HomeGeneral“‘ஹைக்கூ’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் மனதுக்கு நெருக்கமானது” -நடிகை ஸ்ரீதேவி!

“‘ஹைக்கூ’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் மனதுக்கு நெருக்கமானது” -நடிகை ஸ்ரீதேவி!

Published on

படப்பிடிப்பு முடிந்த பிறகும் சில கதாபாத்திரங்கள் நடிகர்களின் மனதை விட்டு எளிதில் நீங்குவதில்லை. நடிகை ஸ்ரீதேவிக்கு ‘ஹைக்கூ’ திரைப்படம் அப்படியொரு அனுபவமாக அமைந்துள்ளது. தெலுங்கில் அறிமுகமான ‘கோர்ட்: ஸ்டேட் வெர்சஸ் நோபடி’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஸ்ரீதேவி, யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில், அக்டோபர் 23 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார் . பத்திரிகையாளர்கள், ஊடகத்தினருக்காகத் திரையிடப்பட்ட முன்னோட்டக் காட்சிகள் மற்றும் திரையரங்குகளில் படம் பார்த்த ரசிகர்களும் தனது நடிப்பை பாராட்டி வருவது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார் ஸ்ரீதேவி.
படம் குறித்து ஸ்ரீதேவி பகிர்ந்து கொண்டதாவது, “‘ஹைக்கூ’ படத்தில் என்னுடைய கதாபாத்திரம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என எதிர்பார்த்தேன். நான் எதிர்பார்த்தது போலவே, படத்தின் முன்னோட்டக் காட்சிகளிலேயே, குறிப்பாகப் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தினரிடமிருந்தும் ரசிகர்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒரு நடிகையாக நம் பணியை ரசிகர்கள் கொண்டாடுவதுதான் நமக்கு மனநிறைவு தரும். அந்த உணர்வை ‘ஹைக்கூ’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பும் வெளியான பின்பும் கொடுத்திருக்கிறது”.
மேலும், “இயக்குநர் யுவராஜ் கதையைச் சொன்னபோதே என் கதாபாத்திரத்தில் உணர்வுப்பூர்வமான பல அடுக்குகள் இருப்பதை உணர்ந்தேன். சில நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினாலும், டப்பிங் பணிகளை முடித்த பிறகும்கூட அந்தக் கதாபாத்திரத்திலிருந்து என்னால் எளிதாக வெளிவர முடியவில்லை. அந்தக் கதாபாத்திரத்தை இன்னும் என்னுள் சுமந்து கொண்டிருக்கிறேன். அந்த வகையில், ‘ஹைக்கூ’ திரைப்படத்தில் நடித்த அனுபவம் எனக்கு பொக்கிஷம். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநருக்கும் உடன் பணிபுரிந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” என்றார்.

Latest articles

ஹைக்கூ திரைப்படத்தில் என்னுடையது பெண்களின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரம்! -நடிகை ஃபெமினா ஜார்ஜ்

வசீகரமான தோற்றம் மற்றும் திறமையான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்துள்ள நடிகை ஃபெமினா ஜார்ஜ், ‘ஹைக்கூ’ படத்தின் மூலம் ஆழமான...

ஜோஜு ஜார்ஜ் இயக்கும் ‘பரிபாடி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

https://www.youtube.com/watch?v=cfHo9hBpas8 ‘பனி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் ஜோஜு ஜார்ஜ் எழுதி இயக்கும் புதிய படமான ‘பரிபாடி’ படத்தின் ஃபர்ஸ்ட்...

உற்சாகமாக நடந்த யோகி பாபு நடித்துள்ள ‘சிங்காரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

ராக் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘சிங்காரம்’ திரைப்படத்தை இயக்குநர் கே.வி. கதிர்வேலு இயக்கியுள்ளார். ஏ.எஸ்....

மாத்தூர் தொட்டிப்பாலத்தில் பறந்த ‘துரோகம் பழகு’ பட போஸ்டர்! வித்தியாசமான புரமோஷனில் படக்குழு!

கன்னியாகுமரி ரசிகர்களையும் பொதுமக்களையும் கவரும் வகையில், ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் போஸ்டரை ஆசியாவின் புகழ்பெற்ற பாலங்களில் ஒன்றான மாத்தூர்...

More like this