்று ஊர் கூடி அவர் அந்த ஊருக்கே வரவில்லை, யாரையும் பார்க்கவில்லை என்பதை நிரூபிக்கிறது.

அப்படியெனில் முன்பு நடந்த சம்பவங்களுக்கு என்ன காரணம்? அதை விளக்குவதற்கு வைக்கப்பட்டுள்ள பிளாஷ்பேக் 1980 காலகட்டத்திற்கு போய் வந்தது போன்ற ஃபீல்குட் உணர்வையும், அதிர்ச்சியையும் கலந்து தருகிறது.

இருவேறு காலகட்டங்களில் இருவேறு தோற்றங்களில் ரெஜித் மேனன் காதலுக்காக காதலிக்காக எதை வேண்டுமானாலும் இழக்கத் தயாராகிற கனமான பாத்திரத்தில் மனதில் பதியும்படி நடித்திருக்க, ஒரு காலகட்டத்தில் அவருக்கு ஜோடியாக வருகிற தீப்ஷிகாவுக்கு கனமான தருணங்கள் அதிகம். நடிப்பு கச்சிதம். இன்னொரு காலகட்டத்தில் அவருக்கு ஜோடியாக வருகிற நக்ஷா சரணும், ஸ்ரீராம் கார்த்திக், வி ஜே பப்பு, ஜி எம் குமா, தேனி முருகன், கராத்தே ராஜா, ‘பருத்திவீரன்’ சுஜாதா உள்ளிட்டோரும் நடிப்பில் குறைவைக்கவில்லை.

கொடைக்கானலின் அழகை கண்களுக்கு விருந்தாக்கியுள்ளது ஃபிரான்சிஸ் ராஜ்குமாரின் ஒளிப்பதிவு. அறிமுக இசையமைப்பாளர் மாறா பின்னணி இசையாலும் பாடல்களாலும் உயிரோட்டம் தருகிறார்.

ஆணவக்கொலை சார்ந்த கதைகளை விதவிதமாக பார்த்திருக்கிற நமக்கு இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம் அதையே வித்தியாசமான படைப்பாக்கி பரிமாறியிருப்பதைப் பார்ப்பது புது அனுபவம்.

Rating 3 / 5

Latest articles

ஜெடூசி சினிமா விமர்சனம்

திருவண்ணாமலை சுற்று வட்டாரத்திலுள்ள குறிப்பிட்ட ஒரு கல்லூரியைச் சார்ந்த மாணவிகள் ஒரு சிலரும், பேராசிரியரும் துணை முதல்வரும் அடுத்தடுத்து...

டெலிவரி பாய் சினிமா விமர்சனம்

'தேவையான நேரத்தில் கிடைத்த உதவிக்கு நன்றிக் கடன் செலுத்த மறந்து விடாதீர்கள்' என்று கருத்து சொல்கிற கமர்ஷியல் ஆக்சன்...

தியாகராஜா குமாரராஜாவின் தனித்துவமான திரைமொழியில், ஜனவரி 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது ‘பாக்கெட் நாவல்’!

சில கூட்டணிகள் மீண்டும் இணையும் போது ரசிகர்களிடம் இயல்பாகவே எதிர்பார்ப்பு அதிகரிக்கும். அந்த வகையில், ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்குப்...

ஆக்டோபஸ் வெப் சீரிஸ் விமர்சனம்

ஒரு குடியிருப்பு. அதில் ஒரு வீட்டில் அடிப்பது, உதைப்பது, சுடு வைப்பது என மனைவியை கொடுமைப்படுத்துபவன். அதையெல்லாம் பார்த்து...

More like this