HomeGeneralபூஜை நிறைவு; படப்பிடிப்புக்கு தயார்... துருவ் விக்ரம் நடிக்கும் தமிழ் தெலுங்கு ஆக்சன் திரைப்படக் குழு...

பூஜை நிறைவு; படப்பிடிப்புக்கு தயார்… துருவ் விக்ரம் நடிக்கும் தமிழ் தெலுங்கு ஆக்சன் திரைப்படக் குழு பரபரப்பு!

Published on

துருவ் விக்ரமின் அடுத்த படமாக உருவாகிறது புதிய தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் திரைப்படம். இப்படத்தை தெலுங்கில் ‘ராட்சசன்’, ‘கில்லாடி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரமேஷ் வர்மா இயக்குகிறார். இதன் மூலம் துருவ் விக்ரமும் ரமேஷ் வர்மாவும் முதல் முறையாக இணைகின்றனர்.

ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இப்படத்தில், உணர்வுப்பூர்வ அம்சங்கள், டிராமா மற்றும் வலுவான கதை சொல்லலும் இடம்பெறவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. துருவ் விக்ரம் இதுவரை நடித்த கதாபாத்திரங்களில் இருந்து மாறுபட்ட ஆக்‌ஷன் பின்னணியிலான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்திற்கான பூஜை மீபத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, துருவ் விக்ரமின் பிறந்தநாளான செப்டம்பர் 23-ம் தேதி படத்தின் தலைப்பு மற்றும் முழுமையான நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் துருவ் விக்ரமின் பிறந்தநாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களை மனதில் வைத்து பிரமாண்டமான ஆக்‌ஷன் படமாக உருவாக உள்ளது.
பென் ஜெயந்திலால் வழங்கும் இப்படத்தை, பென் ஸ்டுடியோஸ், ஸ்ரீ நீலாத்ரி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஆர்.வி. ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. கோனேரு சத்யநாராயணா மற்றும் சிரீஷா குரபதி ஆகியோர் தயாரிப்பாளர்களாக உள்ளனர்.

Latest articles

கௌதம் ராம் கார்த்திக்கின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘Bloody Politics’ படத்தின் டீசர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=mwdrLGGFT1I வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் கௌதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படமாக 'Bloody Politics' உருவாகியுள்ளது....

ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சசி, சேரன், சற்குணம், பாலசேகர் உள்ளிட்ட இயக்குநர்கள் திரண்டு வாழ்த்து… உற்சாகமாய் நடந்த தினந்தோறும் நாகராஜ் இயக்கிய ஆகாயம் படத்தின் இசை வெளியீட்டு விழா 

தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள ‘ஆகாயம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்கள்...

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘கல்லா நிக்கிறியே’ பாடல் வெளியானது!

https://www.youtube.com/watch?v=b-IJaMCIhm8 முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “கல்லா...

டிரெய்லர் இல்லாமல் படத்தை வெளியிடும் புதிய முயற்சி… செப்டம்பர் 24-இல் வெளியாகிறது நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்.’

நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'தி பாரடைஸ்' திரைப்படம் செப்டம்பர் 24-ஆம்...

More like this