HomeCinemaகுஜராத்தி திரையுலகின் முதல் பான் இந்திய படைப்பாக ‘ஸ்ரீ கேசரி நந்தன்.' விருது பெற்ற தமிழ்த்...

குஜராத்தி திரையுலகின் முதல் பான் இந்திய படைப்பாக ‘ஸ்ரீ கேசரி நந்தன்.’ விருது பெற்ற தமிழ்த் திரைப்பட இயக்குநர் சபரிநாதன் முத்துப் பாண்டியன் இயக்குகிறார்.

Published on

குஜராத்தி சினிமாவை தேசிய மற்றும் சர்வதேச அளவில் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், குஜராத்தி திரையுலகின் முதல் பான் இந்தியா திரைப்படமாக,  மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது ‘ஸ்ரீ கேசரி நந்தன்.’
தென்னிந்திய மற்றும் குஜராத்தி கலைஞர்களின் தனித்துவமான கூட்டணி
இந்த பிரமாண்ட திரைப்படத்தை, விருது பெற்ற தமிழ்த் திரைப்பட இயக்குநர் சபரிநாதன் முத்துப் பாண்டியன் எழுதி இயக்குகிறார்.
பிரபல நடிகர்கள் அர்பித் ரங்கா, மௌலிக் சௌஹான் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அவர்களுடன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திறமையான கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.
நம்பிக்கை, பக்தி, பாரம்பரியம், மாற்றம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு குஜராத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய மதிப்புகளை இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கியமான முயற்சியாக இந்த படம் உருவாகிறது.
படம் குஜராத்தி, இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் பெங்காலி என மொத்தம் 7 இந்திய மொழிகளில், 2027-ம் ஆண்டு ராம நவமி தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
சர்வதேச தரத்திலான காட்சியமைப்பை உருவாக்குவதற்காக, புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் சுபாஷ் தண்டபாணி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
புகழ்பெற்ற கன்னட இசையமைப்பாளர் அபிநந்தன் காஷ்யப் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.
மஹிபால் சிங் ரணாவத், ராஜேஷ் தாக்கூர், ஹிரேன் படேல் மற்றும் பரேஷ் ஜக்டா ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளனர்.
குஜராத்தி சினிமாவுக்கு புதிய அடையாளத்தை உருவாக்கும் இந்த படம், இந்திய சினிமாவின் பல்வேறு பிராந்தியங்களையும் கலைஞர்களையும் ஒருங்கிணைக்கும்முக்கியமான படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest articles

மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ் அடிக்க, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணைந்துள்ள பிரம்மாண்டமான புதிய திரைப்படம் பூஜையுடன தொடங்கியது!

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் மாஸ்டர் ஸ்டோரி டெல்லர் சுகுமார் மீண்டும் இணையும் பெரிதும் எதிர்பார்க்கப்படும்...

பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது பா. இரஞ்சித்தின் பிரமாண்ட அப்போகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம் ‘வேட்டுவம்.’

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில், நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ள ‘வேட்டுவம்’...

அர்ஜுன் தாஸின் சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் ‘ஜான் டோ’ நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது!!

அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படமான ‘ஜான் டோ’ வரும் நவம்பர் 13ஆம் தேதி...

ஜி.வி.பிரகாஷ் – கவுதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் மிரட்டும் திகில் ஹாரர் திரில்லர் ’13’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

'டார்லிங்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு 11 ஆண்டுகளுக்குப் பிறகு, இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் மீண்டும்...

More like this