HomeGeneralபிரேம்ஜி அமரன் நடிக்கும் பரபரப்பான கிரைம் திரில்லர் திரைப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தீவிரம்!

பிரேம்ஜி அமரன் நடிக்கும் பரபரப்பான கிரைம் திரில்லர் திரைப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தீவிரம்!

Published on

பிரேம்ஜி அமரன் நடிக்கும் புதிய படம் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகிறது. போஸ் வெங்கட், சஸ்திக், நயனா சாய் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
‘வல்லமை’, ‘நரி வேட்டை’ உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றிய சி. கணேஷ்குமார், அபிராமி புரொடக்ஷன்ஸ்’ லாவண்யா அபிராமி தயாரிக்கும் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இளம்பெண் ஒருவரை யார் கொலை செய்தார்கள், எதற்கு செய்தார்கள் என்பதை மர்ம முடிச்சுகளோடு பார்வை சொல்லும் இந்த படத்துக்கு பிரேம்ஜி இசையும் அமைக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை குறித்து பேசிய இயக்குநர் சி. கணேஷ் குமார், “தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது. இதுவரை ஏற்றிராத வேடத்தில் பிரேம்ஜி அமரன் இந்த திரைப்படத்தில் நடிக்கிறார். போஸ் வெங்கட் போன்ற அனுபவமிக்க நடிகர்களோடு பணிபுரிவது சிறந்த அனுபவமாக உள்ளது” என்றார்.
சிற்பி குமார் ஒளிப்பதிவு செய்ய இயக்குநர் சி. கணேஷ்குமாரே படத்தொகுப்பையும் கையாள்கிறார். சண்டைப் பயிற்சி: எஸ். ஆர். ஹரி முருகன்.
படம் படப்பிடிப்பின் இறுதி கட்டத்தில் உள்ளது. அனைத்து பணிகளையும் இதே வேகத்தில் முடித்து படத்தை விரைவில் வெளியிட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Latest articles

மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ் அடிக்க, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணைந்துள்ள பிரம்மாண்டமான புதிய திரைப்படம் பூஜையுடன தொடங்கியது!

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் மாஸ்டர் ஸ்டோரி டெல்லர் சுகுமார் மீண்டும் இணையும் பெரிதும் எதிர்பார்க்கப்படும்...

பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது பா. இரஞ்சித்தின் பிரமாண்ட அப்போகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம் ‘வேட்டுவம்.’

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில், நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ள ‘வேட்டுவம்’...

அர்ஜுன் தாஸின் சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் ‘ஜான் டோ’ நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது!!

அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படமான ‘ஜான் டோ’ வரும் நவம்பர் 13ஆம் தேதி...

ஜி.வி.பிரகாஷ் – கவுதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் மிரட்டும் திகில் ஹாரர் திரில்லர் ’13’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

'டார்லிங்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு 11 ஆண்டுகளுக்குப் பிறகு, இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் மீண்டும்...

More like this