HomeGeneralஅமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம் 'ப்ளாக் நைட் பாய்ஸ்' பூஜையுடன்...

அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

Published on

அமல் அஜித் நாயகனாகவும், நடிகை தேவயானியின் மகள் பிரியங்கா ராஜகுமாரன் நாயகியாகவும் நடிக்கும் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.
தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த அமல் அஜித், சமூக வலைதளங்களில் தனது வீடியோக்கள் மூலமாகவும் கவனம் ஈர்த்தவர். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமாக அறியப்படும் இவர், தற்போது ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ திரைப்படத்தில்  கதாநாயகனாக நடிக்கிறார்.
நடிகை தேவயானி இயக்குநர் ராஜகுமாரன் தம்பதிகளின் மகளான பிரியங்கா ராஜகுமாரன், இப்படத்தில் கதாநாயகியாக அமல் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில் அழகான காதல் கதையுடன், அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான முழுமையான ஃபேமிலி என்டர்டெய்னராக ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ திரைப்படம் உருவாகி வருகிறது. காதல், பொழுதுபோக்கு என ரசிகர்களைக் கவரும் அனைத்து அம்சங்களும் நிறைந்த படமாக இது அமையும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தயாரிப்பு மேற்பார்வையாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட க.இ.மணிகண்டன் என்கிற விமல் G, அந்த அனுபவத்தின் அடிப்படையில் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ திரைப்படத்தை மிகச் சிறப்பாக உருவாக்கி வருகிறார். திரைப்படத் தயாரிப்பின் பல்வேறு அம்சங்களில் பெற்ற அனுபவத்தையும், திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்புத் திறனையும் பயன்படுத்தி, ரசிகர்களைக் கவரும் வகையில் இப்படத்தை உருவாக்குவதில் அவர் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.
இப்படத்தை செம்பர் V. முருகேசன் இயக்குகிறார். ஒளிப்பதிவை மனோஜ் பரமஹம்சா மேற்கொள்கிறார். புரடக்சன் டிசைனராக T. முத்துராஜ் பணியாற்றுகிறார். ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைக்கிறார்
எடிட்டிங் பணிகளை இளங்கோ கவனிக்கிறார். கலை இயக்குநர் கண்ணன் S, சண்டைப் பயிற்சியில் P.C. ஸ்டண்ட்ஸ், நடனத்தில் பாபா பாஸ்கர், பாடல் வரிகளில் பா. விஜய் ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

Latest articles

‘ராமாயணா’ திரைப்படத்திலிருந்து ராமர் – சீதையின் அன்பை பேசும் ‘மங்கள வண்ணமே’ பாடல் வெளியானது!

https://www.youtube.com/watch?v=mm1Qm8JT0Gw நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணா’ திரைப்படத்தின் இசைப் பயணத்தில் மற்றுமொரு அழகான படைப்பாக ‘மங்கள வண்ணமே’ பாடல் வெளியாகியுள்ளது. இந்தப்...

ஜெயராம் – அஸ்வின் நடிக்கும் ‘குட் நியூஸ்’ படப்பிடிப்பு நிறைவு!

அறிமுக இயக்குநர் நாகேந்திர முருகன் இயக்கத்தில், இயக்குநர் பாண்டிராஜ் வசனங்கள் எழுதும் குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படம்  ‘குட் நியூஸ்’...

‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஷரஃபுதீன் – சங்கீத் பிரதாப் நடித்த 'இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்' திரைப்படம்,...

“‘ஹைக்கூ’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் மனதுக்கு நெருக்கமானது” -நடிகை ஸ்ரீதேவி!

படப்பிடிப்பு முடிந்த பிறகும் சில கதாபாத்திரங்கள் நடிகர்களின் மனதை விட்டு எளிதில் நீங்குவதில்லை. நடிகை ஸ்ரீதேவிக்கு ‘ஹைக்கூ’ திரைப்படம்...

More like this