HomeGeneralசூப்பர் மேன் இல்ல, ஆனா ஒரு 'சூப்பர் பவர் இருக்கு! -விரைவில் வெளியாகும் 'பீப்' படம்...

சூப்பர் மேன் இல்ல, ஆனா ஒரு ‘சூப்பர் பவர் இருக்கு! -விரைவில் வெளியாகும் ‘பீப்’ படம் குறித்து நடிகர் ராகவ்

Published on

‘எந்திரன்’, ‘நஞ்சுபுரம்’, ‘வேலாயுதம்’, ‘கல்யாண சமையல் சாதம்’ உள்ளிட்ட படங்களில் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகர் ராகவ். இவரது நடிப்பில் அடுத்ததாக ‘பீப்’ திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இயக்குநர் இல. சண்முகசுந்தர் இயக்கியுள்ள இப்படம் ஒரு கிரைம் திரில்லர் ஆக உருவாகி இருக்கிறது.
படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் படம் குறித்தும், படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் பகிர்ந்து கொண்டார் நடிகர் ராகவ்.
“நாம் ஒரு விஷயம் கேட்க வேண்டாம் அல்லது கேட்கக் கூடாது என அதை கட் பண்ண நினைத்தால் அந்த இடத்தில் ஒரு ‘பீப்’ போடுகிறோம் அதாவது துண்டிக்கப்பட்ட குரல்கள் என்று சொல்வார்களே அதுபோல சொல்லப்படாதவை என்று இந்த ‘பீப்’ டைட்டிலுக்கு அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம்.
அந்த வகையில் வழக்கமாக நிறைய சொல்லப்படாத விஷயங்களை இந்த படத்தில் தொட்டிருக்கிறோம். அதாவது படம் பார்ப்பவர்களின் எதிர்பார்ப்பை குறிவைக்கும் ஒரு க்ரைம் திரில்லர் என்று சொன்னால் சரியாக இருக்கும்.
படத்தின் ஹீரோவுக்கு ஒரு சூப்பர் பவர் இருக்கு என்றாலும் அவர் சூப்பர் மேன் கிடையாது. நான்கு டிஜிட் பெருக்கல் கணக்கைக் கூட சிலர் உடனடியாக விடை சொல்கிறார்களே.. அதுபோல இந்த ஹீரோவுக்கும் ஒருவிதமான சூப்பர் பவர் இருக்கு. அதேசமயம் சூப்பர் பவர் என்பது நார்மலான ரியல் லைஃப்பில் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை தான் இதில் அழகாக உருவாக்கி இருக்கிறோம்.
என்னுடைய கதாபாத்திரத்தின் மேனரிசம் எதுவுமே எனது சொந்த உருவாக்கம் இல்லை.  அந்த கதாபாத்திரத்திற்கு இயக்குநர் உருவாக்கியதை நான் வெளிப்படுத்தி இருக்கிறேன். படத்தை பார்த்த என் மனைவியே உன்னை வேறு மாதிரி காட்டி இருக்கிறார் இயக்குநர் என்று ஆச்சரியப்பட்டார்.
இரண்டு பாடல்கள் தான் படத்தில் இருக்கிறது ஆனால் ஒரு க்ரைம் திரில்லர் என்பதால் இசையமைப்பாளர் பிரசாந்த் விஹாரியின் பின்னணி இசை படத்திற்கு ஒரு ஆன்மாவாக அமைந்திருக்கிறது.
குறிப்பாக, இடைவேளைக்குப் பிறகு கதையை நகர்த்தி செல்வதில் அதற்கு முக்கிய பங்கு இருக்கிறது.
ஒரு புதிய இயக்குநரின் படம் என்பதால் அதை அலட்சியமாக ஒதுக்காமல் படத்தில் கொஞ்ச நேரமாவது ஊன்றி கவனித்தால் நிச்சயமாக படம் உங்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுக்கும்.
ஒரு க்ரைம் த்ரில்லர் என்கிறபோது படம் பார்க்கும் ரசிகர்களும் அவர்களே கதைக்குள் இறங்கி சில விஷயங்களை கணக்கு போட்டு கண்டுபிடிப்பது போன்ற ஒரு சுவாரசியம் இந்த படத்தில் இருக்கிறது.
ஒரு முக்கிய காட்சிக்காக 17 வது மாடியில் இருந்து கயிறு கட்டி பத்தாவது மாடி வரை இறங்குவது போல படமாக்கினார்கள். அது மிகப்பெரிய சவாலாக இருந்தது. அந்த அளவுக்கவாது நாம் ரிஸ்க் எடுத்து தான் ஆகவேண்டும்.
என்னைத் தேடி ஒரு கதாபாத்திரம் வரும்போது இது ஈசியாக பண்ணி விடலாமே என்பது போல இருந்தால் அதில் என்ன சுவாரசியம் இருக்க முடியும் ? அதே சமயம் அதை என்னால் பண்ண முடியும் என்கிற கதாபாத்திரமாகவும்,  என்னால் முடியுமா? என்று ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்தால் அது சுவாரசியமாக இருக்கும். அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் இருக்கிறது.
தனி ஒருவன் படத்தில் அரவிந்த்சாமி செய்தது போல ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ரொம்ப நாளாக ஆசை.. இது தவிர நானும் சொந்தமாக சில ஸ்கிரிப்ட்டுகள் எழுதி வைத்திருக்கிறேன்.. அதை எல்லாம் எடுக்க வேண்டும் என்கிற ஆசையும் இருக்கிறது” என்று கூறினார் ராகவ்

Latest articles

ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம், TIFF 2026 திரைப்பட விழாவில் உலகளவில்...

பூஜை நிறைவு; படப்பிடிப்புக்கு தயார்… துருவ் விக்ரம் நடிக்கும் தமிழ் தெலுங்கு ஆக்சன் திரைப்படக் குழு பரபரப்பு!

துருவ் விக்ரமின் அடுத்த படமாக உருவாகிறது புதிய தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் திரைப்படம். இப்படத்தை தெலுங்கில் ‘ராட்சசன்’, ‘கில்லாடி’...

கௌதம் ராம் கார்த்திக்கின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘Bloody Politics’ படத்தின் டீசர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=mwdrLGGFT1I வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் கௌதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படமாக 'Bloody Politics' உருவாகியுள்ளது....

ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சசி, சேரன், சற்குணம், பாலசேகர் உள்ளிட்ட இயக்குநர்கள் திரண்டு வாழ்த்து… உற்சாகமாய் நடந்த தினந்தோறும் நாகராஜ் இயக்கிய ஆகாயம் படத்தின் இசை வெளியீட்டு விழா 

தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள ‘ஆகாயம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்கள்...

More like this

ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம், TIFF 2026 திரைப்பட விழாவில் உலகளவில்...

பூஜை நிறைவு; படப்பிடிப்புக்கு தயார்… துருவ் விக்ரம் நடிக்கும் தமிழ் தெலுங்கு ஆக்சன் திரைப்படக் குழு பரபரப்பு!

துருவ் விக்ரமின் அடுத்த படமாக உருவாகிறது புதிய தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் திரைப்படம். இப்படத்தை தெலுங்கில் ‘ராட்சசன்’, ‘கில்லாடி’...

கௌதம் ராம் கார்த்திக்கின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘Bloody Politics’ படத்தின் டீசர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=mwdrLGGFT1I வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் கௌதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படமாக 'Bloody Politics' உருவாகியுள்ளது....