HomeMovie Reviewகோல்ட் கால் சினிமா விமர்சனம்

கோல்ட் கால் சினிமா விமர்சனம்

Published on

ஒரு விஷயத்தை பலரும் நம்புவதால் அதில் உண்மை இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

அப்படியொரு கருத்தை புதுமுகங்களின் நடிப்பில் தூவியிருக்கிற படம்.

தொழிலதிபர் ஒருவரின் டீனேஜ் பருவத்தை தொடுகிற மகன் கடத்தப்படுகிறான்.

‘கோல்ட் கால்’ மூலம் கிளையண்ட்களைப் பிடிக்கிற மார்க்கெட்டிங் வேலையிலிருக்கிற நான்கு இளைஞர்களை போலீஸ் தேடுகிறது. அதன் ஒரு பகுதியாக, அந்த நான்கு பேருக்கும் மார்க்கெட்டிங் வேலைக்கான பயிற்சி கொடுத்தவரை அழைத்துப் போய் அடித்து விசாரிக்கிறது.

அவர் என்ன சொல்கிறார்? கடத்தலுக்கும் அந்த நான்கு பேருக்கும் என்ன சம்பந்தம்?

இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லும் மீதிக்கதையில் எதிர்பாராத சில விஷயங்கள் நடக்கிறது. அதில் லேசான பரபரப்பு இருக்கிறது. இயக்கம் தம்பிதுரை

சித்து மூலிமணி, ஸ்ரீ வைஷ்ணவ், சந்தோஷ் எஸ் ஏ, கிருஷ்ணா விஜய் சந்திரன் கூட்டணி கையில் நல்ல வேலை இருந்தாலும் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் ஜாலியாக நாட்களைக் கடத்திக் கொண்டிருப்பது ஜென்ஸி தலைமுறை ரசித்து சிரிக்கும் விதத்தில் இருக்கிறது. எல்லாம் ஒரு கட்டம் வரைதான். கதை சீரியஸ் கட்டத்துக்கு தாவியபின் அவர்களும் சீரியஸ் மோடுக்கு மாறுகிறார்கள். நடிப்பு இயல்பாக இருக்கிறது.

நாயகிகள் அமிதா ரங்கநாத், நிஷா ஹெக்டே இருவரும் இளமை ததும்ப வருகிறார்கள். ஸ்க்ரிப்ட் சொல்வதை அலட்டிக் கொள்ளாமல் செய்திருக்கிறார்கள்.

வசனங்கள் பாலாஜி ராஜசேகர், தம்பிதுரை, நுதன், நிதின் சாம் ரெஜினோல்ட் உள்ளிட்ட நான்கு பேர் எழுதிய வசனங்களில் கலகலப்புக்கு முக்கியத்துவம் அதிகம்.

பிரணவ் கிரிதரனின் பின்னணி இசை, பாடல்கள், சரவணனின் ஒளிப்பதிவு கச்சிதம்.

ஜென்ஸி’க்களுக்கு ஏற்றபடி கதை சொல்லியிருப்பது இன்ட்ரெஸ்டிங். கதையின் திருப்பங்கள் கழுத்தைச் சுற்றி மூக்கைத் தொடுவது போலிருப்பது பலவீனம்.

Rating 2.5 / 5

Latest articles

 ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் இது போன்றதொரு மாஸான திரைப்படம் அவசியம் தேவை! -‘தி பாரடைஸ்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி

'நேச்சுரல் ஸ்டார்' நானி நடித்து, வரும் 24-ம் தேதி  உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'தி பாரடைஸ்' திரைப்படத்தின்...

இயக்குநர் பேரரசு, நடிகர் ரவிக்குமார் எழுதிய இரண்டு புத்தகங்களை வெளியிட்டார்!

எழுத்தாளராக அவதாரம் எடுத்துள்ள நடிகர் ரவிக்குமார், தான் எழுதிய 'நான் ராமசாமி பேசுறேங்க', 'மகிழ்வித்து மகிழ்' இரண்டு புத்தகங்களுக்கும்...

சண்டக்காரி சினிமா விமர்சனம்

ஜாலியாய் பார்த்து ரசிக்க ஒரு படம். லண்டனில் ஒரு பெரு நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞன் வெற்றியை, அவரது உயரதிகாரி மாயா...

More like this