ஒரு குடியிருப்பு. அதில் ஒரு வீட்டில் அடிப்பது, உதைப்பது, சுடு வைப்பது என மனைவியை கொடுமைப்படுத்துபவன். அதையெல்லாம் பார்த்து அதிர்ச்சியும் வேதனையும் அடைகிற அக்கம் பக்கத்தினர். ஒரு கட்டத்தில் அவனால் கொடுமை அனுபவித்துக் கொண்டிருந்த மனைவி மாயமாகிவிட, அவளை அவன் கொலை செய்திருக்கலாம் என அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம். விவகாரம் போலீஸ், கோர்ட் என்றெல்லாம் போகிறது.
கேஸில் சம்பந்தப்பட்ட கணவர் சிலபல விஷயங்களை எடுத்துச் சொல்கிறார். அது அவர் மீது கேஸ் போட்டவர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் ஷாக்காகத்தான் இருக்கிறது. அவர் சொல்லும் விஷயங்களிலிருந்து காணாமல் போன மனைவிக்கு என்னவானது என்பது உட்பட எல்லா மர்மங்களுக்கும் விடை கிடைக்கிறது. இயக்கம் ஜெயச்சந்திர ஹாஸ்மி
தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களைக் கூர்மையாக கவனிக்கும் இயல்புள்ள பெண்ணாக அர்ச்சனா. மனைவியை கொடுமைப்படுத்தும் நபரை எப்படியாவது சட்டத்தின் முன் கொண்டு நிறுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து, நினைத்ததை செய்து முடிக்கிற கதாபாத்திரத்தை உணர்ச்சிகரமான நடிப்பால் கவனிக்க வைக்கிறார்.
சைக்கோ மனநிலை கொண்டவராகவும், அதற்கு நேர்மாறானவராகவும் நடிப்பில் இருவேறு பரிமாணங்களை காட்டியிருக்கிறார் அஸ்வின். அவருக்கு மனைவியாக சித்து குமரேசனின் கேரக்டர் தனித்துவமானதாகவும் நடிப்பு தரமாகவும் இருக்கிறது.
சிவா அரவிந்த் உட்பட மற்றவர்களின் ஈடுபாடான நடிப்பு சீரிஸுக்கு பலம். பின்னணி இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் மூன்றும் கதையோட்டத்தை தாங்குகின்றன.
ஆக்டோபஸ் நவம்பர் 27-ம் தேதியிலிருந்து ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமாகும் இந்த முழுக்க முழுக்க விறுவிறுப்பான கிரைம் திரில்லர் அனுபவம் தரும் ஆக்டோபஸை பார்க்க தாராளமாக நேரம் ஒதுக்கலாம். தாறுமாறான திருப்தியில் மிதக்கலாம்.
Rating 3.5 / 5 

