HomeGeneral‘ராமாயணா’ திரைப்படத்திலிருந்து ராமர் - சீதையின் அன்பை பேசும் ‘மங்கள வண்ணமே’ பாடல் வெளியானது!

‘ராமாயணா’ திரைப்படத்திலிருந்து ராமர் – சீதையின் அன்பை பேசும் ‘மங்கள வண்ணமே’ பாடல் வெளியானது!

Published on

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணா’ திரைப்படத்தின் இசைப் பயணத்தில் மற்றுமொரு அழகான படைப்பாக ‘மங்கள வண்ணமே’ பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடல், ராமர் மற்றும் சீதையின் வாழ்க்கைப் பயணத்தை அழகிய காட்சிகள் மூலம் நம் கண்முன் கொண்டுவருகிறது. பிரம்மாண்டமான இயற்கைக் காட்சிகள், கம்பீரமான அரண்மனைப் பின்னணிகள், ராமர், சீதையின் திருமணக் காட்சிகள் எனப் பல அழகான தருணங்கள் இடம்பெற்றுள்ளது.
இத்திரைப்படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். ‘மங்கள வண்ணமே’ பாடல் தற்போது வேர்ல்ட் ஆஃப் ராமாயணா மற்றும் டி-சீரிஸ் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல்களில் வெளியாகியுள்ளது. மேலும், அனைத்து இசை ஸ்ட்ரீமிங் தளங்களிலும் இப்பாடலைக் கேட்கலாம். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் இப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
அரண்மனையின் பிரம்மாண்டம், புனிதமான திருமண நிகழ்வுகள், அயோத்திக்கு வெளியே அவர்களது வாழ்க்கைப் பயணம் எனப் பல்வேறு தருணங்களை இப்பாடல் காட்சிப்படுத்துகிறது. வில், அம்பு மற்றும் வாளுடன் ராமர் தோன்றும் காட்சிகள் பாடலின் காட்சி அழகை மேலும் மெருகேற்றுகின்றன. பரந்த இயற்கைக் காட்சிகள், கதையின் பின்னணியாக அமையும் உலகத்தை நம் கண்முன் கொண்டு வருகின்றன. ராமர், சீதைக்கு இடையிலான பாசப்பிணைப்பையும் ‘மங்கள வண்ணமே’ பாடல் அழகாக வெளிப்படுத்துகிறது. அவர்களது திருமணக் காட்சிகள் இணையின் மகிழ்ச்சியையும் திருமணத்தின் புனிதத்தையும் எடுத்துரைக்கின்றன.
அதே நேரத்தில், வனவாசப் பயணத்தின் காட்சிகள் அவர்களது உறவின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்துகின்றன. அரண்மனையின் ஆடம்பரத்திலிருந்து விலகி, கடமை, நம்பிக்கை, ஒற்றுமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட புதிய வாழ்க்கையை இருவரும் தொடங்கும் தருணங்கள், அவர்களது உறவை மேலும் நெருக்கமாகப் புரிந்துகொள்ள உதவுகின்றன.
ஏ.ஆர். ரஹ்மானின் இசையமைப்பும், டாக்டர் குமார் விஸ்வாஸின் இந்திப் பாடல் வரிகளும் இந்தப் பாடலுக்கு வலுசேர்க்கின்றன. இந்திப் பதிப்பில் அற்ஜித் சிங் மற்றும் ஷ்ரேயா கோஷல் தங்களது குரல்களால் பாடலுக்கு உயிரூட்டியுள்ளனர். ஒவ்வொரு மொழிப் பதிப்பிலும் அந்தந்த மொழிக்கேற்ற பாடகர்கள் மற்றும் பாடலாசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழ்ப் பதிப்பில் அபய் ஜோத்புர்கர் மற்றும் சைந்தவி பாடியுள்ளனர். தமிழ்ப் பாடல் வரிகளை கார்த்திக் நேதா எழுதியுள்ளார்.
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணா’ படத்திற்கு இசையமைத்தது குறித்தும், ‘மங்கள வண்ணமே’ பாடல் குறித்தும் ஏ.ஆர். ரஹ்மான் பகிர்ந்து கொண்டதாவது, “‘ராமாயணம்’ என்பது பல தலைமுறைகளாக மக்களின் மனதில் இடம்பெற்றிருக்கும் கதை. அத்தகைய கதையை இசையின் வழியாக அணுகியது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவம். சீதையின் உறவு தூய்மையானது. அந்த உணர்வை இசையில் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். ‘மங்கள வண்ணமே’ பாடலின் மூலம் கேட்பவர்கள் அந்த அன்பையும் பக்தியையும் உணர்வார்கள். அந்த மெல்லிசையில் தங்களுக்கான தனிப்பட்ட உணர்வைக் கண்டடைவார்கள் என்றும் நம்புகிறேன். சில கதைகளை வார்த்தைகளால் விளக்க வேண்டியதில்லை. அவற்றை உணர்ந்தால் மட்டுமே போதும்” என்றார்.
‘மங்கள வண்ணமே’ பாடல் குறித்துப் பாடகர் அபய் ஜோத்புர்கர் கூறியதாவது, “பல தலைமுறைகளாக நமது வாழ்க்கையிலும் கலாசாரத்திலும் கலந்துள்ள ‘ராமாயணா’ கதை திரைப்படமாகும்போது அதில் இடம்பெற்றுள்ள ‘மங்கள வண்ணமே’ பாடலை பாடியிருப்பது மகிழ்ச்சி. குறிப்பாக, ராமர், சீதைக்கு இடையிலான அன்பையும் ஒற்றுமையையும் இந்தப் பாடல் வெளிப்படுத்துகிறது. அவர்களது உறவில் இருக்கும் நேர்மையும் உண்மைத்தன்மையும் அந்தக் காதலைக் காலத்தால் அழியாததாக மாற்றுகின்றன. அந்த உணர்வுகளை எனது பாடலில் வெளிப்படுத்த முயன்றேன்” என்றார்.
பாடலாசிரியர் டாக்டர் குமார் விஸ்வாஸ் பகிர்ந்து கொண்டதாவது, “ஸ்ரீராமரின் தெய்வீகத் திருமணத்தைக் கொண்டாடும் பாடலை எழுதுவதற்காக நான் பலமுறை அமர்ந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் சில வரிகளை எழுதி, மீண்டும் அவற்றைப் படித்துப் பார்த்தபோது, பரம்பொருளின் திருமணத்தின் பிரம்மாண்டம், நான் என் வார்த்தைகளால் வெளிப்படுத்தக்கூடியதைவிட ஆயிரம் மடங்கு உயர்ந்ததாக இருக்கும் என்று உணர்ந்தேன். இறுதியில், எனது எழுத்தில் என்னால் திருப்தியடைய முடியாத நிலையில், அன்னை சரஸ்வதியை வேண்டிப் பிரார்த்தித்தேன். இந்தப் படைப்பு இன்று எந்த வடிவத்தைப் பெற்றிருந்தாலும், அது அன்னையின் படைப்பே என்று நம்புகிறேன்.
ஸ்ரீராமருக்கும் அன்னை சீதைக்கும் இடையிலான பந்தம் பல பிறவிகளைக் கடந்தது. அதை ஒரு யுகத்திற்குள் மட்டும் அடக்கிவிட முடியாது. ஸ்ரீராமர் சூரிய வம்சத்தில் அவதரித்தார். அன்னை சீதையோ பூமித்தாயின் மடியில் தோன்றினார். சூரியன் அரச அதிகாரத்தையும் இறையாண்மையையும் குறிக்கிறது. அதன் ஒளி பூமியைப் பிரகாசிக்கச் செய்கிறது. மறுபுறம், பூமி விவசாயம் மற்றும் உயிர்களுக்கு உணவளிக்கும் ஆற்றலைக் குறிக்கிறது. சூரியனின் ஒளியைப் பெற்று, அதை உணவாகவும் உயிராகவும் மாற்றுகிறது. எனவே, இவர்களது இணைவு தவிர்க்க முடியாத ஒன்று மட்டுமல்ல; உயிர்களின் தொடர்ச்சிக்கும் வாழ்க்கையின் நிலைத்தன்மைக்கும் அடிப்படையான ஒன்றாகும்” என்றார்.

