HomeGeneral‘பைசன் காளமாடன்’ படத்திற்காக சைமா சிறந்த நடிகர் விருது வென்ற துருவ் விக்ரம் – இளம்...

‘பைசன் காளமாடன்’ படத்திற்காக சைமா சிறந்த நடிகர் விருது வென்ற துருவ் விக்ரம் – இளம் நடிகருக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை!

Published on

தென்னிந்திய திரையுலகில் சிறந்து விளங்கும் கலைஞர்களின் திறமையை அங்கீகரிக்கும் முக்கியமான விருது விழாக்களில் ஒன்றாக சைமா (SIIMA) விருதுகள் திகழ்கின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சைமா விருது விழாவில், ‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வழங்கியதற்காக துருவ் விக்ரம் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். இளம் நடிகராக தனது திரைப்பயணத்தில் துருவ் விக்ரமுக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், அவரது திறமைக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமையாக அமைந்துள்ளது.
தனது முதல் படத்திலிருந்தே மாறுபட்ட கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து ,நடிப்பில் கவனம் செலுத்தி வரும் துருவ் விக்ரம், ஒவ்வொரு படத்திலும் தன்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் தனது நடிப்பை மெருகேற்றி வருகிறார். இந்நிலையில், தனது மூன்றாவது திரைப்படத்திலேயே சைமா விருதுகளில் சிறந்த நடிகர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது அவரது இளம் திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்துள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தில், துணிவும் போராட்ட குணமும் நிறைந்த ஒரு விளையாட்டு வீரனின் கதாபாத்திரத்தை துருவ் விக்ரம் ஏற்றிருந்தார். கதாபாத்திரத்திற்கேற்ப தனது தோற்றம், உடல்மொழி மற்றும் நடிப்பு என பல்வேறு அம்சங்களில் அவர் மேற்கொண்ட மாற்றங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. குறிப்பாக கதாபாத்திரத்தின் உணர்வுகளையும், வாழ்க்கைப் போராட்டங்களையும் திரையில் வெளிப்படுத்திய விதத்தில் துருவ் விக்ரமின் நடிப்பு, படத்தின் முக்கிய அம்சமாக அமைந்தது.
ஒரு இளம் நடிகருக்கு மூன்றாவது திரைப்படத்திலேயே சிறந்த நடிகர் என்ற விருது கிடைப்பது, அவரது திரைப்பயணத்தில் மறக்க முடியாத தருணமாக அமைந்துள்ளது. குறிப்பாக ‘பைசன் காளமாடன்’ போன்ற அழுத்தமான கதாபாத்திரத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு நடித்ததற்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், துருவ் விக்ரமின் நடிப்புப் பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான அடையாளமாக மாறியுள்ளது.
அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் (Applause Entertainment) சார்பில் சமீர் நாயர், தீபக் சேகல், அதிதி ஆனந்த் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் சார்பில் பா. ரஞ்சித் ஆகியோர்  தயாரிப்பில் உருவான ‘பைசன் காளமாடன்’ படத்தில் அனுபமா பரமேஸ்வரன், இயக்குநர் ஆமீர், இயக்குநர் லால், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாறுபட்ட களத்தையும், அழுத்தமான கதைக்களத்தையும் கொண்ட இப்படத்தில் துருவ் விக்ரம் வெளிப்படுத்திய நடிப்பு, அவரது நடிப்புத் திறனை மேலும் அழுத்தமாக வெளிக்கொண்டு வந்துள்ளது.
துருவ் விக்ரமின் இந்த சைமா விருது, அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியையும், இளம் நடிகருக்கு பெருமையையும் சேர்த்துள்ளது. தொடர்ந்து மாறுபட்ட கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்து வரும் துருவ் விக்ரம், அடுத்ததாக ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’ எனும் ஆக்‌ஷன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். Mythri Movie Makers தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை கரண் அரவிந்த் குமார் இயக்குகிறார். சைமா விருது மூலம் கிடைத்துள்ள இந்த புதிய அங்கீகாரத்தைத் தொடர்ந்து, ஆக்‌ஷன் களத்தில் துருவ் விக்ரம் வெளிப்படுத்தவுள்ள அடுத்தகட்ட பரிமாணத்தைக் காண ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Latest articles

 ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் இது போன்றதொரு மாஸான திரைப்படம் அவசியம் தேவை! -‘தி பாரடைஸ்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி

'நேச்சுரல் ஸ்டார்' நானி நடித்து, வரும் 24-ம் தேதி  உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'தி பாரடைஸ்' திரைப்படத்தின்...

இயக்குநர் பேரரசு, நடிகர் ரவிக்குமார் எழுதிய இரண்டு புத்தகங்களை வெளியிட்டார்!

எழுத்தாளராக அவதாரம் எடுத்துள்ள நடிகர் ரவிக்குமார், தான் எழுதிய 'நான் ராமசாமி பேசுறேங்க', 'மகிழ்வித்து மகிழ்' இரண்டு புத்தகங்களுக்கும்...

சண்டக்காரி சினிமா விமர்சனம்

ஜாலியாய் பார்த்து ரசிக்க ஒரு படம். லண்டனில் ஒரு பெரு நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞன் வெற்றியை, அவரது உயரதிகாரி மாயா...

More like this

 ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் இது போன்றதொரு மாஸான திரைப்படம் அவசியம் தேவை! -‘தி பாரடைஸ்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி

'நேச்சுரல் ஸ்டார்' நானி நடித்து, வரும் 24-ம் தேதி  உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'தி பாரடைஸ்' திரைப்படத்தின்...

இயக்குநர் பேரரசு, நடிகர் ரவிக்குமார் எழுதிய இரண்டு புத்தகங்களை வெளியிட்டார்!

எழுத்தாளராக அவதாரம் எடுத்துள்ள நடிகர் ரவிக்குமார், தான் எழுதிய 'நான் ராமசாமி பேசுறேங்க', 'மகிழ்வித்து மகிழ்' இரண்டு புத்தகங்களுக்கும்...