Latest articles

அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

அமல் அஜித் நாயகனாகவும், நடிகை தேவயானியின் மகள் பிரியங்கா ராஜகுமாரன் நாயகியாகவும் நடிக்கும் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்' திரைப்படத்தின்...

ஜெயராம் – அஸ்வின் நடிக்கும் ‘குட் நியூஸ்’ படப்பிடிப்பு நிறைவு!

அறிமுக இயக்குநர் நாகேந்திர முருகன் இயக்கத்தில், இயக்குநர் பாண்டிராஜ் வசனங்கள் எழுதும் குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படம்  ‘குட் நியூஸ்’...

‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஷரஃபுதீன் – சங்கீத் பிரதாப் நடித்த 'இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்' திரைப்படம்,...

“‘ஹைக்கூ’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் மனதுக்கு நெருக்கமானது” -நடிகை ஸ்ரீதேவி!

படப்பிடிப்பு முடிந்த பிறகும் சில கதாபாத்திரங்கள் நடிகர்களின் மனதை விட்டு எளிதில் நீங்குவதில்லை. நடிகை ஸ்ரீதேவிக்கு ‘ஹைக்கூ’ திரைப்படம்...

More like this

அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

அமல் அஜித் நாயகனாகவும், நடிகை தேவயானியின் மகள் பிரியங்கா ராஜகுமாரன் நாயகியாகவும் நடிக்கும் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்' திரைப்படத்தின்...

ஜெயராம் – அஸ்வின் நடிக்கும் ‘குட் நியூஸ்’ படப்பிடிப்பு நிறைவு!

அறிமுக இயக்குநர் நாகேந்திர முருகன் இயக்கத்தில், இயக்குநர் பாண்டிராஜ் வசனங்கள் எழுதும் குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படம்  ‘குட் நியூஸ்’...

‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஷரஃபுதீன் – சங்கீத் பிரதாப் நடித்த 'இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்' திரைப்படம்,...